BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

29 செப்., 2019

வாட்ஸ்அப் செயலியில் மற்றவர்களுக்கு புகைப்படங்களின் தரம் குறையாமல் பகிர்ந்து கொள்வது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் மற்றவர்களுக்கு புகைப்படங்களின் தரம் குறையாமல் பகிர்ந்து கொள்வது எப்படி?


புகைப்படங்களை எவ்வித மூன்றாம் தரப்பு சேவைகளையும் பயன்படுத்தாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள சமீப காலங்களில் பல்வேறு பயனுள்ள சேவைகள் கிடைக்கின்றன.


யூசர் இன்டர்ஃபேஸ் வாட்ஸ்அப் செயலியிலேயை இதனை மிக எளிமையாக செய்துவிட முடியும். குறுந்தகவல் அனுப்ப அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. இதன் யூசர் இன்டர்ஃபேஸ் மூலம் அதிக பிரபலமாகி இருக்கிறது. எதுவாயினும் வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது, அவற்றின் தரம் குறைவது வாடிக்கையான விஷயமாக இருக்கிறது. ஃபைல் கம்ப்ரெஸ் ஆவதை தடுக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. புகைப்படத்தின் பெயரை மாற்றுவது.

வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை கம்ப்ரெஸ் செய்யாமல் மற்றவர்களுக்கு அனுப்ப எளிய வழிமுறை இருக்கிறது. அதனை தொடர்ந்து பார்ப்போம்.

வழிமுறை 1: முதலில் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படம் இருக்கும் ஃபோல்டரை அறிந்து கொள்ள வேண்டும். வழிமுறை

 2: நீங்கள் அனுப்ப வேண்டிய ஃபைலை தேர்வு செய்யவும். வழிமுறை 

3: இனி பெயர் மாற்றக் கோரும் ரீனேம் ஆப்ஷனை க்ளிக் செய்யவும். வழிமுறை 

4: புகைப்படத்தை .doc என்று நிறைவுறும் வகையில் மாற்ற வேண்டும். உதாரணத்திற்கு Portrait.doc என மாற்றலாம். வழிமுறை

 5: பெயர் மாற்றியதும் புகைப்படத்தை அனுப்பலாம். நண்பருக்கு அதனை அனுப்பியதும், அவரிடம் ஃபைல் பெயரை மீண்டும் மாற்றக் கோர வேண்டும். இம்முறை புகைப்படத்தின் பெயர் .jpg என முடியும் படி மாற்றவும்.



பல்வேறு புகைப்படங்களை சிப் ஃபைலாக கம்ப்ரெஸ் செய்வதற்கான வழிமுறைகள்: வழிமுறை 1: முதலில் ஃபைல் மேனேஜர் சென்று அனுப்ப வேண்டிய புகைப்படங்களை தேர்வு செய்ய வேண்டும். வழிமுறை 2: இனி மூன்று புள்ளிகள் இருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்து கம்ப்ரெஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். வழிமுறை 3: அடுத்து கம்ப்ரெஸ் ஆகும் ஃபைல் எங்கு சேமிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்து, அதனை தேர்வு செய்ய வேண்டும். வழிமுறை 4: இனி கம்ப்ரெஸ் செய்யப்பட்ட ஃபைலினை அனுப்பி, நண்பரிடம் அதனை டி-கம்ப்ரெஸ் செய்ய சொல்ல வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக