BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

6 மே, 2018

உயர் கல்வி துறையில் வருகிறது வரலாறு காணாத மாற்றம்!

உயர் கல்வி துறையில் வருகிறது வரலாறு காணாத மாற்றம்!


உயர் கல்வி துறையில், தற்போது இருக்கும் பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு மாற்றாக, ஒற்றை ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க, ஆளும்,பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது.2019 லோக்சபா தேர்தலுக்குள், அதற்கான மசோதா,பார்லி.,யில் தாக்கல் செய்யப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்த சில நாட்களில், வரைவு சட்டத்தை, அது தயார் செய்துள்ளது.உயர் கல்வி துறை,வரலாறு காணாத மாற்றம்,வருகிறது,ஒற்றை ஒழுங்குமுறை ஆணையம்உயர் கல்வித் துறையில், பல்கலை மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில், தொழில்நுட்ப கல்விக்கான தேசிய கவுன்சில் போன்ற பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களில் நிகழும் விதிமீறல்கள் உட்பட, அனைத்து பிரச்னைகளையும், இந்த அமைப்புகள் கட்டுப்படுத்தி வருகின்றன.

வரைவு சட்டம் :

இந்நிலையில், உயர் கல்வி துறையை கட்டுப்படுத்த, பல்வேறு அமைப்புகளுக்கு பதில், சக்திவாய்ந்த ஒரே ஒழுங்கு முறை ஆணையத்தை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, உயர்கல்வி மதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அல்லது உயர் கல்வி ஒழுங்குமுறை கவுன்சில் என்ற பெயரில், அமைப்பை உருவாக்க, மத்திய அரசு, முடிவு செய்துள்ளது. இந்தஒற்றை ஆணையம் நடைமுறைக்கு வந்த பின், தற்போது இருக்கும், மற்ற ஒழுங்குமுறை அமைப்புகள் கலைக்கப்படும் என தெரிகிறது.இதற்கான, வரைவு சட்டத்தை, மத்திய அரசு இயற்றி உள்ளது. இந்த வரைவு சட்டம் மீது, முசோரியில் நடைபெறும், 2022ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கை கூட்டத்தில், மத்திய அரசு விவாதிக்க உள்ளது. பின், செப்டம்பரில் நடைபெறவுள்ள பார்லி., கூட்டத்தில், இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.அந்த மசோதாவின் விபரம்: மத்திய உயர் கல்வி துறையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள, ஒற்றை அமைப்புக்கு,உயர்கல்வி மதிப்பீடு மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம், கல்வி நிறுவனங்களுக்கான தரத்தை நிர்ணயம் செய்யும்; பாடம் கற்றுத் தரும் முறைகளை கண்காணிக்கும்; கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் ஓர் ஆண்டில், எப்படி உள்ளது என்பதை மதிப்பீடு செய்யும்.கல்வி நிறுவனங்களில் உள்ள ஒவ்வொரு பாடத்தின் தரத்தையும் மேம்படுத்த, பல்கலை மானிய குழு சார்பில், பல குழுக்கள் அமைக்கப்படுகின்றன. புதிய ஒழுங்குமுறை ஆணையத்திலும் அது பின்பற்றப்படும்.

கல்வித் தரம்:

கல்வி தரத்தை பாதுகாக்க தவறும் கல்வி நிறுவனங்களுக்கு, தேவையான பயிற்சியையும், வழிகாட்டுதலையும், புதிய ஆணையம் வழங்கும். இந்த ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் தரத்துடன் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும், மத்திய, மாநில அரசின் மானியங்கள் வழங்கப்படும். எல்லாருக்கும் பணத்தை வாரி வழங்காமல், அந்தந்த கல்வியாண்டிற்கான செயல் திட்டங்களை தெளிவாக கூறும் கல்வி நிறுவனங்களுக்கு, மானியங்கள் வழங்கப்படும்.மாநிலங்களில் இயங்கும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் ஆசிரியர்களை, இந்த ஒற்றை ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து விவாதங்கள் தொடர்ந்துநடக்கிறது. பல்கலை மானியக் குழுவைப் போல் அல்லாமல், இந்த ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, வானளாவிய அதிகாரங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட பாடப் பிரிவில், கல்வித் தரம் சரியில்லை என்றால், அந்தப் பாடப் பிரிவில், புதிய மாணவர்களுக்கான சேர்க்கையை நிறுத்தும் அதிகாரம், இந்த புதிய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உள்ளது.தரமான கல்வி வழங்காத, கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரமும் இந்த ஆணையத்திற்கு உள்ளது. கல்வி நிறுவனம் மற்றும் அதில் உள்ள துறைகளுக்கு, நிபுணர்களின் அறிவுரை வழங்கவும் வழிவகை செய்யப்படும்.

அபராதம்:

இந்த புதிய ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, புதிய பாடப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு, அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை செலுத்த தவறுபவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்க பரிந்துரை செய்யப்பட உள்ளது.உயர்கல்வி மதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில், 10 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். மிகச் சிறந்த கல்வியாளர் இதன் தலைவராகஇருப்பார். இவருக்கு கீழ், இரண்டு துணைதலைவர்கள் நியமிக்கப்படுவர். மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக பணியாற்றியவர்களும், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., இந்திய அறிவியல் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில், குறைந்தது ஐந்து ஆண்டுகள், இயக்குனர்களாக பதவி வகித்தவர்களும், இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.இந்த ஒழுங்குமுறை ஆணையம், தலைமை கணக்குதணிக்கை அலுவலகத்தின் கீழ் செயல்படும். கொள்கை சார்ந்த முடிவுகளுக்கு, மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல நாள் கனவு!

* இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், மோடி அரசின் தலைமையில் செய்யப்பட்ட மிக முக்கியமான, மாற்றமாக இது கருதப்படும். உயர் கல்வி துறையில், மிகப் பெரிய மாற்றம் நிகழும்.

* 2017, மார்ச், 10ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கல்விக் கூட்டத்தில், இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட பேராசிரியர் யஷ்பால் கமிட்டி, தேசிய அறிவுசார் ஆணையம் மற்றும் மோடி அரசால் உருவாக்கப்பட்ட ஹரி கவுதம் குழு போன்றவை பலமுறை விவாதித்தும், இத்திட்டம், முழுமை பெறாமலேயே இருந்தது.

* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறை ஆட்சியில் இருந்தபோது, இதுபோன்ற ஒரு மசோதாவை தாக்கல் செய்ய, அப்போதைய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் முயற்சி மேற்கொண்டார். பல எதிர்ப்புகளால், அது நிறைவேறாமல் போனது.

5 மே, 2018

பள்ளி மாணவர்களுக்கு கிடுக்குப்பிடியான 11 விதிமுறைகள்!

பள்ளி மாணவர்களுக்கு கிடுக்குப்பிடியான 11 விதிமுறைகள்!

பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவிப்பு!

லோ ஹிப், டைட் பிட் 'பேன்ட்'

Thursday, 03 May, 11.16 am

லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’ ஜிமிக்கி கம்மல் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிரடியான உத்தரவை போட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு ஸ்டைலாக வர ஆரம்பித்தனர். அதுமட்டுமல்லாமல், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர்.

இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என இதை முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையில் கல்வித்துறையின் 11 விதிமுறைகள்:

* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.

* லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.

* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது

* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.

* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.

* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.

* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.

* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.

* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.

* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும். அப்படி பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.

* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும் என இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான

11 விதிமுறைகள் குறித்து ‘பிளக்ஸ் பேனர்’கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

4 மே, 2018

அறிவியல் சார்ந்த பொதுவுடைமைக் கோட்பாட்டை வகுத்த காரல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று ...

அறிவியல் சார்ந்த பொதுவுடைமைக் கோட்பாட்டை வகுத்த காரல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று ...


சிறந்த சிந்தனையாளரும், அறிவியல் சார்ந்த பொதுவுடைமைக் கோட்பாட்டை வகுத்தவருமான காரல் மார்க்ஸ் (Karl Marx) பிறந்த தினம் இன்று (மே 5) ...

பிரஷ்யாவின் (தற்போதைய ஜெர்மனி) ட்ரையர் நகரில் 1818-ல் பிறந்தார். தந்தை வழக்கறிஞர். 17-வது வயதில் பார்ன் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். பின்னர் பெர்லின் பல்கலைக் கழகத்தில் வரலாறு, மெய்யியல் பயின்றார். யெனா பல்கலைக் கழகத்தில் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

படிக்கும்போது ஆய்வு மாணவர்களுக்கான சங்கத்தை நிறுவினார். வரலாறு, பொருளாதாரம் தொடர்பாக அங்கு நடக்கும் காரசாரமான விவாதங்களில் பங்கேற்றார். இவரது சொல்லாற்றலும், பேசுகிற விஷயம் பற்றிய ஆழமான அறிவும் பல்கலைக்கழகத்தில் இவரது மதிப்பை உயர்த்தின.

ஏராளமான மொழிகளைக் கற்றார். மாணவப் பருவத்தில் நிறைய கவிதைகள் எழுதினார். படிப்பை முடித்து ரைன்லாந்து கெசட் இதழில் பணியில் சேர்ந்த இவர், 10 மாதங்களில் அதன் ஆசிரியராக உயர்ந்தார். ‘தொழிலாளர்களின் நிலை உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் உள்ளது. ஒன்று சேர்ந்தால்தான் அவர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும்’ என்று ஆணித்தரமாக கூறினார். அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

ஜெர்மனி அரசு இவர் நடத்திய இதழை தடை செய்த பிறகு, பாரீஸ் சென்றார். அங்கு பிரெட்ரிக் ஏங்கல்ஸை சந்தித்தார். ஒரேமாதிரி கருத்துகள், சிந்தனைகள் கொண்ட இருவருக்கும் இடையே இயல்பான, ஆழமான நட்பு மலர்ந்தது. இது இறுதிவரை நீடித்தது.

சுதந்திரமான, புரட்சிகரமான சிந்தனைகளைப் பரப்பியதால் பிரான்ஸிலும் பல பிரச்சினைகளைச் சந்தித்தார். அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பெல்ஜியம் சென்றார். ‘தி பாவர்ட்டி ஆஃப் பிலாசபி’ என்ற தனது முதல் நூலை அங்கு 1847-ல் வெளியிட்டார். அடுத்த ஆண்டில் ‘தி கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ’ என்ற நூலை ஏங்கல்ஸுடன் இணைந்து எழுதி வெளியிட்டார்.

புரட்சிகர இயக்கங்களில் இணைந்து பணியாற்றியதால் எங்கு சென்றாலும் நாடுகடத்தப்பட்டார். இறுதியாக லண்டன் சென்றவர், அங்கேயே நிரந்தரமாக தங்கினார். பல ஆண்டுகள் வறுமையோடும், உடல்நலக் கோளாறுகளோடும் போராடினார். லண்டனில் வாழ்ந்தபோது அங்கிருந்த அருங்காட்சியகத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டார். தனது கட்டுரைகள், நூல்களுக்காக அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

அரசியல், பொருளாதார நூல்கள் எழுத அதிக நேரம் செலவிட்டார். நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதினார். ஜெர்மன், ஆங்கில இதழ்களிலும் எழுதினார். லண்டனில் சர்வதேச தொழிலாளர் சங்கம், ஜெர்மன் தொழிலாளர் கல்வி சங்கம் தொடங்க பெரிதும் உதவினார்.

இவரது அரசியல், பொருளாதார தத்துவங்கள், கோட்பாடுகள் ‘மார்க்சிஸம்’ என புகழ்பெற்றது. வரலாற்றை அறிவியலோடு தொடர்புப்படுத்தி புரிந்துகொள்ள வேண்டும் என்றார். இவரது செய்திகள் உலகம் முழுவதும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றின.

‘தாஸ் கேபிடல்’ (மூலதனம்) என்ற நூலை எழுதினார். மொத்தம் 3 தொகுதிகள் கொண்ட இந்நூலின் முதல் பகுதி 1867-ல் வெளி வந்தது. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நூலான இது அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் கருதப்படுகிறது.

மனிதகுல முன்னேற்றத்துக்காகவும், பாட்டாளி வர்க்கத்தினரின் விடுதலைக்காகவும் இறுதி மூச்சுவரை பாடுபட்டார். உலகின் தலைசிறந்த மெய்யியலாளர், அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுநர், ஆய்வறிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், புரட்சியாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட காரல் மார்க்ஸ் 65-வது வயதில் (1883) மறைந்தார்.

1 மே, 2018

TN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்

TN NEW TEXTBOOKS DOWNLOAD | 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார்




சி.பி.எஸ்.இ. கல்வி முறையை விட தரமானது: 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட திட்ட புத்தகங்கள் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதி வெளியிடுகிறார் | 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்ட புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந் தேதியன்று வெளியிடுகிறார். தமிழகத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அகில இந்திய அளவில் நடக்கும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவ, மாணவிகள் வெற்றி பெறுவது குறைவாகி வருவதாக பரவலாக கருத்து எழுந்தது. மேலும், தமிழகத்தின் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் வரும் பாடங்கள் பெரும்பாலும், மாணவர்களை போட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்யும் அளவில் தரமானதாக இருக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை களையும் வகையில் அவற்றை சவாலாக எடுத்துக் கொண்டு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்து வருகிறார். நிபுணர் குழு முதல் நடவடிக்கையாக, அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து வகை போட்டித் தேர்வுகளிலும் தமிழக மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் பாடத் திட்டங்களை தரம் உயர்த்தி அமைக்க உத்தரவிட்டார். மேலும், மாநில கல்வித் திட்டத்தில் புதிய தரமான பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக பல்வேறு நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்தார். அதோடு, மக்கள், கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டறியவும் ஏற்பாடுகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தார். இது இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத புதிய முயற்சியாகும். அந்த வகையில் முதலில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தரமான புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்-அமைச்சர் வெளியிடுகிறார் அதன் வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு புத்தகமாக அச்சிடப்பட்டு உள்ளது. அந்த புத்தகங்களை 4-ந் தேதி சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார். இதுகுறித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- வெளியிடப்பட இருக்கும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம், மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ.யை விட தரமானதாக அமைந்துள்ளது. இந்தியாவிலேயே புதிய முயற்சியாக இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்தப் பாடத் திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அன்றாட இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அறிவை வளரச் செய்யும். முதலாம் வகுப்புப் பாடத்தில், நில மேலாண்மை, நீர் மேலாண்மை, வெப்ப மேலாண்மை, திடக் கழிவு மேலாண்மை, சாலைப் பாதுகாப்பு, தேசப்பற்று ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள், அடுக்குமாடிகள் கட்டப்படும்போது எந்த வகையிலான மணல் மற்றும் இடங்களில் கட்ட வேண்டும் என்பது பற்றிய கல்வி அறிவை நில மேலாண்மை அளிக்கும். தரமான அறிவு வெள்ளம், சுனாமி வரும்போது எப்படிப்பட்ட பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு அம்சங்களைப் பற்றி நீர் மேலாண்மை கல்வி போதிக்கும். அதுபோலவே வெப்ப மேலாண்மை, உள்ளிட்ட மற்ற பாடத் திட்டங்களும் புதிய அறிவை மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும். எனவே இதுபோன்ற கல்வித் திட்டம் மூலம் தரமான அறிவைக் கொண்ட மாணவ, மாணவிகளை தமிழகத்தில் உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.  

ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் திறன்: ஊக்குவிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டம்

ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் திறன்: ஊக்குவிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டம்



தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக ஆசிரியர்கள் மேற்கொள்ளும் புதிய கற்பித்தல் முயற்சிகளை ஊக்குவிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1.3 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு வகுப்பறையில் வழக்கமான கற்பித்தலுடன் வரைபடங்கள், கணினி, விடியோக்கள், கணிதப் பாட பாடல்கள், பெருக்கல் வாய்ப்பாடு ஒப்புவிக்கும் போட்டி என, பல்வேறு வித்தியாசமான முறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். 
ஆசிரியர்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சிகள் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் அறிவியல், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களைத் தாங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது என மாணவர்கள் தெரிவித்தனர். 
இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் வித்தியாசமான கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களை ஊக்குவிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியை கேத்தரின் ரூபி தெரசா, கணித கற்பித்தல் குறித்து 100 -க்கும் மேற்பட்ட விடியோக்களை உருவாக்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 
இதேபோன்று, ஈரோடு மாவட்டம், நாதகவுண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் தே.தாமஸ் ஆண்டனி (பொம்மலாட்டம் மூலம் கல்வி கற்பித்தல்) உள்பட தமிழகம் முழுவதும் 2,000 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புதுமையான செயல்பாடுகள் மூலம் கற்பித்து வருகின்றனர். 
புதிய வலைதளம் உருவாக்கம்: இதுபோன்ற புதிய முயற்சிகளை ஒரே கூரையின்கீழ் ஒருங்கிணைப்பதன் மூலம், புதுமையான கற்பித்தல் முறை தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களைச் சென்றடையும். 
இதற்காக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் புதிய வலைதளம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
இதில் ஆசிரியர்களின் விடியோக்கள், புதுமையான கற்பித்தல் திட்டங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான தளமும் உருவாக்கப்படும். 
அதில் அதிகம் பேரின் கவனத்தைப் பெறும் ஆசிரியர்கள் உரிய முறையில் கௌரவிக்கப்படுவர். வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், இந்தத் திட்டம் ஆசிரியர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றனர் அவர்கள்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுமா? 
புதிய பாடத்திட்டம் குறித்து, ஜூன் முதல் வாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியின்போது பாடநூல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம், கற்பித்தலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்படும். 
தற்போது தங்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் முழுவதுமாக முடிவடைந்ததும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக புதிய பாடத் திட்டம் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.