BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

24 அக்., 2017

இது தான் அரசாணை எண்:147

இது தான் அரசாணை எண்:147

உதயசந்திரன் தாக்கல் செய்த பதில் மனு:கல்வி தரத்தை உயர்த்தவும், நுழைவு தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி எழுதும் வகையிலும், பாடத்திட்டத்தை மாற்ற, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தலைமையில், உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கலைத்திட்டம் மற்றும் தேர்வு சீரமைப்புக்காக, மூன்று துணை குழுக்களும் அமைக்கப்பட்டு, அறிக்கை பெறப்பட்டுள்ளது. ஒன்று முதல் பிளஸ் 2 வரை, பல ஆண்டுகள் பழமையான பாடத்திட்டத்தை மாற்ற வேண்டிய தேவையுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பாட வாரிய திட்டங்களை விட, மேலான பாடத்திட்டம் தயாரிக்க வேண்டும் என, கூட்டத்தில் முடிவானது. தொழிற்கல்வியில், 12 வகை பாடப்பிரிவுகளுக்கும், பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது.

ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை சேர்க்கவும்,


பிளஸ் 1க்கு பொது தேர்வு கொண்டு வரவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1க்கு, 2018 – 19 மற்றும் பிளஸ் 2வுக்கு, 2019 – 20ல், புதிய பாடத்திட்டம் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.,யை விட தரமான, பாட புத்தகங்கள் வழங்கப்படும். அதற்காக, அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர், எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில், 10 பேர் இடம் பெற்ற, கலைத்திட்ட தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது…இது தான் அரசாணை:147..
திரு மணிவண்ணன்,
மாநில நிர்வாகச்செயலாளர்,
9789142782 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக