BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

24 மார்., 2018

இந்த வருட கல்வி மானிய கோரிக்கையில் "கணினி கல்வி" மீதான விவாதம் நடைபெறுமா என மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்ப்பு..!!

இந்த வருட கல்வி மானிய கோரிக்கையில் "கணினி கல்வி" மீதான விவாதம் நடைபெறுமா என மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்ப்பு..!!

பி.எட்., கணினி ஆசிரியர்கள் கல்வி மானியக் கோரிக்கை எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால், தமிழக அரசு கல்வி மானிய கோரிக்கை நடைபெறும் தேதியை இன்னும் வெளியிடாமல் இருக்கிறது.

பட்ஜெட் மீதான கூட்டத்தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறதா? இல்லை இனிமேல் தான் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதா? எனவும் கணினிக்கல்வி மீதான விவாதம் இந்த பட்ஜெட்டில் நடைபெறுமா? என்ற கேள்விக்குறியில் மாணவர்களும், ஆசிரியர்களும் உள்ளார்கள்.

தமிழகத்தின் பி.எட்., கணினி ஆசிரியர்கள் அனைவரும் இந்த ஆண்டு கல்வி மானிய கோரிக்கையிலாவது தங்களுடைய கோரிக்கை இடம் பெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை "கணினி அறிவியல்" பாடத்தை துணைப்பாடமாக அறிவித்துள்ளீர்கள். ஆனால், கணினி ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்காமல், அறிவியல் ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி கொடுப்பது வேதனைக்குரிய செயலாக உள்ளது.

உதாரணமாக, இந்த வாரம் வெளிவந்த பத்திரிகை செய்தியில் நம்முடைய உயர்கல்வி துறை செயலாளர் கூறியது வேடிக்கைக்கு உரியதாக உள்ளது.

"ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள்" என இதுபோன்று அவர் வெளிப்படையாகக் கூறியது மாணவர்கள் மத்தியில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.


இனிவரும் காலங்களிலாவது ஒரு முறையான பயிற்சியை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்.

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10 வகுப்பு வரை "கணினி அறிவியல்" பாடத்தை ஒரு தனிப்பாடமாகக் கொண்டு வந்து, முறையான கணினி ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும்.

இவண் :-
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்
பதிவு எண் ® 655/2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக