BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

19 ஜூன், 2018

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் அறிமுகம்

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் அறிமுகம்
உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த, அபார சாதுர்யத்துடன் செயல்படக் கூடிய சூப்பர் கம்ப்யூட்டர்' எனப்படும் அதிவேகக் கணினியை அமெரிக்க விஞ்ஞனிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அந்த நாட்டின் எரிசக்தித் துறையைச் சேர்ந்த ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வக'த்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கணினி, நொடிக்கு 2 லட்சம் டிரில்லியன் (ஒரு டிரில்லியன் = ஒரு லட்சம் கோடி) கணக்கீடுகளை செய்ய வல்லது ஆகும். இதுவரை ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்கவம் உருவாக்கிய அதிசக்தி வாய்ந்த டைட்டன்' கணினியைவிட இது 8 மடங்கு அதிக வேகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்மிட்' என்று பெயரிடப்பட்டுள்ள அதிவேகக் கணினியின் மூலம் எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு துறைகளில் இதுவரைt இல்லாத அதீத ஆற்றலுடன் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

18 ஜூன், 2018

ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும்: பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவு


ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும்: பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவு

பல்கலைக் கழகங்கள் ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முதல் பட்டமளிப்பு விழாவை நடத்தி 46 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த ஆண்டு இரண்டாவது விழாவை நடத்தியது.  இதேபோல் மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மே மாதத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்தியது. இதேபோல் திரிபுரா மத்திய பல்கலைக்கழகம் 4 ஆண்டுகளுக்கு பின்னர் பட்டமளிப்பு விழாவை இந்த ஆண்டு நடத்தியது. இதில் கடந்த 4 ஆண்டுகளில் பட்டம் பெற்ற அனைவருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித வளத்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறியதாவது, “ சில பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் நிதி பிரச்னை மற்றும் நேரமின்மை காரணமாக பட்டமளிப்பு விழாவை நடத்துவது கிடையாது. இனி தவறாமல் ஆண்டுதோறும் பட்டமளிப்பு விழாக்களை நடத்த வேண்டும். இந்த விழா மாணவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.

பிஎட் படிப்புக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம்

பிஎட் படிப்புக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள், திருவல்லிக்கேணி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள 2 கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்களில் பயிற்றுவிக் கப்படும் பிஎட் இடங்கள், ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூல மாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 21 - 30 வரை (சனி, ஞாயிறு உட்பட) வழங்கப்படும். விண்ணப்பங்கள் சென்னையில் மேற்கூறிய நிறுவனங்களிலும், குமாரபாளையம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, கோவை, வேலூர் அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், திண்டுக்கல் காந்திகிராமம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் பேர்லாண்ட்ஸ் ஸ்ரீசாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வஉசி கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி, திருவட்டாறு ஆத்தூர் என்.வி.கே.எஸ்.டி. கல்லூரி ஆகிய இடங்களில் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3-ம் தேதி மாலை 5 மணிக்குள், "தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலர், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600 005" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியை சாந்தி கூறியுள்ளார்.

நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு அழைப்பு 30-ந் தேதி கடைசி நாள்

நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு அழைப்பு 30-ந் தேதி கடைசி நாள்

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை 2017-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் www.nationalawardtoteachers.com என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மனிதவள மேம்பாட்டு துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வருகிற 30-ந் தேதிக்குள் (சனிக்கிழமை) ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவல் பள்ளி கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது

முதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது

முதல் முதலாக ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது | என்ஜினீயரிங் கலந்தாய்வு அடுத்த(ஜூலை) மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் முதன் முதலாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3-ந்தேதி முதல் கடந்த 2-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். ரேண்டம் எண் வெளியீடு விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் நம்பர் வெளியீடு வழங்கப்பட்டது. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். சான்றிதழ் சரிபார்த்தல் 42 மையங்களில் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற்றது. அண்ணாபல்கலைக்கழகத்தில் மட்டும் 17-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சமர்ப்பித்த அனைத்து சான்றுகளும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. 7-ந்தேதி கலந்தாய்வு இந்த மாதம் 4-வது வாரத்திற்குள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். மருத்துவ கலந்தாய்வு நடந்த பின்னர் தான் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும். என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு இடங்கள் மற்றும் கல்லூரியை தேர்ந்து எடுக்க வாய்ப்பு அளிக்கப்படும். பின்னர் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கலந்தாய்வு உத்தேசமாக அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. நேரடி கலந்தாய்வு தொழில்கல்வி மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு அண்ணாபல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் நடந்தது போல நேரடியாக நடைபெற உள்ளது.