BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

7 மார்., 2018

போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருமாவளவன் ஏற்பாடு


போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருமாவளவன் ஏற்பாடு



போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருமாவளவன் ஏற்பாடு | விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் 'திருமா பயிலகத்தின்' மூலம் அரசு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகளை கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்திவருகிறோம். இந்த பயிலகம் மூலம் பயிற்சி பெற்ற பலர் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். திறன்வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு இயங்கும் இந்த பயிலகத்தில் குருப்-2, ரெயில்வே தேர்வு, எஸ்.ஐ. மற்றும் பிளஸ்-2 வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர்கல்விக்கான மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 11-ந்தேதி காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக