BREAKING NEWS

கணினி அறிவியலை பிரதான பாடமாக (Major Subject) எடுத்து படித்து B.Ed., பட்டம் பெற்றவர்களை பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் என்ற வகையில் பணி நியமனம் செய்ய வழிவகை செய்திடல் வேண்டும். |B.Ed., பட்டம் அடிப்படை தகுதியாகக் கொண்ட ஆசிரியர் தேர்வுகளான TET, AEEO, DEO அனைத்திற்கும் கணினி அறிவியலில் பி.எட்., படித்தவர்களை இந்த தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். |

18 நவ., 2018

இவ்வாறு செய்தால் உங்கள் வாட்ஸ்ஆப்-க்கு ஆப்புதான்!! அதிரடி எச்சரிக்கை!

இவ்வாறு செய்தால் உங்கள் வாட்ஸ்ஆப்-க்கு ஆப்புதான்!! அதிரடி எச்சரிக்கை!
நம்மிடையே சமூக வலைத்தளங்கள் என்பது வாழ்வின் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும் பேஷ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை பிரபல நிறுவனங்களாக உள்ளது.

நாளுக்கு நாள் பேஷ்புக், வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. சமூக வலைத்தளங்கள் என்பது நற்காரியங்களை செய்வதில் முக்கிய பங்கு வகித்தாலும் தீமையும் துணையாக இருப்பது தவிர்க்க முடியாத செயலாக உள்ளது.
இந்நிலையில் வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் சில விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் நீங்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது.
1. ஆபாசமிகுந்த, தீங்கு ஏற்படுத்தும் மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பக்கூடாது.
2. மனதை பாதிக்கச் செய்யும் தகவல்கள், வன்முறை குற்றங்கள், அச்சுறுத்தும் விதமான பேச்சுக்கள் அடங்கிய செய்திகளை பரப்பக்கூடாது.
3. மற்றவர் பெயரில் பொய் கணக்கு தொடங்கி, உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பக்கூடாது.

4. வாட்ஸ்ஆப் செயலிக்கு என உருவாக்கப்பட்டுள்ள ப்ரோகிரேமில் மாற்றத்தை ஏற்படுத்துவது செயலில் ஈடுபட்டால் அந்நிறுவனம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
5. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, மால்வார் போன்ற கேஜெட்டுகளை அழித்துவிடும் வைரஸுகளை பரப்புவதும் கூடாது.
6. பயனர்கள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் ஒரு சர்வரில் சென்று சேரும். அதை ஹேக் செய்யவோ அல்லது உளவு பார்த்தாலோ, வாட்ஸ்ஆப் உங்களை தடை செய்யலாம்.
7. ப்ளே ஸ்டோரில் உள்ள வாட்ஸ்ஆப் பிளஸ் என்ற செயலியை பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் அது வாட்ஸ்ஆப் செயலியே அல்ல.
8.பல நபர்கள் உங்களை பிளாக் செய்து வந்தால், தானாகவே உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கு அழிந்து விடும்.
இவ்வாறு வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

1 அக்., 2018

Facebook News Feed ல் நீங்கள் விரும்புவதை மட்டும் பார்க்க இதை செய்யுங்கள்.!

Facebook News Feed ல் நீங்கள் விரும்புவதை மட்டும் பார்க்க இதை செய்யுங்கள்.!

ஃபேஸ்புக், துவங்கப்படும் போது
அதிர்வலைகளை ஏற்படுத்தியது, வளரும் போது தொடர்ந்து பிரபலமாக இருக்கிறது. பதினான்கு ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து ஃபேஸ்புக் அதிர்வலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
பயணத்தின் போது சற்று ஓய்வு எடுக்க நினைத்தால் ஃபேஸ்புக் சென்று நேரத்தை கழிக்கலாம். சில சமயம் ஃபேஸ்புக் செல்லும் போது நியூஸ் ஃபீடில் உங்களுக்கு விருப்பமில்லாத விவரங்கள் உங்களது மன அமைதியை சோதிக்கும் வகையில் இருக்கும். நியூஸ் ஃபீடில் வரும் போஸ்ட்களை கணிக்கவே முடியாது.
நியூஸ் ஃபீடில்
நியூஸ் ஃபீடில் வரும் போஸ்ட்கள் சில சமயம் பிடிக்கும், சில சமயங்களில் பிடிக்காமல் போகலாம், இதற்கு ஃபேஸ்புக் பயன்படுத்தும் வித்தியாச அல்காரிதம்களே முக்கிய காரணம் ஆகும்.
உங்களை எந்நேரமும் மகிழ்ச்சியாக வைத்திருக்க ஃபேஸ்புக் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உங்களுக்கு வரும் போஸ்ட்களின் முக்கியத்துவம் இவ்வாறு தான் கணக்கிடப்படுகிறது.
உங்களது நண்பர்
1) உங்களது நண்பர்களின் போஸ்ட் வாயிலாக உங்களது மற்ற நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உரையாடும் போது
2) உங்களது நண்பரின் போஸ்ட்டில் மற்ற நண்பர்கள் கமென்ட் செய்திருந்தால்
3) உங்களது நண்பர் பகிர்ந்து இருக்கும் செய்தி குறிப்பு அல்லது
உங்களது நண்பர் பகிர்ந்து கொள்ளும் அனைத்து போஸ்ட்களும் உங்களது ஃபீடில் தோன்றுவதற்கான முக்கியத்துவத்தை பெறுகின்றன. இவற்றை மாற்ற நீங்கள் செய்யக் கூடிய சில அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்:
குரூப்கள்:
உங்களது மெனு பாரில் உள்ள டிராப்-டவுன் சென்று மேனேஜ் குரூப்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இனி குரூப்ஸ் ஆப்ஷனில் நீங்கள் சில ஆண்டுகளில் சேர்ந்து இருக்கும் குரூப்களை பார்க்கவும். இதில் சர்ச்சைக்குரிய அல்லது அரசியல் குரூப்கள் உங்களுக்கு விருப்பமற்றதாக தெரிந்தால், பின் கியர் ஐகானை கிளிக் செய்து லீவ் குரூப் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பேஜஸ்
அடுத்த நீங்கள் லைக் செய்திருக்கும் ஃபேஸ்புக் பக்கங்களை பார்க்க வேண்டும். இதற்கு ஃபேஸ்புக் ஹோம் பக்கம் சென்று, பேஜஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் இடது புறத்தில் உள்ள நேவிகேஷன் மெனு சென்று லைக்டு பேஜஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
இனி முந்தை வழிமுறையை போன்றே பின்பற்ற வேண்டும். பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். இங்கு நீங்கள் லைக் செய்த அனைத்து பக்கங்களையும் பார்க்க முடியும். இதில் உங்களது ஃபீட் போஸ்ட்களை மாற்றிக் கொள்ளலாம். இங்கு உங்களது விருப்பத்திற்கு ஏற்ப பக்கங்களை லைக் மற்றும் ஃபாலோ ஆப்ஷன்களை பார்க்கலாம். இதில் நீங்கள் விரும்பாத பக்கங்களை அன்லைக் செய்யலாம்.
நியூஸ்ஃபீட்
குரூப்கள் மற்றும் பேஜஸ் ஆப்ஷனை ஆய்வு செய்ததும், நியூஸ் ஃபீட் சென்று உங்களுக்கு விருப்பமில்லாத அம்சங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். உங்களுக்கு விருப்பமில்லாத போஸ்ட்களை கண்டறிந்தால், போஸ்ட்களில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து ஹைடு போஸ்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

1 லட்சம் ஆசிரியர்கள் 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

 1 லட்சம் ஆசிரியர்கள் 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்


ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் நவம்பர்  27ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடக்கும்
முன்னதாக 1 லட்சம் ஆசிரியர்கள், வரும் 4ம் தேதி தற்செயல்  விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள்  என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறியதாவது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராடி வருகின்றனர்  குறிப்பாக அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் அரசுப் பள்ளிகளை மூடக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டது
மேற்கண்ட கோரிக்கைகள் மீது தொடர் போராட்டங்கள்  நடத்தி வருகிறோம். ஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை இதுவரை அரசு அழைத்துப் பேசவில்லை  எனவே வரும் 4ம் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளோம். இந்நிலையில் அரசு அழைத்துப் பேசாமல், ஊதியம் நிறுத்தப்படும் என்று அச்சுறுத்துகிறது.
இருப்பினும் திட்டமிட்டபடி  போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் மேலும் 13ம் தேதி சேலத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். நவம்பர் மாதம் 27ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும். அரசு அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற  வேண்டும்.

மாணவர் சேர்க்கை குறைந்தால் மத்திய அரசின் நிதி நிறுத்தம்:Samagra Shiksha 3003 பள்ளிகளுக்கு திடீர் நிறுத்தம்..

மாணவர் சேர்க்கை குறைந்தால் மத்திய அரசின் நிதி நிறுத்தம்:Samagra Shiksha 3003 பள்ளிகளுக்கு திடீர் நிறுத்தம்..


சமக்ரா சிக்‌ஷா அபியான்’ திட்டம் :3,000 அரசு பள்ளிகளுக்கு மானியம் திடீர் நிறுத்தம்: 15 மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூட திட்டம்.

சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்தில் கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் செயல்பட்டு வருகின்ற 15  மாணவர்களுக்கும் குறைவான  எண்ணிக்கையில் உள்ள 3 ஆயிரம் பள்ளிகளுக்கு அரசின் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளி மானியமும், அரசு பள்ளிகளுக்கு பராமரிப்பு  மானியமும் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது 2018-19ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ்  (சமக்ரா சிக்‌ஷா அபியான்) அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கு ஏற்றவாறு தேவையான வசதிகளை மேம்படுத்த  ஒருங்கிணைந்த பள்ளி மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

2018-19ம் ஆண்டு வரைவு திட்ட ஒப்புதலில் தமிழகத்தில் 31 ஆயிரத்து 266 அரசு ெதாடக்க பள்ளிகள் மற்றும் அரசு நடுநிலை பள்ளிகளுக்கு ₹97 கோடியே 18  லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஆனால் ஆண்டு வரைவு திட்ட ஒப்புதலில் 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே  இந்த மானியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல்கட்டமாக 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள 28 ஆயிரத்து 263 அரசு தொடக்க  மற்றும் மாவட்ட நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் ₹89.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டிருக்கும் அரசு, ஊராட்சி, நகராட்சி, ஆதி திராவிடர், கள்ளர் சீரமைப்பு, வனத்துறை, சமூக  நலத்துறையின் கீழ் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மட்டுமே மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் இந்த மானியம் வழங்கப்பட வேண்டும்.

நிதி ஒதுக்கீடு தொகைக்கு கூடுதலாக எந்த காரணத்தை கொண்டும் ஒருங்கிணைந்த பள்ளி மானியம் வழங்கக்கூடாது என்று சமக்ரா சிக்‌ஷா அபியானின் மாநில  திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். மேலும் விடுவிக்கப்படுகின்ற பள்ளி மானிய  தொகையில் 10 சதவீதம் ஸ்வச்சா திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் 15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான அறிவுரைகள் சுற்றறிக்கையில்  தெரிவிக்கப்பட வில்லை

தமிழகத்தில் 3003 பள்ளிகள் 15 மாணவர்களின் எண்ணிக்கைக்கு குறைவாக உள்ளவை என்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் இந்த பள்ளிகளுக்கு மூடு விழா நடத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது

தமிழக அரசு ஏற்கனவே 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்  தற்போது 15 மாணவர்களுக்கும் குறைவாக மாணவர்கள் எண்ணிக்கையுடன் செயல்படுகின்ற பள்ளிகளை அருகே உள்ள நடுநிலை, உயர்நிலை  பள்ளிகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாலேயே ஒருங்கிணைந்த பள்ளி மானியம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள்  குற்றம்சாட்டுகின்றனர்
இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் அரசு பள்ளிகள் இல்லாத நிலை ஏற்படும்

தமிழக அரசு பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை:

தமிழகத்தில் 2018-19ம் கல்வியாண்டு கணக்கின்படி 31,266 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன

15 முதல் 100 மாணவர்கள் வரை எண்ணிக்கையில் 21 ஆயிரத்து 378 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன
101 முதல் 250 மாணவர்கள் வரை எண்ணிக்கையுடன் 6167 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது 251 முதல் 1000 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகள் 714 ஆகும்.ஆயிரம் மாணவர்களுக்கு மேல் 4 பள்ளிகள் மட்டுமே உள்ளன 3003 பள்ளிகளில் 15க்கும் குறைவான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்