BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

10 செப்., 2019

8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள்…விண்ணப்பிக்க அழைப்பு


 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள்…விண்ணப்பிக்க அழைப்பு


நாடு முழுவதும் மொத்தம் 137 ராணுவ பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் தற்போது 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

 முதுநிலை பட்டப்படிப்பு, பி.எட் படித்தவர்கள் அந்தந்த துறை சார்ந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றவர்கள் அதிகபட்சமாக 57 வயதுக்குள் இருக்க வேண்டும். பிரைமரி வகுப்புகளுக்கு 36 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

PGT: முதுநிலை ஆசிரியர் பணிக்கு முதுநிலைப் பட்டப்படிப்பிலும், பி.எட் படிப்பிலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள்.

TRT: இடைநிலை ஆசிரியர் பணிக்கு பட்டப்படிப்பிலும், பி.எட் படிப்பிலும் 50 சதவீத மதிப்பெண்.

PRT: பிரைமரி ஆசிரியர் பணிக்கு பட்டப்படிப்பு, ஆசிரியர் கல்வியில் பட்டயப்படிப்புகளில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 செப்டம்பர் 2019.

தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் தேதி: 4 அக்டோபர் 2019.

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 19-20 அக்டோபர் 2019.

தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் : 30 அக்டோபர் 2019.

http://aps-csb.in என்ற இணையளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ரூபாய். தமிழகத்தில், சென்னை, கோவை ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

முழு விபரங்களுக்கு ராணுவ பள்ளியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்: http://aps-csb.in/Candidate/GeneralInstructions.aspx

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக