BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

5 மார்., 2018

தமிழக அரசு பி.எட்., கணினி ஆசிரியர்களை 765 கணினி ஆசிரியர் பணியிடங்களிலேயே அடைத்து வைத்துள்ளது.._* 
தற்போது, தமிழகத்தில் 52,000 பேர் கணினி அறிவியலில் பி.எட்., முடித்துவிட்டு அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், 765 கணினி ஆசிரியர் பணியிடம் என்பது முதற்கட்டம் என்றாலும் மிகக்குறைவான அளவிலேயே அமைந்துள்ளது...
நம்மை திசைதிருப்புகிறார்களா??
2016-ஆம் ஆண்டிலேயே, மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் சுமார் 1,400 கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இருந்தன. அப்போது கணினி ஆசிரியர்கள் மத்தியில் இந்த 1,400 காலிப்பணியிடங்கள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால், சென்ற வருடம் அறிவிக்கப்பட்ட 765 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் இந்த செய்தியை (1,400) மறக்கடிக்கச் செய்துவிட்டது. 1,400 பணியிடங்களைப் பற்றி பேசி வந்தவர்கள் நாளடைவில் 765 பணியிடங்களைப் பற்றி மட்டுமே பேசினார்கள்.
அடுத்த, திருப்பமாக 6,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்களும், கணினி ஆசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள் என சென்ற வருடம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறினார்; மேலும், 40,000 கணினி ஆசிரியர்களுக்கும் அரசு வேலை வழங்கப்படும் என சென்ற வருடம் வேலூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.
இப்போது, *இந்த அறிவிப்புகள் எல்லாம் என்னவாயிற்று??* காற்றில் பறந்துவிட்டதா??
2015-ல் 40,000-ஆக இருந்த பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை 2018-ல் 52,000-ஆக அதிகரித்துள்ளது. மேலும், தற்போது தமிழகம் முழுவதும் பி.எட்., கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் பட்டதாரிகளை கணக்கில் கொண்டால் நம் எண்ணிக்கை இன்னும் உயரும்...
இப்படி, கணினி அறிவியல் பாடத்தின் மீதும், கணினி ஆசிரியர்களின் மீதும் மாயங்களையும், மர்மங்களையும் கட்டவிழ்த்து விடும் தமிழக அரசின் நிலைப்பாட்டை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். முதலில், 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை விட்டு வெளியேறுங்கள்; 6 முதல் 10 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் கொண்டுவரப்பட்டால் இங்கு பெரும்பாலோனோர்க்கு வேலை உறுதி.
அதற்கு, "கணினி அறிவியல்" பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவருவதே முதல் தீர்வு
நமது, சங்கம் இந்த 765 பணியிடங்களை மட்டுமே நம்பி செயல்படவில்லை; அனைவருக்கும் நிரந்தர அரசு வேலையை உருவாக்கித் தருவதே எங்கள் நோக்கம்.
அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடம் இல்லை... கணினி ஆசிரியர்கள் இல்லை... ICT திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு... உள்ளிட்ட உண்மைகளை இனி பொதுப் பிரச்சனையாக கொண்டு வருவதுதான் நமக்கு நிரந்தர தீர்வு தரும்...
இனி... Hard Work-ஐ விட Smart Work-குகள் தான் நமக்கு சிறந்த விடியலைத் தரும்... அனைவரும் தெளிவாக இருக்க வேண்டிய காலகட்டம் இது; கணினி அறிவியல், கணினி ஆசிரியர் குறித்த அரசின் அறிவிப்புகளை பரிசீலனை செய்யுங்கள்...
நமக்கான விடியலை நாம்தான் துவக்க வேண்டும்!!
ஒன்றுபடுவோம்!!
முயற்சி செய்வோம்!!
வேலைபெறுவோம்!!
 ```Regards,```
 *திரு. தே.அகிலன், M.Sc., M.Ed., M.Phil.,* 📱 *9585740001*
(மாநில செயலாளர்)
🚩 *_தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்_*
பதிவு எண் ® 655/2014.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக