BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

27 அக்., 2017

தொலைந்து போன உங்கள் Android Mobile மற்றும் Tablet சாதனத்தில் உள்ள தரவுகளை(Data) அழிப்பது எப்படி?

தொலைந்து போன உங்கள் Android Mobile மற்றும் Tablet சாதனத்தில் உள்ள தரவுகளை(Data) அழிப்பது எப்படி?


ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை அடிக்கடி தொலைத்து விடும் நபர் அனைத்து கேங்கிலும் ஒருவரேனும் இருப்பர். அதிமுக்கிய புகைப்படங்கள், வங்கி சார்ந்த தகவல்கள் என அனைவரது முக்கியத்தும் வாய்ந்த தகவல்களும் ஸ்மார்ட்போன்களில் நிச்சயம் இருக்கும்.
Kaninikkalvi.blogspot.in
உங்களது முக்கியத்தகவல்களை யாரும் பார்க்காதபடியும், பயன்படுத்தாத வகையிலும் பாதுகாக்க பல்வேறு செயலிகள் இருக்கின்றன. அவ்வாறு உங்களது அனைத்து தகவல்களையும் பாதுகாக்க நீங்கள் தொலைத்த சாதனத்தை எவ்வாறு லாக் செய்து, அதில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி என்பதை பார்க்க இருக்கின்றோம்.

இந்த வழிமுறையினை ஃபைன்ட் மை டிவைஸ் எனும் அம்சத்தை கொண்டு செய்ய இருக்கின்றோம். ஃபைன்ட் மை டிவைஸ் அம்சம் வேலை செய்ய உங்களது சாதனம் இணையத்துடன் இணைத்திருக்க வேண்டும். உங்களது சாதனம் ஃபைன்ட் மை டிவைஸ் மூலம் கண்டறியப்பட்டால், சாதனம் இருக்கும் இடத்தை பார்க்க முடியும்.
○கணினிகல்வி○
வழிமுறை 1: முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை 2: இனி உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: இங்கு நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.

 வழிமுறை 4: இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும்.

வழிமுறை 5: உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும்.

வழிமுறை 6: இனி திரையில் இரண்டு ஆப்ஷன்கள் காணப்படும் -- Sound, Lock and Erase இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்.

ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.

கணினி பாடத்திற்க்கு கணினி ஆசிரியர்கள் தான் நியமிக்க வேண்டும் ஏன்னு தெரியுமா..?


கணினி பாடத்திற்க்கு கணினி ஆசிரியர்கள் தான் நியமிக்க வேண்டும் ஏன்னு தெரியுமா..?
கணினி ஆசிரியர்களுக்கும் அறிவியல் ஆசிரியர்களுக்கும் உள்ள கற்றல் வேறுபாடுகளை விளக்குகிறார் பேராசிரியர் ஜமீர்முகம்மது..

24 அக்., 2017

இது தான் அரசாணை எண்:147

இது தான் அரசாணை எண்:147

உதயசந்திரன் தாக்கல் செய்த பதில் மனு:கல்வி தரத்தை உயர்த்தவும், நுழைவு தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி எழுதும் வகையிலும், பாடத்திட்டத்தை மாற்ற, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தலைமையில், உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கலைத்திட்டம் மற்றும் தேர்வு சீரமைப்புக்காக, மூன்று துணை குழுக்களும் அமைக்கப்பட்டு, அறிக்கை பெறப்பட்டுள்ளது. ஒன்று முதல் பிளஸ் 2 வரை, பல ஆண்டுகள் பழமையான பாடத்திட்டத்தை மாற்ற வேண்டிய தேவையுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பாட வாரிய திட்டங்களை விட, மேலான பாடத்திட்டம் தயாரிக்க வேண்டும் என, கூட்டத்தில் முடிவானது. தொழிற்கல்வியில், 12 வகை பாடப்பிரிவுகளுக்கும், பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது.

ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை சேர்க்கவும்,


பிளஸ் 1க்கு பொது தேர்வு கொண்டு வரவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1க்கு, 2018 – 19 மற்றும் பிளஸ் 2வுக்கு, 2019 – 20ல், புதிய பாடத்திட்டம் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.,யை விட தரமான, பாட புத்தகங்கள் வழங்கப்படும். அதற்காக, அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர், எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில், 10 பேர் இடம் பெற்ற, கலைத்திட்ட தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது…இது தான் அரசாணை:147..
திரு மணிவண்ணன்,
மாநில நிர்வாகச்செயலாளர்,
9789142782 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.

22 அக்., 2017

கணினி ஆசிரியர்கள் கவனத்திற்க்கு

கணினி ஆசிரியர்கள் கவனத்திற்க்கு

உங்கள் வாழ்வில் பார்க்க வேண்டிய இரு அரசு  இணைய தளங்களும்

தமிழக அரசு இணையதளம்
*&**
-->ஆசிரியர்கள் தேர்வுக்காண இணையதளம் (பதிவுமூப்பு/தகுதித்தேர்வு)
http://trb.tn.nic.in/

-->அரசுப்பள்ளிக்கல்வி சாரந்த அரசாணை
http://www.tn.gov.in/go_view/dept/28

தகவல் தொழில்நுட்பம் தெரிந்த ஆசிரியர்கள்  இதனைப் பற்றி அறிந்து கொண்டால் இன்று ஏமாற்றம் அடைய தேவையில்லை பல வதந்திகளை நம்பும் ஆசிரியர்களே நீங்கள் உண்மையை உணரும் நாள் நாம் பணிக்கு செல்லும் நாள்...

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014..
சங்கம் சார்ந்து பயிற்சி மையம் நடத்தவில்லை ..

உறுப்பினர் சேர்க்கைக்கு பணம் இல்லை ..

உண்மை உணரும் காலம் வரும் அன்று உனக்கு அரசு வேலை தரும்..

ஒன்றுபடுவோம்!!
வேலைபெறுவோம்!!

17 அக்., 2017

TNBEDCSVIPS APP (தீப ஒளி திருநாள் பரிசாக)

TNBEDCSVIPS APP
கணினி ஆசிரியர்களே உங்களுக்காக..
தீப ஒளி திருநாள் பரிசாக
Downlode Link

https://www.mediafire.com/file/4jyux5wv8iu4z25/TNBEDCSVIPS%20.apk 



கணினி ஆசிரியர்களுக்காக application (app)உருவாக்கப்பட்டுள்ளது

உடனுக்குடன் கணினி ஆசிரியர்கள் நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும்..

போட்டித் தேர்வுகளுக்காண வினா விடைகள் அடைங்கிய பல பயனுள்ள தகவல்களுடன் ..

என்றும் உங்களுடன்..
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்...

ஒரு கணினியின் கண்ணீர் ... தமிழகம் முழுவதும் கணினி ஆசிரியர்கள் செய்தியை வெளியிட்ட தீக்கதிர் பத்திரிகை மற்றும் ஆசிரியர் அவர்களுக்கும் 40000கணினி ஆசிரியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி ..

ஒரு கணினியின் கண்ணீர் ... தமிழகம் முழுவதும் கணினி ஆசிரியர்கள் செய்தியை வெளியிட்ட தீக்கதிர் பத்திரிகை மற்றும் ஆசிரியர் அவர்களுக்கும் 40000கணினி ஆசிரியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி ..

11 அக்., 2017

"40 ஆயிரத்துக்கும் அதிகமான கணினி அறிவியல் பட்டதாரிகளை இந்த முடிவு வாழ்வை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது..?"

 "40 ஆயிரத்துக்கும் அதிகமான கணினி அறிவியல் பட்டதாரிகளை இந்த
முடிவு வாழ்வை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது..?"

Add caption

“ என்னங்க சார் உங்க சட்டம்… என்னங்க சார் உங்க நியாயம்..” என்று அரசை நோக்கி தொடர்ந்து நாங்கள்கேட்டுக் கொண்டிருக்கஅவர்களோ அதெல்லாம் *“அரசின் கொள்கை முடிவு”* என்று ஒற்றை வரியில்முடித்துக் கொள்கின்றனர் என்று பி.எட்., படித்த கணினி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் உள்ள பழைய பாடத்திட்டத்தை மாற்றிஅமைப்பதற்கான பணியைத் தொடங்கியுள்ளது பள்ளிக் கல்வித்துறைஇதற்காககுழு அமைக்கப்பட்டு,கருத்தறியும் கூட்டங்களை நடத்திமாற்றத்திற்கான பணிகள் தீவிரமாகியுள்ளதுஅரசின் இந்த புதியபாடத்திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களை இளைய தலைமுறைக்கு கல்வி வழியாக அளிக்கும் வகையில்,அரசு பள்ளிகளில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம்கட்டாயமாக்கப்படுகிறது.
 
Add caption


இதனால்மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான கணினி ஆசிரியர் பணியிடங்கள்உருவாகும்இதன்மூலம் கணினி ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கு அரசுப்பணி கிடைக்கும் என்று பி.எட்.,படித்த கணினி ஆசிரியர்கள் மகிழ்ச்சிக்கு ஆளாகினர்.

ஆனால்அவர்களின் இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லைஅவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில்அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பாடம் நடத்தஅறிவியல் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி வழங்கப்படும்என்று *தலையில் இடி விழுந்ததைப் போலஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசுஇதனால்அதிர்ச்சிக்குள்ளான கணினி பட்டதாரிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கினாலும்மனுக்கள் மூலம் கோரிக்கைவைத்து மன்றாடினாலும் சாதகமான பதில் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்துதமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலபொதுச்செயலாளர் குமரேசன் கூறியதாவதுஅரசு பள்ளிகளில் தமிழுக்கு தமிழாசிரியர்ஆங்கிலத்திற்கு ஆங்கிலஆசிரியர்கணிதத்திற்கு கணித ஆசிரியர் என்று அந்தந்த பாடங்களுக்கு அந்தந்த துறை சார்ந்த ஆசிரியர்கள்பணியில் சேர்க்கும் போதுகணினி அறிவியலுக்கு மட்டும் கணினி ஆசிரியர்களை நியமிக்காமல்அறிவியல்ஆசிரியர்களை நியமனம் செய்ய முயற்சிப்பது எந்த விதத்தில் சரியாகும்..??

அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆகிவிடலாம்” என்ற கனவுகளுடன் கஷ்டப்பட்டுகடன்பட்டு 1992-ஆம் ஆண்டுமுதல் இன்று வரை *BCA., B.Sc.,(CS) B.Sc.,(IT) ஆகிய பட்டப்படிப்புகளும்கணினி அறிவியலில் பி.எட்.,-ம் படித்து 40,000-கும் அதிகமான கணினி அறிவியல் பட்டதாரிகளை இந்த முடிவின் மூலம் வஞ்சித்துள்ளதுதமிழக அரசுஇது பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.

கடந்த மூன்று சட்டசபை தேர்தல்களிலும்கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகளுக்கு தமிழக அரசுபள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று ஆளும் அதிமுக உட்பட முக்கிய அரசியல் கட்சிகள்வாக்குறுதிகள் அளித்துள்ளனஆனால்ஆட்சிக்கு வந்ததும் வழக்கம்போல எங்களை மறந்துவிட்டனர்இதன்மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த நிலையில் தமிழக அரசின் தொடர் புறக்கணிப்பு எங்களின்வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எங்களின் இப்பிரச்சனை தொடர்பாகதலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் 63 முறையும்,தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் 37 முறையும் நேரடியாக… தொடர்ச்சியாககோரிக்கை மனு அளித்திருக்கிறோம்ஆனால்எந்தப்பயனும் இல்லைபள்ளிக்கல்வித் துறையிலும் பலமுறைமனு அளிக்கப்பட்டுள்ளதுஆனால்அவர்களோ இதெல்லாம் *” அரசின் கொள்கைமுடிவு “* என்று ஒற்றைவரியை பதிலாக கூறிவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர்எங்களுக்கு வேலை வழங்கக்கூடாது என்பதுதான் அரசின்கொள்கை முடிவா என்று கேட்டால்அதற்கும் அவர்கள் பதிலளிக்க தயாராக இல்லை.

40,000 கணினி ஆசிரியர்கள் வேலையின்றி தவிக்கும் இந்த சோகத்தில் பொறியியல் (BE.,) படித்தவர்களுக்கும்பி.எட்., படிக்க அனுமதி அளித்துள்ளது வேடிக்கையாக உள்ளதுஅதோடு BE.,-யில் அவர்கள் எந்தபாடப்பிரிவை படித்திருந்தாலும்அவர்கள் கணினி அறிவியல் பி.எட்., படிக்கலாம் என்பதும் கூடுதல் சலுகைவேறு.

அதோடுமற்ற பாடங்களுக்கு உள்ளது போல கணினி அறிவியல் பாடத்திற்கும்ஆசிரியர்களுக்கும் என்றுஎந்தவொரு பணிவிதிமுறையோவரையறையோ இல்லை என்பதால்கணினி அறிவியல் பி.எட்., படித்தவர்களைதனியார் பள்ளிகளில் கூட வேலைக்கு சேர்க்க மறுக்கின்றனர். 7,000 ரூபாய் சம்பளத்துடன் கூடிய சிறப்பு /  பகுதிநேர ஆசிரியர் பணி கூட மறுக்கப்படுகிறதுபி.எட்., படித்தவர்களுக்கான *AEEO, DEO* தேர்விலும் கணினிஅறிவியல் பி.எட்., படித்தவர்களுக்கு வாய்ப்பில்லை எனபல்வேறு இன்னல்களையும் *” கொள்கை முடிவு “*என்ற பெயரில் தமிழக அரசுகணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகள் மீது சுமத்தியிருக்கிறது.

இதனால்ஆசிரியர் பணிக்கு படித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களாகவும்தனியார்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சியாளராகவும் சொற்ப சம்பளத்திற்கு பணியாற்றும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளோம்இவ்வாறு அவர் குமுறினார்.

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.