BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

18 ஜூன், 2018

ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும்: பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவு


ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும்: பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவு

பல்கலைக் கழகங்கள் ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முதல் பட்டமளிப்பு விழாவை நடத்தி 46 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த ஆண்டு இரண்டாவது விழாவை நடத்தியது.  இதேபோல் மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மே மாதத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்தியது. இதேபோல் திரிபுரா மத்திய பல்கலைக்கழகம் 4 ஆண்டுகளுக்கு பின்னர் பட்டமளிப்பு விழாவை இந்த ஆண்டு நடத்தியது. இதில் கடந்த 4 ஆண்டுகளில் பட்டம் பெற்ற அனைவருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித வளத்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறியதாவது, “ சில பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் நிதி பிரச்னை மற்றும் நேரமின்மை காரணமாக பட்டமளிப்பு விழாவை நடத்துவது கிடையாது. இனி தவறாமல் ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழாக்களை நடத்த வேண்டும். இந்த விழா மாணவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக