BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

5 செப்., 2019

#தமுஎகச_இலக்கிய_விருதுகள்_2018


2018ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருது முடிவுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவ்வமைப்பின் மாநிலத்தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி, பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் நூல்கள், குறும்படம், ஆவணப்படம் ஆகியவற்றுக்கான விருதுகளையும், நாட்டுப்புறக்கலை, நாடகம், இசை, பெண் படைப்பு ஆகியவற்றில் மதிக்கத்தக்க பங்காற்றிய ஆளுமைகளுக்கான விருதுகளையும் எமது அமைப்பின் சார்பில் வழங்கிவருகின்றோம். அதன்படி 2018ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்குரிய பட்டியலை அறிவித்துள்ளோம். விருதுக்குத் தேர்வான அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள். 2019 அக்டோபர் 12ஆம் தேதி திருவாரூரில் நூல்களுக்கான ஆய்வரங்கும் விருதளிப்பு விழாவும் நடைபெறும்.
விருது பெறுவோர் விவரம் வருமாறு:
கவிதை: வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது
நூல்: அம்பட்டன் கலயம்,
நூலாசிரியர்: பச்சோந்தி,
வெளியீடு: வம்சி புக்ஸ்
சிறுகதை: அகிலா சேதுராமன் நினைவு விருது
நூல்: கனா திறமுரைத்த காதைகள் ,
நூலாசிரியர்: சித்ரன்,
வெளியீடு: யாவரும் பதிப்பகம்
நாவல்: கே. பாலச்சந்தர் நினைவு விருது
நூல்: அற்றவைகளால் நிரம்பியவள்,
நூலாசிரியர்: பிரியா விஜயராகவன்,
வெளியீடு: கொம்பு பதிப்பகம்
விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு :
சு சமுத்திரம் நினைவு விருது
நூல்: சுளுந்தீ ,
நூலாசிரியர்: முத்துநாகு,
வெளியீடு: ஆதி பதிப்பகம்
தொன்மைசார் நூல் : கே. முத்தையா நினைவு விருது
நூல்: காலனி ஆட்சியில் நலவாழ்வும் நம்வாழ்வும்,
நூலாசிரியர்: மரு.சு.நரேந்திரன்,
வெளியீடு:என்.சி.பி.ஹெச்
மொழிபெயர்ப்பு: வ.சுப. மாணிக்கனார் நினைவு விருது
நூல்: மஹத்: முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்,
நூலாசிரியர்: ஆனந்த் டெல்டும்ப்டே,
மொழிபெயர்ப்பாளர்: கமலாலயன்,
வெளியீடு: என்.சி.பி.ஹெச்
கலை இலக்கிய விமர்சனம்:
இரா. நாகசுந்தரம் நினைவு விருது
நூல்: எங்கே இருக்கிறாய் கேத்தரின்,
நூலாசிரியர் : மானசீகன்,
வெளியீடு: தமிழினி
மொழி வளர்ச்சி விருது:
தமுஎகச வழங்கும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது
நூல்: மரபணு என்னும் மாயக்கண்ணாடி,
நூலாசிரியர்: முனைவர் இரா. சர்மிளா,
வெளியீடு : காவ்யா
சிறுவர் இலக்கியம்:
தமுஎகச வழங்கும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது
நூல்: புலி கிலி,
நூலாசிரியர்: நீதிமணி,
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
முனைவர் த. பரசுராமன் நினைவு
நாடகச்சுடர் விருது
பெறுபவர்: எஸ்.பி. சீனிவாசன்,
நாடகவியலாளர்
மு.சி. கருப்பையா பாரதி- ஆனந்த சரஸ்வதி
நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது
மணிமாறன் மகிழினி,
பறை இசைக் கலைஞர்,
புத்தர் கலைக்குழு
திருவுடையான் நினைவு
இசைச்சுடர் விருது:
கொல்லங்குடி கருப்பாயி,
கிராமிய இசை பாடகர்
மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு
பெண் படைப்பாளுமை விருது:
கலை இலக்கியா
குறும்படம் : பா.இராமச்சந்திரன் நினைவு விருது
படம்: சவடால்,
இயக்குநர்: நரேஷ்
ஆவணப்படம்:
போடி என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது
படம்: நீர்க்குடம்,
இயக்குநர்: தவமுதல்வன்
வாழ்த்துகளுடன்,
சு.வெங்கடேசன், எம்.பி,
மாநிலத்தலைவர்
ஆதவன் தீட்சண்யா,
பொதுச்செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக