நாடகம் தொடங்கும் வேளைதான்!
5 32 5 500 எண்களை போட்டு காலையில் ஒரு போஸ்டரை பதிவிட்டு மாலை வரை காத்திருங்கள் என்றேன். என்னமோ ஏதோ என்று பலரும் பதறியடித்து இன்பாக்ஸிலும் வாட்ஸ் அப்பிலும் தொலைபேசியிலும் விசாரித்தார்கள். இன்னும் பலர் அதை எடுத்துப் போட்டு ஊர் முழுக்க பீதியை கிளப்பி விட்டுவிட்டார்கள்.
எல்லாம் உங்களின் கவனக் குவிப்பை கேட்டு பெறுவதற்காகத்தான். இப்போது ஆங்காங்கே ஆறு மணிக்கு முகநூலில் குத்தவைத்து உட்கார்ந்திருக்கும் சொந்த பந்தங்கள் எல்லாம் கையெடுத்து கும்பிட்டு சஸ்பென்ஸை உடைக்கிறேன்.
மீதியை போஸ்டரில் பார்த்து தெரிந்து கொள்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக