BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

16 ஆக., 2018

விருது

விருது


சிறுத்தையை விரட்டியடித்து மகளைக் காப்பாற்றிய பெண்: கல்பனா சாவ்லா' விருது பெற்றார்


கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறுத்தையை விரட்டி அடித்த வால்பாறையைச் சேர்ந்த ஐ.முத்துமாரிக்கு, கல்பனா சாவ்லா விருதை வழங்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தைப் புலியை விறகுக் கட்டையால் விரட்டி அடித்து தனது மகளை ஒற்றை ஆளாய் நின்று காப்பாற்றிய பெண் முத்துமாரிக்கு துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான விருது வழங்கப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கிய பல்வேறு விருதுகல் விவரம்:


கல்பனா சாவ்லா விருது:

 வால்பாறை வட்டம் பெரியகல்லாறைச் சேர்ந்த ஐ.முத்துமாரிக்கு, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. இவ்விருது ரூ.5 லட்சம் காசோலை, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம், சான்றிதழ் அடங்கியது.
முத்துமாரியின் மகள் சத்தியாவை அவரது வீட்டின் பின்புறம் சிறுத்தைப் புலி இழுத்துச் சென்றது. மகளின் அலறல் சப்தம் கேட்டு வந்த முத்துமாரி, விறகுக் கட்டையால் சிறுத்தைப் புலியை தனி ஆளாக அடித்து விரட்டினார். இதற்காக அவருக்கு விருதளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக