BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

29 மே, 2018

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...


பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக