BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

26 செப்., 2019

பி.எட்., மாணவர் சேர்க்கை

பி.எட்., மாணவர் சேர்க்கை 

*🌀🌀பி.எட்., மாணவர் சேர்க்கை ஆசிரியர் பல்கலை,
அட்வைஸ்*

*♦♦மாணவர் சேர்க்கையை, வரும், 30ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளும்படி, பி.எட்., கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் பல்கலை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில் உள்ள, 700க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு பி.எட்., படிப்புக்கான, மாணவர் சேர்க்கை, ஜூலை முதல் நடந்து வருகிறது*

*♦♦மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்ததாலும், சில பல்கலைகளின் தேர்வு முடிவுகள் வர தாமதமானதாலும், செப்டம்பர் வரை மாணவர்களை சேர்க்க சலுகை அளிக்கப்பட்டது*

 *♦♦இதன்படி, வரும், 30ம் தேதிக்குள், மாணவர் சேர்க்கையை முடித்து, பட்டியலை பல்கலையில் தாக்கல் செய்யும்படி, கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர், பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். சேர்க்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள், கல்லுாரி வாரியாக, அடுத்த மாதம், 8ம் தேதி முதல் சரிபார்க்கப்பட உள்ளன*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக