BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

14 ஏப்., 2018

ரெடியா இருங்க! விரைவில் வரப்போகுது ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப்

ரெடியா இருங்க! விரைவில் வரப்போகுது ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப்

ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி ஃபீச்சர் போன்களை தொடர்ந்து 4ஜி சிம் வசதி கொண்ட லேப்டாப்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை தொடர்ந்துஸ்மார்ட்போன், ஃபீச்சர் போன் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வரும் ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் 4ஜி சிம் ஸ்லாட் கொண்ட லேப்டாப் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜியோ சேவைகள் துவங்கிய சில மாதங்களில்அந்நிறுவனம் பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் உள்ளிட்ட துறைகளில் கால்பதிக்க இருப்பதாக கூறப்பட்டது. பின் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளின் சோதனை தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியது. இதைத் தொடர்ந்து ஜியோ டிடிஹெச் சேவை சார்ந்ததகவல்களை மறுக்கும் வகையிலான தகவல்கள்வெளியாகின. இந்நிலையில் சத்தமில்லாமல் ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப்களை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. ஜியோ 4ஜி ஃபீச்சர்போன் போன்றே புதிய லேப்டாப்-இலும் 4ஜி சிம் கார்டு வேலை செய்யும் என கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து லேப்டாப்களை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்கள் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் பில்ட்-இன் செல்லுலார் கனெக்ஷன்ளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே குவால்காம் மற்றும் ரிலையன்ஸ்ஜியோ இணைந்து 4ஜி ஃபீச்சர்போனிற்கென பணியாற்றி வருகின்றன.
'ஏற்கனவே ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் எங்களின் சாதனத்தை எடுத்து கொண்டு, அதில் டேட்டா மற்றும் தகவல்களைவழங்கலாம்.' என குவால்காம் டெக்னாலஜீஸ்நிறுவன மூத்த தலைவர் மிக்யூல் நியூன்ஸ் தெரிவித்துள்ளார். இத்துடன் குவால்காம் சார்பில் ஸ்மார்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் சார்ந்து இயங்கும் லேப்டாப்களை உருவாக்கவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
சர்வதேச அளவில் குவால்காம் நிறுவனம் ஹெச்பி, அசுஸ் மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆல்வேஸ் கனெக்டெட் பிசி-க்களை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன. தற்சமயம் புதிய பிரிவில் ஆதரவு வழங்க 14 டெலிகாம் நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன.
இதில் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, லண்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிரபலமாக இயங்கி வரும் டெலிகாம் நிறுவனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.புதிய லேப்டாப் உருவாக்கப்பட்டு வருவது குறித்து ஜியோ சார்பில் இதுவரைஎவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக