BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

6 மார்., 2018

தமிழகம், புதுச்சேரியில் முதல்முறையாக பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம் 8 லட்சத்து 63 ஆயிரம் மாணவர்கள் எழுதுகிறார்கள்

தமிழகம், புதுச்சேரியில் முதல்முறையாக பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம் 8 லட்சத்து 63 ஆயிரம் மாணவர்கள் எழுதுகிறார்கள்



தமிழகம், புதுச்சேரியில் முதல்முறையாக பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம் 8 லட்சத்து 63 ஆயிரம் மாணவர்கள் எழுதுகிறார்கள் | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல்முறையாக நடைபெறும் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இத்தேர்வை 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 மாணவ-மாணவிகள் எழுதவுள்ளனர். பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, முதல் பொதுத்தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,070 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள், 1,753 தனித்தேர்வர்கள் பேர் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் முதல் அணியாக பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். இதற்காக தமிழகத்திலும் புதுச்சேரியிலும் 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான கண்காணிப்பு பணியில் 43,190 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். 4,000 பறக்கும் படை தேர்வுக்கூடத்தில் காப்பி அடித்தல், பிட் அடித்தல், விடைத்தாள் மாற்றுவது உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வண்ணம் மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், தாசில்தார், போலீஸ் எஸ்பி உள்ளிட்டோர் தேர்வு மையங்களுக்குச் சென்று திடீர் சோதனை நடத்துவார்கள். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறும். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்ப்பதற்கும் அளிக்கப்படும். சரியாக 10.15 மணிக்கு மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். வழக்கமாக மேல்நிலைக்கல்வி தேர்வானது 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். ஆனால், பிளஸ் 1 பொதுத்தேர்வில் ஒவ்வொரு தேர்வும் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. தற்போது பிளஸ் 1 தேர்வெழுதும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்விலும் இதேபோன்று 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். பிளஸ் 2 தேர்வு முடித்த பிறகு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளின் மதிப்பெண்கள் அடங்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக