BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

14 ஆக., 2019

ஆசிரிய இனமே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!!

ஆசிரிய இனமே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!!


மாணவர்கள் இல்லை என்று 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட்ட செய்தியை பொதுமக்கள் பத்தோடு பதினொன்றாக கடந்து சென்றால் தவறில்லை. ஆனால் நாமும் அவ்வாறு கடந்து செல்வது நியாயமா?
இந்த பள்ளிகள் மூடப்படுவதை தடுத்திட நாம் செய்தது என்ன? அப்பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் கூட இதனை தடுக்க தவறி விட்டதாகவே தெரிகிறது. மூடப்படும் பள்ளிகளின் அருகில் பணிபுரியும் ஆசிரியர்கள் பத்துப்பேர் ஒன்றிணைந்து ஊர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே! ஏன் இதனை செய்ய மறந்தோம். ஊதியத்தை உயர்த்த மட்டுமே போராட்டம்
செய்யும் ஆசிரியர்கள் என்ற கெட்ட பெயரை இதன் மூலம் சரி செய்யலாம். பத்து ஆசிரியர்கள் இதற்காக ஒன்றிணைய முடியாதா? பள்ளிகளை மூடாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதையும் வைரல் ஆக்குங்கள். களத்தில் இறங்குவோம் அரசுப்பள்ளிகளைக்
காப்போம்.!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக