BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

29 செப்., 2019

வாட்ஸ்ஆப் சத்தமில்லாமல் செய்த வேலை: சூப்பர் 5 பிரைவசி அப்டேட்கள் என்னவென்று தெரியுமா?

வாட்ஸ்ஆப் சத்தமில்லாமல் செய்த வேலை: சூப்பர் 5 பிரைவசி அப்டேட்கள் என்னவென்று தெரியுமா?


வாட்ஸ் ஆப் கடந்த சில மாதங்களில் பல புதிய அம்சங்களை தனது ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது வாட்ஸ் ஆப் பீட்டாவில் அப்டேட்டில் சில புதிய அம்சங்கள் பிரத்தியேகமாக அறிமுகம் செய்துள்ளது. இதில் சில சேவைகள் தற்பொழுது வாட்ஸ் ஆப் இல் களமிறங்கியுள்ளது. புதிய சேவைகள் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.

ஃபேஸ்புக் ஸ்டோரி இண்டெக்ரேஷன் (Facebook Story integration)
 ஃபேஸ்புக் ஸ்டோரி இண்டெக்ரேஷன் மூலம், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இல் பகிரப்படும் பதிவுகள் அனைத்தும் இனிமேல் வாட்ஸ் ஆப் இல் இருந்தபடியே ஃபேஸ்புக்கிலும் ஷேர் செய்து கொள்ள முடியும். இந்த சேவை தற்பொழுது களமிறக்கப்பட்டுளள்து. இதற்கான ஆப்ஷனை தற்பொழுது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பக்கத்தில் வாட்ஸ் ஆப் சேர்த்துள்ளது.

ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் (Fingerprint unlock)
 தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் சேவையின் மூலம், வாட்ஸ் ஆப் பயனர்கள் தங்களின் சாட்களை லாக் மற்றும் அன்லாக் செய்துகொள்ளல்லாம். ஐபோன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ் அன்லாக் மூலமாகவும் வாட்ஸ் ஆப்பை செயல்படுத்திக்கொள்ளலாம். ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் சேவை எனேபில் செய்திருந்தால், நோட்டிஃபிகேசன் மெசேஜ்கள் ஹைடு செய்யப்படும்.
ஃப்ரீக்குவெண்ட்லி ஃபார்வர்டேட் (Frequently forwarded) 
வாட்ஸ் ஆப் இன் இந்த புதிய ஃப்ரீக்குவெண்ட்லி ஃபார்வர்டேட் சேவை ஸ்பேம் செய்திகளை தடுக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அடிக்கடி அனுப்பப்படும் செய்திகள், முக்கியமாக ஸ்பேம் செய்திகளை ஐந்து முறைக்கு மேல் ஃபார்வேர்ட் செய்தால் Frequently forwarded என்ற டேக்குடன் மற்றவர்களுக்கு சென்று சேரும். அதற்கும் மேல் ஃபார்வர்டு செய்யப்பட்டால் ஸ்பேம் மெசேஜாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கான்ஸிக்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜ் (Consecutive voice message) 
இந்த புதிய சேவையின்படி பயனர்களை அனைத்து ஆடியோ மெசேஜ்களையும் தொடர்ச்சியாக கேட்க்கொள்ள முடியும். எனவே புதிய அப்டேட்டிற்கு பிறகு நீங்கள் ஒவ்வொரு மெசேஜ்ஜையும் ப்ளே செய்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த சேவை தற்பொழுது நடைமுறையில் உள்ளது.

குரூப் இன்விடேஷன் (Group invitation) குரூப் இன்விடேஷன்
சேவையின்படி உங்கள் விருப்பம் இல்லாமல், உங்களை யாராலும் வாட்ஸ் ஆப் குரூப்பில் சேர்க்க இயலாது. இதற்கான செட்டிங்க்ஸ் இல் Nobody தேர்வு செய்தால், யாரும் உங்களை எந்த குரூப்பிலும் சேர்க்க இயலாது. இந்த சேவை மூன்று நாட்களில் காலாவதி ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. My Contacts செலக்ட் செய்தால், உங்கள் காண்டாக்ட்டில் இருக்கும் நபர்கள் மட்டும் உங்களை குரூப்பில் சேர்க்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக