BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

30 ஜூலை, 2018

ஸ்மார்ட்போன்களில் AI Technology

ஸ்மார்ட்போன்களில் AI Technology

செயற்கை நுண்ணறிவு வசதிகள்
பொருந்திய ஸ்மார்ட்போன்களின் விற்பனை
மொத்த விற்பனையில் 50 விழுக்காடு அளவுக்கு இருக்கும் என்று தொழில் துறை ஆலோசனை அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு வசதிகளை ஸ்மார்ட்போன் மூலமாகப் பயன்படுத்துவது உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வெளியான ஸ்ட்ராடெஜி அனலைடிக்ஸ் ஆய்வில், ‘2018ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் விற்பனையாகும் மொத்த ஸ்மார்ட்போன்களில் 47.7 சதவிகிதம் அளவு போன்களில் செயற்கை நுண்ணறிவு வசதிகள் இருக்கும். 2023ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து சுமார் 90 விழுக்காடு அளவுக்குச் செயற்கை நுண்ணறிவு வசதிகள் பொருந்திய மொபைல் போன்கள் விற்பனையாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் சுமார் 36.6 விழுக்காடு அளவிலான செயற்கை நுண்ணறிவு வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனையாயின. இதில் கூகுள் நிறுவனம் சந்தையில் முதலிடம் பெற்றுள்ளது. ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவு வசதிகள் வழங்கியதில் கூகுள் நிறுவனம் 2017ஆம் ஆண்டில் 46.7 விழுக்காடு சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது. 40.1 விழுக்காடு சந்தைப் பங்குடன் ஆப்பிள் ஷிரி நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 51.3 விழுக்காடாகவும், 2023ஆம் ஆண்டில் 60.6 விழுக்காடாகவும் உயரும் எனவும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக