BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

29 மே, 2018

பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு சிறப்பு கவுன்ட்டர்: சென்னை டிபிஐ வளாகத்தில் தொடக்கம்;

பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு சிறப்பு கவுன்ட்டர்: சென்னை டிபிஐ வளாகத்தில் தொடக்கம்;

*📚📚📚பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு சிறப்பு கவுன்ட்டர்: சென்னை டிபிஐ வளாகத்தில் தொடக்கம்; பிளஸ் 1 புத்தகங்கள் ஜூன் 2-வது வாரத்தில் கிடைக்கும் என தகவல்*
*📗பிளஸ் 2 பாடப்புத்தகங்களை விற்பனை செய்ய தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் சிறப்பு கவுன்டர் தொடங்கப் பட்டுள்ளது*
*📗அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக் கான பாடப்புத்தகங்கள் பள்ளி கள் திறக்கப்படும் நாளன்று (ஜூன் 1) அவர்களுக்கு வழங்குவதற்காக அந்தந்த மாவட்டங்களுக்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டுவிட்டன*
*📗தனியார் சுயநிதி பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலும், சென்னை டிபிஐ வளாகத்தில் பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டர் மற்றும் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத் தில் உள்ள சிறப்பு விற்பனை கவுன்ட்டரிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன*
*📗பிளஸ் 1 தவிர ஒன்று முதல் பிளஸ் 2 வரை மற்ற அனைத்து வகுப்புகளுக் கான பாடப் புத்கங்களையும் பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டரிலும், அதன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலும் மாணவ - மாணவிகள் வாங்கிக்கொள்ளலாம்*
*📗மேலும், பாடநூல் கழகத்தின் இணையதளத்தை (www.textbookcorp.in) பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவும் பதிவுசெய்து கூரியர் மூலமாக புத்தகங்களை வாங்கலாம். ஆன்லைன் மூலமாக ஒவ்வொரு மாணவரும் தங்கள் வகுப்புக்குரிய ஒரு செட் புத்தகத்தை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம்*
*📗ஒருவரே ஒன்றுக் கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள் வாங்கிவிடக்கூடும் என்பதால் மற்ற மாணவர்களுக்கு கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும், அதிக புத்தகங்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்கப்படும் வாய்ப்பைத் தடுக்கவும் இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித்தார்*
*📗ஒவ்வொரு புத்தகத்திலும் அச்சிடப்பட்டுள்ள விலையை விட கூடுதல் விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யும் விற்பனை மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்*
*📗இதற்கிடையே, டிபிஐ வளாகத் தில் பிளஸ் 2 மாணவர்களின் வசதிக்காக சிறப்பு கவுன்ட்டரை பாட நூல் கழகம் தொடங்கியிருக்கிறது*
*📗இந்த கவுன்ட்டர் டிபிஐ வளாகத்தில் உள்ள ஆவின் விற்பனையகத்துக்கு அருகில் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தை ஒட்டிய பகுதி) இயங்குகிறது. இங்கு பிளஸ் 2 பாடப்புத்கங்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன*
*📚📚பிளஸ் 1 புதிய புத்தகங்கள்*
*📗இந்த ஆண்டு 1,6,9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன*
*📗📗பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடப்புத்தகம் ஜூன் 2-வது வாரம் விற்பனைக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித் தார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக