BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

1 செப்., 2017

மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர்க்கு கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வேண்டுகொள்..

புதிதாக உருவாக்கப்படும் 6029 கணினி பயிற்சி மையங்களில் தகுதி வாய்ந்த பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பி.எட் கணினி ஆசிரியர்கள் சார்பில் மாண்புமிகு 

பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள்.

மாண்புமிகு கல்வி அமைச்சர் 
தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககமும் இணைந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் 413 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மாநில அளவிலான கருத்தரங்கை நேற்றைய முன் தினம் நடைபெற்றது இதில் மாண்புமிகு கல்வி அமைச்சர் புதிதாக 6029பள்ளிகளில் கணினி பயிறசி மையம் அமைக்கப்பட்டு அதில் தகுதி வாய்ந்த கணினி ஆசிரியர்கள் (அ)  கணினி அலுவலர்கள் நியமனம் செய்தாக கூறினார்.

இதுவரை 40000கணினி ஆசிரியர்கள் பி.எட் பட்டம் பெற்றுள்ளனார் அனைவரும் அடிப்படை ஆதாரம் இன்றி இன்றுவரை வேலையில்லாமல் தவித்து வருகின்றன எங்களின் வாழ்வின் சூழ்நிலை அறிந்த மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் 6000 புதிய பணியிடங்களுக்காண நியமனத்தின் போது  பி.எட் பட்டம் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்து எங்கள் கணினி ஆசிரியர்கள் குடுபத்தில் ஒளியோற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்..


வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக