BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

30 நவ., 2017

இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் அனைவரும் *TNSCERT*-இணையதளத்தில் ICT-க்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்….

⏰ டிசம்பர்  1⃣, 2⃣, 3⃣, 4⃣

📊  இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் அனைவரும் *TNSCERT*-இணையதளத்தில் ICT-க்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்….

⚡  நீங்கள் ஆதரவு அளிக்கும் ஒவ்வொரு கருத்துக்களும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்… 

👆  Position Papers > *ICT* : கணினி அறிவியல் பாடம் விரைவில் 1,00,000 கருத்துக்களை பெற்றிட ஒத்துழைப்பு அளித்துவரும் அனைவருக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்  💐💐

⭐  நீங்களும் இதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்து உதவிடவும்…

🔅  Feedback-1: கணினி அறிவியல், கணினி ஆய்வகம், பிரத்யேக கல்வி உபகரணங்கள், யோகா, கராத்தே, இசை, நடனம் போன்ற நவீன அம்சங்கள் அனைத்தும் தனியார் பள்ளிகளில் இடம்பெற்றிருப்பதால் அங்கு மாணவர் சேர்க்கையும், மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளிலும் இதேபோன்று நவீன அம்சங்களைக் கொண்டுவரும் பட்சத்தில் மாணவர் சேர்க்கையும், மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கும்.

🔅  Feedback-2: தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இன்றுவரையில் “கணினி அறிவியல் பாடம்” கொண்டுவரப்படவில்லை. அதனால், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை உருவாக்கி, தரமான நவீன கணினி ஆய்வகங்களைக் கட்டமைத்து தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும்பட்சத்தில் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் வெகுவாக உயரும். பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும் கல்வித்துறை இந்த மகத்தான திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

🔅  Feedback-3: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கி வரும் தமிழக அரசு, அரசு பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் “கணினி அறிவியல்” பாடத்தை கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும்.

🔅  Feedback-4: சமச்சீர் கல்வியில் 2011-ல் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலும் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. புதிய பாடத்திட்டத்தில் இன்றைய நவீன உத்திகளுக்கு ஏற்றவாறு கணினி அறிவியலையும் ஒரு தனிப்பாடமாக 1-10 வகுப்புகளில் கொண்டுவந்து, சிறப்பாகச் செயல்படுத்தினால் இதன்மூலம் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியர் பயன்பெறுவார்கள்.

🔅  Feedback-5: 14 வருடங்களாக மேம்படுத்தப்படாமல் இருக்கும் பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தை நவீன யுகத்திற்கு ஏற்றாற்போல் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இணையம், ரோபோடிக்ஸ், டிஜிட்டல் வடிவமைப்பு போன்ற பாடப்பிரிவுகளை இணைத்து “கணினி அறிவியல்” போன்ற பாடங்களை கட்டாயப் பாடமாக்கி அரசு பள்ளி மாணவ-மாணவியருக்கு சிறந்ததொரு கல்வியை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்.

🔅  Feedback-6: அண்டை மாநிலங்கள் அனைத்திலும் கணினி அறிவியல் பாடம் ஒரு முக்கியப் பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழகத்திற்குப் பின்னர்தான் கேரளாவில் கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்பட்டது. கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்திற்கு “கட்டாயத் தேர்ச்சி முறை” தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் இன்னும் ஒன்றாம் வகுப்பில் கூட கணினி அறிவியல் பாடம் கொண்டுவராதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

புதிய பாடத்திட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தினால், தமிழகம் இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலமாகத் திகழ அதிக வாய்ப்புள்ளது.

🔅  Feedback-7: இன்றைய நவீன யுகத்தில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் கொண்டுவரப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

```Feedbacks By```

✍  G.Rajkumar, MCA., BEd.,
             *(TNBEDCSVIPS)*