BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

23 செப்., 2017

ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்விக்கு தெரியுமா?


*ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்விக்கு தெரியுமா?*
ஒலிம்பியாட்ஸ்,கல்வித் திறனையும் சந்தேகத்துக்கிடமில்லாத அறிவுக்கூர்மையையும் உணர்த்துகிறது. மாணவர்களிடையே இப்படிப்பட்டத் திறன்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியாவில் பின்வரும் ஒலிம்பியாட்கள் உள்ளன.
*தேசிய சைபர் ஒலிம்பியாட்*


தேசிய தகவல் தொழில் நுட்ப ஒலிம்பியாட் என்பதுதான் நாட்டின் இப்படிப்பட்ட ஒலிம்பியாட் வகைகளில் முதலானது. இளைய சமுதாயத்தினரிடையே திறமை வாய்ந்தவர்களை அடையாளம் கண்டுகொள்ள தேசிய அளவில் நடத்தப்படும் திறன் தேடல் போட்டி இது. சவாலை எதிர்கொள்ளும் உணர்வையும், போட்டி உணர்வையும் இளைய சமுதாயத்தினரிடையே கொண்டுவந்து, கம்ப்யூட்டரைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டப்பட்ட பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும் கணினியைத் தங்கள் வருங்கால வாழ்வாதாரமாக அமைத்துக்கொள்ள அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தகுதி
சிபிஎஸ்சி/ஐசிஎஸ்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 3ஆம் வகுப்பிலி்ருந்து 12ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் இந்த தேசிய சைபர் ஒலிம்பியாட் தேர்வுகளில் கலந்துகொளளலாம்.9ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு மாணவர்கள் தங்கள் வருங்கால தொழிலாக கலை, வணிகவியல், விஞ்ஞானம் இவற்றைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்தத் தேர்வுகளில் பங்கேற்பது அவசியம். ஏனெனில் இந்தப் போட்டிகளின் நோக்கமே மாணவர்களின் கம்ப்யூட்டர் திறன்களை சோதிப்பது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக