BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

4 ஆக., 2018

இலவச சைக்கிள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரம் சேகரிப்பு

இலவச சைக்கிள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரம் சேகரிப்பு

இலவச சைக்கிள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரம் சேகரிப்பு*


*🚲இலவச சைக்கிள் வழங்க பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளின் அறிக்கையை தலைமை ஆசிரியர்கள்
தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது*


 *🚲தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் எவ்வளவு மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள் என்ற விவரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த காலத்தில் வழங்கப்படும்*


 *🚲இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது*



*🚲அதற்கான பட்டியல் அனுப்பும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது*



*🚲இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது*


*🚲அதன்படி 2017-18ம் ஆண்டு மற்றும் 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகளின் தேவைப்பட்டியல் விவரங்கள் சேகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென தனியாக ஒரு படிவம் கொடுக்கப்பட்டுள்ளது*


 *🚲அதில் மாணவ, மாணவிகளின் விவரங்கள், பள்ளிகளின் பெயர்கள், எத்தனை சைக்கிள் தேவைப்படுகிறது போன்றவை நிரப்பி அனுப்ப வேண்டும். இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது*


 *🚲அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களில் இன்னும் ஓரிரு நாட்களில் தலைமை ஆசிரியர்கள் அந்த பட்டியலை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக