BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

23 மார்., 2018

பொதுத் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது: அமைச்சர் செங்கோட்டையன்


நடைபெற்று வரும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில்,
மாணவர்களுக்கு அத்தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


சென்னை மயிலாப்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துப் பேசினார். அப்போது, குழந்தைகளுக்கு அங்கன்வாடிகளில் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி குழந்தைகள் 5 வயதுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளிலேயே படிப்பைத் தொடரும் வகையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக சில மாணவர்களும், எளிமையாக இருப்பதாக சில மாணவர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து, கல்வித்துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது. அகில இந்திய அளவில் பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர் இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக