BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

18 ஆக., 2018

அரசு பேருந்துகளின் இருபுறங்களிலும் உள்ள கண்ணாடிகளில் அப்பெருந்தின் வழி தடம் ஊர் பெயர்கள் தெளிவாக ஓட்டவும், தனியார் விளம்பரங்களை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது



அரசு பேருந்துகளின் இருபுறங்களிலும் உள்ள கண்ணாடிகளில் அப்பெருந்தின் வழி தடம் ஊர் பெயர்கள் தெளிவாக ஓட்டவும், தனியார் விளம்பரங்களை அகற்றவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது

16 ஆக., 2018

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் ( 1924 - 2018)

முன்னாள் பிரதமர் காலமானார் ( 1924 - 2018)


சிறார்களை தற்கொலைக்கு தூண்டும், 'மோமோ' : பெற்றோர், ஆசிரியர்கள் உஷாராக இருக்க போலீசார் எச்சரிக்கை

சிறார்களை தற்கொலைக்கு தூண்டும், 'மோமோ' : பெற்றோர், ஆசிரியர்கள் உஷாராக இருக்க போலீசார் எச்சரிக்கை

சிறுவர்கள் மற்றும் மாணவர்களை தற்கொலைக்கு துாண்டும்,
'ப்ளூ வேல்' என்ற, 'ஆன் லைன்' விளையாட்டு போல, தற்போது, 'மோமோ' என்ற, அரக்கன் தலை துாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'குழந்தைகள் பாதுகாப்பில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.



சிறுவர்கள் மற்றும் வாலிபர்களை தற்கொலைக்கு துாண்டும், 'ப்ளூவேல்' என்ற, 'ஆன் லைன்' விளையாட்டு, 2017ல், தமிழகம் உட்பட, உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதாவது, மொபைல் போனில், 'ப்ளூவேல்' என்ற, ஆன் லைன் விளையாட்டிற்கான, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்தால் போதும். அவர்களுக்கு, 50 நாட்களுக்கு, 'டாஸ்க்' தரப்படும்.

கட்டளைகள் உதாரணமாக, 'உன் கையில் பிளேடால், மூன்று முறை கிழித்துக் கொள்; அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலையில் பேய் படம் பார்; 'செல்பி' எடுத்து அனுப்பு. 'நள்ளிரவில், ரயில்வே டிராக்கில் நில்; அந்த, 'வீடியோ' காட்சியை, சமூக வலைதளங்களில் பதிவேற்று. உயரமான கட்டடம் மற்றும் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்' என, அடுக்கடுக்காக, கட்டளைகள் பிறப்பிக்கப்படும். இதை எல்லாம் செய்யமாட்டேன் என்று, சொல்ல முடியாது. ஏனெனில், இந்த ஆன்லைன் விளையாட்டிற்கான, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்யும் போதே, உங்கள் மொபைல் போனில் இருக்கும் அனைத்து தகவல்களும், இந்த விளையாட்டு தொடர்பான, சர்வருக்கு சென்று விடும்.

 'டாஸ்க்கை செய்யவில்லை என்றால், உங்கள் தகவல்கள் அனைத்தும், பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என, மிரட்டல் வரும். மொபைல் போன்களை, 'ஹேக்' செய்பவர்களால் நடத்தப்பட்டு வந்த, இந்த விளையாட்டால், பலர் பலியாகினர். தமிழகத்தில், மதுரையை சேர்ந்த, விக்கி, 19 என்ற, தனியார் கல்லுாரி மாணவர், 'ப்ளூவேல்' விளையாட்டில் சிக்கி, தற்கொலை செய்து கொண்டார்.தற்போது, புளூவேலுக்கு நிகராக, ஆன்லைனில் விளையாடக் கூடிய, 'மோமோ' என்ற, அரக்கன் தலை துாக்கி உள்ளான். இந்த விளையாட்டிற்கான இணைய இணைப்பு, 'வாட்ஸ் ஆப்'பில் வேகமாக பரவி வருகிறது.

கண்காணிக்க வேண்டும் : இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:இணையதளம் வழியாக தகவல் திருட்டில் ஈடுபடும், ஹேக்கர்களால், 'ஆன் லைன்' விளையாட்டிற்கான, 'ஆப்'வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள், ப்ளூவேல், மோமோ என, பல்வேறு பெயர்களில், 'ஆப்'கள் துவங்கி, பலவீனமானவர் களை தற்கொலைக்கு துாண்டி வருகின்றனர். 

இதுபோன்ற விளையாட்டு களை தடை செய்ய, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பெற்றோர், தங்கள் குழந்தைகள், நள்ளிரவு மற்றும் அதிகாலையில், கணினி மற்றும் மொபைல் போனில், நேரத்தை அதிகமாக செலவிடுகின்றனரா என, பார்க்க வேண்டும். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில், மாணவர்களின் செயல்பாடுகளை, ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால், அவர்களுடன் பேசி, சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடக்கம்!

தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடக்கம்!

அங்கன்வாடி பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் தொடங்குவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை மாதிரி பள்ளிகளில் மட்டுமே LKG,UKG வகுப்புகள் நடைபெற்று வருகிறது என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகள் துவக்கம் - சற்று நேரத்தில் துவக்கி வைக்கிறார், அமைச்சர் செங்கோட்டையன்.
முதல்கட்டமாக 32 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி, யு.கே.ஜி., துவக்கம்.
அடுத்த கல்வி ஆண்டில் 35, 000 அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்படும்

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு ! வருமான வரி பற்றிய முக்கிய செய்தி

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு ! வருமான வரி பற்றிய முக்கிய செய்தி



நிதி ஆண்டிற்கு Quarter 1,2,3&4 என வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் அதை தாங்கள்தான் தாக்கல் செய்ய வேண்டும் என அலுவலர் (Drawing Officer) கூறியிருப்பார்.........
Income Tax Act -1961 ல் Section 203 ன் படி சம்பளம் பெற்று தரும் அலுவலர் தான் நாம் வாங்கும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து மத்திய அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.
சம்பளம் வழங்கும் அலுவலர் Section 203 ன் படி Quarter 1,2,3&4 ல் நமது வங்கி கணக்கில் வழங்கப்பட்ட  ஊதியம் (credited pay) மற்றும் ஊதியத்தில் பிடித்தம் செய்த வருமான வரி தொகை (Amount of Tax Deducted) , அரசு
ஊழியரின் வருமான வரி தொகையை மத்திய அரசின் கணக்கில் BIN (Book Identification Number) அல்லது CIN (Challan Identification Number) வழியாக செலுத்தியதை Rule 31(1)(a) ன் Form -16 Part A உறுதிமொழி படிவம் , Part B நிதி ஆண்டில் வழங்கிய ஊதியம் மற்றும் வருமான வரி பிடித்தம் செய்த தொகை Annexure நமக்கு வழங்க வேண்டும். இதனுடன் Income Tax Return Form அதாவது ITR-V தர வேண்டும்....
நாம் எவ்வித பணமும் யாரிடமும் கொடுக்க தேவையில்லை...
பணம் கொடுக்காமல் இருந்தால் நமக்கு அலுவலர் கட்டாயம் Income Tax Return Form (ITR-V) வழங்கிவிடுவார்..... 
பின் சதுரங்க வேட்டை படம் மாதிரி நம் மனதை வசியப்படுத்தும் வார்த்தையாக அரசு ஊழியர்களே தாங்கள் ஏதேனும் வங்கியில் Loan பெற சென்றால் Form-16 கட்டாயம் தேவைப்படும். ஆகையால், Form-16 தேவைப்படுபவர்கள் ரூ.200 கொடுத்து வாங்கி கொள்ளுங்கள் என கூறும் நிலை தொடரும்.....
வருமான வரி தாக்கல் செய்யும் போதே Automatically generate
Form -16 ...... .                            
வருமான வரி பிடித்தம் செய்வது சம்பளம் வழங்கும் அலுவலரின் கடமை. Form-16 வழங்குவதும் Drawing Offer கடமை.
தமிழ்நாடு  நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி வருமான வரி பிடித்தம் IT சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர்.
தங்களது ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து Form-16 ஐ சம்பளம் வழங்கும் அலுவலர் தர மறுத்தால் புகார் அளிக்கும் முகவரி
The Commissioner,
Income Tax (TDS) ,
7th Floor , New Block,
Aayakar Bhawan,
121, M.G.Road ,
Chennai-34.

1 முதல் 5 வரை , 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு அடுத்தாண்டு முதல் சீருடை : பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்

1 முதல் 5 வரை , 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு அடுத்தாண்டு முதல் சீருடை : பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த மாதத்திற்குள் 3 ஆயிரம்
பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
14417 என்ற உதவி எண் மூலமாக மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் முதல் வாரத்திலேயே நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பிளஸ்-டூ முடித்தவுடன் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.11, 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1 முதல் 5 வரை , 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு அடுத்தாண்டு முதல் சீருடை மாற்றப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேல்நிலைப் பள்ளிகளை கணினி மயமாக்க ரூ.490 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார். ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கையை குறைத்தது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் விரைவில் பேச உள்ளேன் என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார். மீண்டும் பழைய எண்ணிக்கைப்படியே தமிழகத்துக்கு விருதுகள் வழங்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆள்பாதி, ஆடைபாதி என்ற அடிப்படையில் சீருடை மாற்றப்படுகிறது என அவர் கூறியுள்ளார். வழக்குகள் காரணமாக தான் சென்ற ஆண்டு லேப்டாப் வழங்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

டிசம்பர் 31-க்குப் பின் உங்கள் ஏடிஎம் கார்டு வேலை செய்யாமல் போக வாய்ப்பு!

டிசம்பர் 31-க்குப் பின் உங்கள் ஏடிஎம் கார்டு வேலை செய்யாமல் போக வாய்ப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ அன்மையில் மேக்னட்டிக் டேப் உள்ள பழைய ஏடிஎம் டெபிட் கார்டுகள வேலை செய்யாது என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.
பழைய கார்டுகள் வைத்துள்ள வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கு உள்ள கிளைகளுக்குச் சென்று சிப் வைக்கப்பட்டுள்ள கார்டுகளுக்காகக் கோரிக்கையினை அளிக்குமாறும் தெரிவித்துள்ளது.
டிவிட்டர் அறிவிப்பு
எஸ்பிஐ வங்கி டிவிட்டரில் ஆர்பிஐ விதிகளின் படி 2018-ம் ஆண்டுக்கு பிறகு பழைய மேக்னட்டிக் டேப் உள்ள எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் செல்லாது என்றும், இந்தக் கார்டு மாற்ற முறை பாதுகாப்பானது என்று கட்டணம் ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
எனவே எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளை மாற்ற கோரிக்கையினை அளிக்குமாறும் டிசம்பர் 31 வரை செய்யவில்லை என்றால் பழைய கர்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் செல்லாது என்று கூறுகின்றனர்.
சுதேசி
இந்தியாவின் நம்பர் 1 சுதேசி நிறுவனம் என்ற பெயரினை பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ பெற்றுள்ளது. நிதி துறையிலும் எஸ்பிஐ-க்கு அடுத்தபடியாக எல்ஐசி நிறுவனம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் - முழு பட்டியல்

தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் - முழு பட்டியல்




72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நல் ஆளுமை விருதுகளை தமிழக முதல்வர் பழனிசாமி புதன்கிழமை வழங்கினார்.
விருது பெற்றவர்களின் விவரங்கள்
1. டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, 2018
தக்ஷா குழு,  வான்வெளி ஆராய்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஆசிரிய உறுப்பினர்கள்/ ஆலோசகர்கள்
1. முனைவர் எஸ்.தாமரைச்செல்வி, இயக்குநர்,
   தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான மையம்,
   அண்ணா பல்கலைக்கழகம்.
2. முனைவர் கே.செந்தில்குமார், இயக்குநர்,
   வான்வெளி ஆராய்ச்சி மையம்,
   அண்ணா பல்கலைக்கழகம்.
3. ஸ்ரீ சி.யு. ஹரி, முதுநிலை   திட்ட ஆலோசகர்,
  வான்வெளி ஆராய்ச்சி மையம்,
  அண்ணா பல்கலைக்கழகம்.
4. முனைவர்.ஏ.மொகமது  ரஷீத், திட்ட அறிவியலாளர்,
  வான்வெளி ஆராய்ச்சி மையம்,
  அண்ணா பல்கலைக்கழகம்.

2. துணிவு மற்றும் சாகச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது
சிறுத்தை புலியை விறகு கட்டையால் தனி ஆளாக விரட்ட மகளை காப்பாற்றிய செயலுக்காக கோவை வால்பாறையில் உள்ள பெரியகல்லார் கிராமத்தின் ஐ. முத்துமாரிக்கு வழங்கப்படுகிறது.
3. முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள்
(i) பதிவுத் துறை - ‘Project-Star 2.0’ என்ற இணைய மென்பொருள் மூலம் பொதுமக்களுக்கு துரிதமான பதிவு மற்றும் இணைய சேவைகளை வழங்குதல்
(ii) உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை - தமிழ்நாட்டில் பொது விநியோக முறையினை ‘End-to-end’ முறையில் கணினிமயப்படுத்துதல் (வகை-அமைப்பு)
iii) மாநில நலவாழ்வு சங்கம் - TAIE -  தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால விழிப்புணர்வு முயற்சி
(iv) பண்டி கங்காதர், இ.கா.ப, காவல் கண்காணிப்பாளர், தருமபுரி மாவட்டம் - பண்பு, மனநிலை முதலியவற்றை மேம்படுத்துவதன் மூலமும், இணக்கமான பணியிட சூழ்நிலையினை உருவாக்குவதன் மூலமும் காவல் நிலையம் பற்றிய பொதுவான கருத்தை மாற்றியமைப்பதே
(v) (அ) காவேரி தொழில் நுட்பக் குழுமம்
      (ஆ) திரு. ஆர். சுப்ரமணியன், தலைவர், காவேரி தொழில் நுட்பக் குழுமம்.
உச்ச நீதிமன்றத்தில் மாநிலங்களுக்கிடையேயான நிதிநீர் பிரச்சினைகளில் இருந்த சட்டப்பூர்வமாக வழக்குகளில் ஆலோசனை செய்தல், தொடார்புடைய ஆவணங்களை சேகரித்தல் உள்ளிட்டவற்றில் பங்களித்ததற்கு
4. மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ் நாடு அரசு விருதுகள்
(i) சிறந்த மருத்துவர் - டாக்டர். பா.செந்தில்குமார், எம்.எஸ். (ஆர்த்தோ), திருப்பூர்
பா.செந்தில்குமார் 15 ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவை புரிந்து வருகிறார்.
(ii) சிறந்த சமூகப் பணியாளர் - முனைவர். லதா இராஜேந்திரன், தாளாளர் / முதல்வர், டாக்டர் எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர்.தோட்டம்
லதா இராஜேந்திரன், டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளராகவும், முதல்வராகவும் பணியாற்றி வருகிறார். காது கேளாத குழந்தைகளுக்கு கறபித்தலுக்கான சிறப்பு கல்வித்தகுதி பெற்றுள்ள இவர் காதுகேளாத மற்றும் பேச இயலாத குழந்தைகளின் மேம்பாட்டிற்காக கடந்த 28 ஆண்டுகளாக சீரிய முறையில் பணியாற்றி வருகிறார்.
(iii) சிறந்த தொண்டு நிறுவனம் - அறிவாலயம்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையம், கைலாசபுரம், திருச்சி
அறிவாலயம் எனும் தொண்டு நிறுவனம் 1977ம் ஆண்டு ஏழு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் துவங்கப்பட்டு தற்போது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி மற்றும் மறுவாழ்வு மையம் என வளர்ச்சி பெற்று தற்போது 180 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி குறையுடையோர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
(iv) மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த “சிறந்த தனியார் நிறுவனம்” - டெட்டி எக்ஸ்போர்ட்ஸ், தென்காசி ரோடு, திருமங்கலம், மதுரை
டெட்டி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 312 பணியாளர்களை பணியமர்த்தி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி செயல்பட்டு வருகிறது.
(v) மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக செயல்படும் “சிறந்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி” - சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிமிடெட்
சேலம், மத்தியக் கூட்டுறவு வங்கி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலுள்ள கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வாழந்து வரும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது.
5. மகளிர் நலனுக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருது
(i) சிறந்த தொண்டு நிறுவனம் (மகளிர் நலனுக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றியதற்காக) சிறந்த சமூக சேவகர்
எம்.சிவக்குமார் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம், கோவை
சிறந்த முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பணியாற்றி வரும் நிறுவனத்தின் தலைவர், கோவை.
 
(ii) சிறந்த சமூகப் பணியாளர் (மகளிர் நலனுக்காக சிறப்பாகத் தொண்டாற்றியது) சிறந்த தொண்டு  நிறுவனம்
RIVER – THE POWER OF WOMAN - கீழ்பாக்கம், சென்னை
6. சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள்:
சிறந்த மாநகராட்சி - திருப்பூர், பரிசுத் தொகை : ரூ.25 லட்சம்
சிறந்த நகராட்சிகள்:
முதல் பரிசு - கோவில்பட்டி - ரூ.15 லட்சம்
இரண்டாம் பரிசு - கம்பம் - ரூ.10 லட்சம்
மூன்றாம் பரிசு - சீர்காழி - ரூ.5 லட்சம்
சிறந்த பேரூராட்சிகள்:
முதல் பரிசு - ஜலகண்டாபுரம், சேலம் - ரூ.10 லட்சம்
இரண்டாம் பரிசு - பழனிசெட்டிபட்டி, தேனி - ரூ.5 லட்சம்
மூன்றாம் பரிசு - பாலகோடு, தருமபுரி - ரூ.3 லட்சம்
7. முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள்:
இவ்விருது ரூ.50,000/- ரொக்கப்பணம், பாராட்டுச் சான்று மற்றும் பதக்கம் கொண்டதாகும்.
ஆண்கள் பிரிவு:
1. சி. பாஸ்கரன், தேனி
இவர், தனது கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச தனிப்போதனை (Tuition) வகுப்புகளை நடத்தி, இளைஞர் மன்றம் மூலம் பல்வேறு சமூக செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
2. அ. மகேஷ், கடலூர்
இவருக்கு இவ்விருதானது, வயது முதிர்ந்த, ஆதரவற்ற மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு ஆற்றிய சீரிய தன்னார்வ சேவைக்காக வழங்கப்படுகிறது.
பெண்கள் பிரிவு:
சு. அஷ்வீதா, திருநெல்வேலி
இவருக்கு இவ்விருதானது, இவர் உருவாக்கிய a Bodhi Tree Skills Foundation மூலமாக கிராமப்புற பட்டதாரிகளின் மேம்பாட்டிற்கு திறன் பயிற்சி வழங்கும் இவருடைய சீரிய முயற்சிக்காக வழங்கப்படுகிறது

விருது

விருது


சிறுத்தையை விரட்டியடித்து மகளைக் காப்பாற்றிய பெண்: கல்பனா சாவ்லா' விருது பெற்றார்


கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறுத்தையை விரட்டி அடித்த வால்பாறையைச் சேர்ந்த ஐ.முத்துமாரிக்கு, கல்பனா சாவ்லா விருதை வழங்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தைப் புலியை விறகுக் கட்டையால் விரட்டி அடித்து தனது மகளை ஒற்றை ஆளாய் நின்று காப்பாற்றிய பெண் முத்துமாரிக்கு துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான விருது வழங்கப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கிய பல்வேறு விருதுகல் விவரம்:


கல்பனா சாவ்லா விருது:

 வால்பாறை வட்டம் பெரியகல்லாறைச் சேர்ந்த ஐ.முத்துமாரிக்கு, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. இவ்விருது ரூ.5 லட்சம் காசோலை, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம், சான்றிதழ் அடங்கியது.
முத்துமாரியின் மகள் சத்தியாவை அவரது வீட்டின் பின்புறம் சிறுத்தைப் புலி இழுத்துச் சென்றது. மகளின் அலறல் சப்தம் கேட்டு வந்த முத்துமாரி, விறகுக் கட்டையால் சிறுத்தைப் புலியை தனி ஆளாக அடித்து விரட்டினார். இதற்காக அவருக்கு விருதளிக்கப்பட்டது.

14 ஆக., 2018

Aug15.. கிராம சபையில் கலந்து கொள்ளுவோம். முக்கியத்துவத்தை உணர்த்துவோம்....

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

பக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்!! மத்திய அரசு அறிவிப்பு!!

பக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்!! மத்திய அரசு அறிவிப்பு!!

 

முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை .

முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை .

1193  : முஹம்மது கோரி
1206   :குத்புதீன் ஐபக்
1210   :ஆரம்ஷா
1211  : அல்தமிஷ்
1236  : ருக்னுத்தீன் ஷா
1236  : ரஜியா சுல்தானா
1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா
1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத்
1266  : கியாசுத்தீன் பில்பன்
1286  : ரங்கிஷ்வர்
1287  : மஜ்தன்கேகபாத்
1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)
கில்ஜி வம்சம்
1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292  :அலாவுதீன் கில்ஜி
1316  :ஷஹாபுதீன்  உமர் ஷா
1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா
1320  : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா
( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)
துக்ளக் வம்சம்
1320  :கியாசுத்தீன் துக்ளக்
1325  :  முஹம்மது பின் துக்ளக்
1351  :பெரோஸ்ஷா துக்ளக்
1388  : கியாசுத்தீன் துக்ளக்
1389 : அபுபக்கர்ஷா
1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394  :அலெக்சாண்டர் ஷா
1394  : நாஸிருத்தீன் ஷா
1395  : நுஸ்ரத் ஷா
1399  :நாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413  :தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)
சையித் வம்சம்
1414  :கஜர்கான்
1421  :மெஹசுத் தீன் முபாரக் ஷா
1434  :  முஹம்மது ஷா
1445  :அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)
லோதி வம்ச ஆட்சி
1451  : பெஹ்லூல் லோதி
1489  : அலெக்சாண்டர் லோதி
1517  : இப்ராஹிம் லோதி
 (லோதி ஆட்சி 75 வருடம்)
முகலாயர் ஆட்சி
1526  : ஜஹிருத்தீன் பாபர்
1530 : ஹிமாயூன்
சூரி வமிச ஆட்சி
1539   : ஷேர்ஷா சூரி
1545  :அஸ்லம் ஷா சூரி
1552  :மெஹ்மூத் ஷா சூரி
1553   :இப்றாஹிம் சூரி
1554  :பர்வேஸ் ஷா சூரி
1554 :முபாரக் கான் சூரி 1555 :அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)
முகலாயர் ஆட்சி
1555  :ஹிமாயூன்
1556  :ஜலாலுத்தீன் அக்பர்
1605  :ஜஹாங்கீர் சலீம்
1628  :ஷாஜஹான்
1659 : ஒளரங்கசீப்
1707 :ஷாஹே ஆலம்
1712  :பஹதூர் ஷா  1713 :பஹாரோகஷேர்   1719  :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
1754  :ஆலம்கீர்  1759 :ஷாஹேஆலம்
1806 :அக்பர் ஷா
1837 :பஹதூர்ஷா ஜஹபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )
ஆங்கிலேயர் ஆட்சி
1858 : லார்டு கேங்க்
1862 :லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864 : லார்ட் ஜான் லோதேநஷ்
1869 :லார்டு ரிசர்டு
1872 :லார்டு நோடபக்
1876 ;லார்டுஎட்வர்ட்
1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884 :லார்டு டப்ரின்
1894 :  லார்டு ஹேஸ்டிங்
1899 : ஜார்ஜ்கர்னல்
1905: லார்டு
கில்பர்ட்
1910 :லார்டு
சார்லஸ்
1916 :லார்ட் பிடரிக்
1921 : லார்ட் ரக்ஸ்
1926:.லார்ட் எட்வர்ட்
1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
1936 :லார்டு ஐ கே
1943:லார்டு அரக்பேல்
1947 : லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)
சுதந்திர இந்தியாவின் ஆட்சி
1947:ஜவஹர்லால் நேரு
1964:குல்சாரிலால் நந்தா
1964:லால் பகதூர் சாஸ்திரி
1966:குல்சாரிலால் நந்தா
1966: இந்திராகாந்தி
1977: மொராஜி தேசாய்
1979: சரண்சிங்   1980:இந்திராகாந்தி
1984:ராஜீவ்காந்தி
1989:V P சிங்
1990:சந்திரசேகர்
1991:. P.V. நரசிம்மராவ்
1996 A.B.வாஜ்பாய் 13 நாள் ஆட்சி
1996:  A.J. தேவகொளடா
1997: I.K.குஜ்ரால்
1998:A.B.வாஜ்பாய்
2004 :மன்மோஹன்சிங்
2014:நரேந்திர மோடி

நாட்டின் 72-வது சுதந்திர தின விழா - முதல்வர் வாழ்த்துச்செய்தி!

நாட்டின் 72-வது சுதந்திர தின விழா - முதல்வர் வாழ்த்துச்செய்தி!

இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கவும் அனைவரும் உழைக்க வேண்டும் என சுதந்திர வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 72-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் விடுதலைப் போராட்ட தியாகிகளைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அவர்களின் பிறந்தநாள் அன்று தமிழக அரசின் சார்பில் விழா கொண்டாடப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றவும் அனைவரும் சாதி, மதங்களை கடந்து உழைக்க வேண்டும் என முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

செப்டம்பரில் இலவச சைக்கிள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

செப்டம்பரில் இலவச சைக்கிள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


1ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஏழைகள் இல்லா தமிழகம் உருவாக கல்வி ஒன்றேதேவை என்பதை கருத்தில்கொண்டு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8 வழிச்சாலை திட்டத்தில் தேவையான இடங்களில் மேம்பாலங்கள் சுரங்கவழிப்பாதைகளும் அமைக்கப்படும் என்றார்.

JIO-சுதந்திர தின விழா சிறப்புச் சலுகைகள் என்ன தெரியுமா?

JIO-சுதந்திர தின விழா சிறப்புச் சலுகைகள் என்ன தெரியுமா?

துறையில் ஒவ்வொரு நாளும் புதிய
புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டி வரும் ஜியோ, இண்டர்நெட் தொலைக்காட்சி சேவைகளுடன் அதி விரைவு அகன்ற அலைவரிசைகளை மாதம் 500 ரூபாய் கட்டணத்தில் வழங்க முடிவு செய்துள்ளது.
சுதந்திர தின விழா சிறப்புச் சலுகைகளை அறிவித்த முகேஷ் அம்பானியின் ஜியோ, தீபாவளித் திருநாளில் வெகுஜன மக்களின் வீடுகளில் மகிழ்ச்சி பட்டாசுகளைக் கொளுத்திப் போட தயாராகி விட்டது. இதனால் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் நெருக்கடி உருவாகியுள்ளது.
ஜிகோ பைபர் சேவை
இந்த ஆண்டுத் தீபாவளித் திருநாள் நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதற்குள் ஜிகா பைபர் என்ற சேவையை வணிக ரீதியில் நடைமுறைப்படுத்த முடிவு செய்து விட்டது. நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் முதல், இரண்டாம் தர நகரங்களைக் குறி வைத்துள்ளது. 80 இடங்களில் இந்தச் சேவையைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களின் முன்பதிவு ஆகஸ்டு 15 ஆம் தொடங்க திட்டமிட்டுள்ளது.
  
அகன்ற அலைவரிசையில் சலுகை
தற்போது 100 வேகத்துடன் 100 ஜி.பி டேட்டாக்களைக் கொண்ட அகன்ற அலைவரிசை சலுகைப் பொதிகளைக் கம்பிவட இயக்குநர்கள் வழங்கி வருகிறார்கள். இதற்கு 700 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரையிலும் வசூலிக்கும் அவர்கள், தொலைக்காட்சி சேவைகளுக்கு 250 முதல் 300 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். இதே அளவு சலுகைகளுடன் 50 விழுக்காடு தள்ளுபடிகளை வழங்க ஜியோ முடிவு செய்துள்ளது.
  
பாதிப்பு இல்லை
4 ஜி மொபைல் டேட்டாவுக்கு வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட, வீடுகளுக்கான அகன்ற அலைவரிசை சேவைகளுக்கான கட்டணம் 20 முதல் 30 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 4 ஜி மொபைல் சேவைகளுக்கான வணிகத்தைப் பாதிக்காது என்று தொலைத் தொடர்புதுறை திறனாய்வாளர் நவீன் குல்கர்னி கூறினார்.
  
வித்தியாசப்படுத்தும் ஜியோ
மொபைல் 4 ஜிக்கு வழங்கும் டேட்டாவும், வீடுகளுக்கான அகன்ற அலைவரிசையும் பயன்பாட்டில் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 4 ஜி மொபைல் டேட்டாவை விடப் பைபர் அடிப்படையிலான அகன்ற அலைவரிசை நம்பகமானதாக இருக்கும் என்பது குல்கர்னியின் கருத்தாக உள்ளது.
  
நெருக்கடியில் போட்டியாளர்கள்
தொலைத் தொடர்பு துறையில் இதுபோன்ற அறிவிப்புகள் ஜியோவை வேறுபடுத்திக் காட்டுவதாகவும், மற்ற போட்டியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஹெடல் காந்தி என்ற வல்லுநர் தெரிவித்துள்ளார். இதனால் வாடிக்கையாளர்கள் பலன் பெற வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.
  
ஒரு சின்ன யோசனை
இண்டர்நெட் அடிப்படையிலான தொலைக்காட்சி சேவைகளை ஐ.பி மல்டி கேஸ்டிங் தொழில்நுட்பத்துடன் விரிவுபடுத்த ஜியோ திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.தொலைக்காட்சி சேவைகளுக்கு மட்டும் 500 முதல் 600 ஜி.பி வழங்க வேண்டும் என்றும், இதற்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிப்பது நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் எச்.எஸ்.பி.சியின் நிர்வாகி சர்மா யோசனை கூறியுள்ளார்

இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு - 24 மணி நேரத்தில் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு - 24 மணி நேரத்தில் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


இந்தியாவிலேயே முதன்முறையாக
பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் நாகதேவன் பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலைந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 14417 என்ற எண் மூலம் கொடுக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.

கணினி ஆசிரியர்கள் கவனத்திற்கு :முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிநாடுநர் தெரிவு சார்பான அறிவிக்கை:CM CELL RPLY..

கணினி ஆசிரியர்கள் கவனத்திற்கு :முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 

பணிநாடுநர் தெரிவு சார்பான அறிவிக்கை:CM CELL RPLY..


இணைய தளத்திற்கு தமிழ் பெயர்கள் விரைவில் அமலுக்கு வருகிறது

இணைய தளத்திற்கு தமிழ் பெயர்கள் விரைவில் அமலுக்கு வருகிறது

இணைய தளத்திற்கு தமிழ் பெயர்கள் விரைவில் அமலுக்கு வருகிறது


*பிராந்திய மொழிகளில் இணையதளங்களுக்கு பெயரிடும் வசதி, விரைவில் அமலுக்கு வரவுள்ளது.டி.என்.எஸ்., எனப்படும், உலகளாவிய, இணையதள பெயர் சூட்டும் நடைமுறையை, ஐ.சி.ஏ.என்.என்., எனப்படும், பெயரிடல் மற்றும் எண்களுக்கான இணையதள கழகம் என்ற நிறுவனம் பொறுப்பேற்று செயல்படுத்தி வருகிறது*




*இந்த நிறுவனம், இந்தியாவில் உள்ள, தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளில் இணையதள பெயர் சூட்டும் நடைமுறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது*
*முதற்கட்டமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, பெங்காலி, தேவநாகரி, குஜராத்தி, குர்முகி ஆகிய ஒன்பது, இந்திய மொழிகளில், இணையதளங்களுக்கு பெயரிடும் பணிகள் நடக்கின்றன*


*இதை, ஐ.சி.ஏ.என்.என்., நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர், சமிரான் குப்தா தெரிவித்துள்ளார்.இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், தமிழ் தொடர்பான இணையதளங்களின் பெயர்களை, தமிழிலேயே தட்டச்சு செய்து, பெற முடியும்*


 *தற்போதைய நடைமுறையில், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, சம்பந்தப்பட்ட இணையதள முகவரியை பெறும் வசதி மட்டுமே உள்ளது.உலக மக்கள் தொகையில், 52 சதவீதம் பேர், இணையதளம் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள, ஆங்கிலம் தெரியாத, 48 சதவீத மக்கள், அவர்களின் சொந்த மொழிகளில் தட்டச்சு செய்து இணையதளத்தை பெறுவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், சமிரான் குப்தா கூறினார்*

TNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி ?

TNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி ?
கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம்.

முதன்முதலாக தேர்வு எழுதுவோர், 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.

தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான கணிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும்.

 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும் செய்தித்தாள்களைப் படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும்.

 அறிவியல் பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். கம்ப்யு ட்டர் சயின்சில் அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யு ட்டர் குறித்த, இயல்பான அறிவே போதும்.

பாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், 10 மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும். முந்தைய வினாத்தாளை படிப்பதும் அவசியம்.

 முக்கிய குறிப்புகள்:

தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.

 அடிப்படையாக இந்த மூன்றும் முக்கியம்...!

ஒரு போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர், மொழியறிவு நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் மிக அவசியம். ஏனென்றால் பெரும்பாலும் போட்டித் தேர்வுகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் தான் கேள்விகள் கேட்கப்படும்.

குறிப்பாக மொழிப் பாடத்துக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு, பொது அறிவு மிக மிக முக்கியம்.

மூன்றாவதாக அடிப்படை கணித அறிவு முக்கியம். இந்த மூன்றும் இருந்தாலே யார் வேண்டுமானாலும் குரூப் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம்.

பொது அறிவைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியான உடன் படிக்கத் தொடங்குவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. பொது அறிவு குறித்த தேடல்கள் எப்போதும் உங்களுக்குள் இருக்க வேண்டும். இதற்கென தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பிற்காக ஒதுக்க வேண்டும்.

பொருளாதார சுழ்நிலையோ, சமூகக் காரணியோ உங்கள் முயற்சியை தடுக்க முடியாது. உங்கள் முயற்சி மட்டுமே உங்களுக்கான வெற்றியைத் தரும். நீங்கள் வெற்றி பெற்றால், அதற்கு பல பேர் காரணமாக இருக்கலாம் தோல்வியுற்றால் நீங்கள் மட்டும்தான் காரணம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

 வினாத்தாள் பற்றிய விவரங்கள்:

பொதுத் தமிழ் அல்லது  பொது ஆங்கிலம் பகுதியில் கேட்கப்படும் வினாக்கள் : 100 வினாக்கள்

பொது அறிவு பாடப்பகுதியில், எந்தப் பகுதியில் எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்று உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது. அறிந்து கொள்ளுங்கள்!!!

 1. வரலாறு - 16 வினாக்கள்
 2.பொருளாதாரம் - 09 வினாக்கள்

 3. அரசியல் அறிவியல் - 08 வினாக்கள்

 4. புவியியல் - 06 வினாக்கள்

 5. இயற்பியல்  - 04 வினாக்கள்

 6. வேதியியல் - 03 வினாக்கள்

 7.தாவரவியல் - 02 வினாக்கள்

 8. விலங்கியல்  - 06 வினாக்கள்

 9. முக்கிய தினங்கள், திட்டங்கள்  -  03 வினாக்கள்

 10. கணிதம் - 25 வினாக்கள்

 11. நடப்பு நிகழ்வுகள் - 18 வினாக்கள்


11 ஆக., 2018

சுதந்திர தினவிழாவில் பள்ளிகளில் மரக் கன்றுகள் நட வேண்டும்

சுதந்திர தினவிழாவில் பள்ளிகளில்நட வேண்டும்




சுதந்திர தினவிழாவில் பள்ளிகளில் மரக் கன்றுகள் நட வேண்டும்*


*🌐தமிழகத்தில் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவையொட்டி அன்றைய தினம் 
மரக்கன்றுகள் நடுதல் வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது*


*🌐இது தொடர்பாக தொடக்க கல்வித்துறை இயக்குநர் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது*


 *🌐நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்குகின்ற உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மிகச் சிறப்பான முறையில் ஆக.15 புதன்கிழமையன்று சுதந்திரதினவிழாவைக் கொண்டாட வேண்டும்*


*🌐போட்டிகள் நடத்த வேண்டும்*


 *🌐இதையொட்டி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி அளவிலும், ஒன்றிய அளவிலும் மாணவர்களிடையே நாட்டுப்பற்றையும், பண்பாட்டையும் வளர்க்கும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை நடத்த வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு சுதந்திர தினவிழாவில் பரிசுகள் வழங்க வேண்டும்*


*🌐சுதந்திர தின விழா அன்று அனைத்துப் பள்ளிகளிலும் மரக்கன்றுகள் நடுதல் வேண்டும். மரக்கன்று நடுவதற்கு இடங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களை மரக் கன்றுகளை நட்டு அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்*


 *🌐பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் வனத் துறையுடன் தொடர்பு கொண்டு மரக்கன்றுகளை இலவசமாகப் பெற்று பள்ளி வளாகத்தில் நடச் செய்ய வேண்டும்*


*🌐மேலும் பள்ளிகளில் அன்றைய தினம் காலை 9.30 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். நாட்டுப் பற்று, பண்பாடு, கலாசாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் என அதில் கூறியுள்ளார்*

5 ஆக., 2018

நீங்கள் தொடர்ந்து காப்பி குடிப்பவர்களா? இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

நீங்கள் தொடர்ந்து காப்பி குடிப்பவர்களா? இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்


பலருக்கு ஒரு குறை இருக்கின்றது.
அது என்னவெனில் அவர்களுக்கு காபி குடிக்காமல் இருக்க முடிவதில்லை என்ற குறைதான். காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி மண்டையை உடைத்து விடுகின்றது என்பார்கள்.


காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்களுக்கு இருதய படபடப்பு, தூக்கமின்மை இவையெல்லாம் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் முடிந்தால் காபியினை தவிர்த்து விடுங்கள் என்றே அறிவுறுத்தப்படுகின்றது.
காபி, டீ, கோகோ இவைகளில் காபின் என்ற பொருள் உள்ளது. இது சக்தியினை தூண்டி விடும் பொருள். காபியினை நிதான அளவில் குடிப்பவர்களுக்கு நடுக்குவாதம் எனப்படும் parkinsons நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்றே ஆய்வுகள் கூறுகின்றன. 
அதே போல் அளவான காபி அருந்துபவர்களுக்கு மறதி நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. சில ஆய்வுகள் காபின் மூளை வீக்கத்தினைக் கூட தவிர்க்கின்றது என்று கூறியுள்ளன. வீக்கமே பல நோய்களுக்கு காரணம் எனப்படும் நிலையில் காபீனில் உள்ள அமினோ அமிலங்கள் வீக்கங்களை குறைக்க உதவுவதாகவே சமீபத்திய ஆய்வு கூட கூறுகின்றது. 
நிதான அளவில் காபி குடிப்பவர்களுக்கு மனஉளைச்சல் குறைகின்றது. சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு குறைகின்றது. ஆனால் சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குக் கூடுகின்றது. 
நிதான அளவு காபி இருதய பாதிப்பினால் ஏற்படும் இருதய அபாயத்தினைக் குறைக்கின்றது. சில குறிப்பிட்ட வகை புற்று நோய்களையும் 27 சதவீதம் வரை குறைக்கின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. 
அப்படியென்றால் காபி நல்லதா? என்றால் நல்லது என்பதற்கு ஒரு அளவு கோல் இருக்கின்றது. இந்த, ஆய்வுகள் வெளி நாடுகளில் நடப்பவை. ‘சிக்கரி’ கலப்பு இல்லாதவை. காபி டிகாஷனும் அடர்த்தியாக இராது மெல்லியதாக இருக்கும். அவர்கள் குடிக்கும் காபியில் பால் கூட இராது. நம்ம ஊர் பழக்கம் அப்படி அல்ல.
அடர்த்தியான டிகாஷன், தண்ணி கலக்காத அடர்த்தியான பால். காபி பொடி சிக்கரி கலந்தது. பல இடங்களில் காபி பொடியில் கலப்படங்கள் வேறு உள்ளன. 
டிகிரி காபி என்ற பெயரில் காபியினை கூழ் போல் ஒரு பெரிய டம்ளரில் குடிக்கின்றோம். அதுவும் ஒருமுறை அல்ல. அடிக்கடி குடிக்கின்றோம். இரவில் கூட காபி அருந்துபவர்கள் அநேகர் உண்டு. காலையிலும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக திராவகம் போல் இதனை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை இவ்வாறு செய்வதால் பின்பு தீமைகள் விளைகின்றன.
காபி குடித்துத்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் மனிதனுக்குக் கிடையாது. அப்படி குடிக்கும் பழக்கம் இருந்தால் தரமான பொடியினை பயன்படுத்துங்கள். பகல் 12 மணிக்கு மேல் குடிக்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகோ அல்லது 11 மணி அளவில் 2 மாரி பிஸ்கட்டுடனோ அருந்துங்கள். டிகிரி காபி உங்கள் வயிற்றை புண்ணாக்கி விடும் என்பதனை உணருங்கள். 

Google Maps! Latest Update for Bikers!

Google Maps! Latest Update for Bikers!

உலகின் எந்த மூலைக்கும் கூகுள்
தரைப்பட உதவியுடன் எளிதில் செல்லலாம். அந்த அளவு சாலை பற்றிய அனைத்து விஷயங்களையும் தெளிவான தகவல்களையும் நமக்குத் தருகிறது. இதுமட்டுமல்லாது அருகில் உள்ள உணவகங்கள், மருத்துவமனைகள், விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைக்கூட எளிதில் அடையாளம் காட்டி அதற்கான வழியையும் அதுவே சொல்லிவிடும்.
தற்போது கார் ஓட்டுநர்களின் தவிர்க்க முடியாத நண்பனாக மாறியுள்ளது கூகுள் தரைப்படம். இந்த நிலையில், உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத ஒரு புது மற்றும் பிரத்யேக வசதியை இந்தியாவுக்காக வழங்க உள்ளது கூகுள் நிறுவனம். இந்தியாவில் கார்கள், லாரிகளைவிட அதிகமாக இரு சக்கர வாகனங்களே பயன்பாட்டில் உள்ளன.
அதனால் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கென தனிப்பட்ட வழிக்காட்டுதல்களை கூகுள் வெளியிட உள்ளது. கார்கள் மற்றும் பெரிய வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில்கூட இருசக்கர வாகனங்களால் எளிதில் நுழைய முடியும். தற்போது கூகுள் கொண்டுவர உள்ள இந்தச் சேவை சில எளிய வழிகளை இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு காண்பிக்கும்.




அதுமட்டுமல்லாது, நாம் செல்லும் பாதையில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் அட்டவணைகள், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவற்றின் அட்டவணைகளையும் இனி கூகுள் மேப் மூலம் பார்த்துக்கொள்ளலாம். தற்போது கூகுள் வீட்டுவசதி துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் இனி கூகுள் தரைப்படத்திலேயே அருகில் உள்ள பொதுக் கழிப்பிடங்களையும் அறிந்துகொள்ளலாம். என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

9 மாதங்களில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம் - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன்

9 மாதங்களில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம் -  பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன்

மாணவர்களின் கனவை நனவாக்குவதே
புதிய பாடத் திட்டத்தின் நோக்கம்: பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன்

தமிழக மாணவர்களின் கனவை நனவாக்கும் நோக்கிலேயே புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு, வ.உ.சி. மைதானத்தில் ஆக. 3 முதல் ஆக. 14 வரை நடத்தப்படும் 14ஆவது புத்தகக் கண்காட்சியை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக கல்வித் துறையில் கடந்த ஓர் ஆண்டாக, பல முக்கியத் திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. பிற மாநிலங்களில் புதிய பாடத் திட்டத்தைக் கொண்டுவர இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழகத்தில் மாணவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு 9 மாதங்களில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

அரசுப் பள்ளிகளில் 50% மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை



அரசுப் பள்ளிகளில் 50% மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை





அரசுப் பள்ளிகளில் 50% மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை
நீட் தேர்வுக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் பயிற்சி வழங்க நடவடிக்கை; டிசம்பர் இறுதிக்குள் +2 முடித்த 25,000 மாணவர்களுக்கு சி.ஏ. பயிற்சி தர நடவடிக்கை
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் அவர்களின் அதிரடிநடவடிக்கை.இரவோடு இரவாக தகுதியான சத்துணவு பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் அவர்களின் அதிரடிநடவடிக்கை.இரவோடு இரவாக தகுதியான சத்துணவு பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

எவ்வித சமரசத்திற்கும் உட்படாத தங்களது நேர்மையைப் போற்றுகிறேன் அம்மா.

Image may contain: 1 person

4 ஆக., 2018

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:

70 கிலோ கிராம் எடையுள்ள


70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:

சிறிது #தண்ணீர் குடித்துவிட்டு வாசிக்கவும்...
70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.
மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.
உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.(MI@55)
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!!

இலவச சைக்கிள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரம் சேகரிப்பு

இலவச சைக்கிள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரம் சேகரிப்பு

இலவச சைக்கிள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரம் சேகரிப்பு*


*🚲இலவச சைக்கிள் வழங்க பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளின் அறிக்கையை தலைமை ஆசிரியர்கள்
தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது*


 *🚲தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் எவ்வளவு மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள் என்ற விவரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த காலத்தில் வழங்கப்படும்*


 *🚲இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது*



*🚲அதற்கான பட்டியல் அனுப்பும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது*



*🚲இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது*


*🚲அதன்படி 2017-18ம் ஆண்டு மற்றும் 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகளின் தேவைப்பட்டியல் விவரங்கள் சேகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென தனியாக ஒரு படிவம் கொடுக்கப்பட்டுள்ளது*


 *🚲அதில் மாணவ, மாணவிகளின் விவரங்கள், பள்ளிகளின் பெயர்கள், எத்தனை சைக்கிள் தேவைப்படுகிறது போன்றவை நிரப்பி அனுப்ப வேண்டும். இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது*


 *🚲அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களில் இன்னும் ஓரிரு நாட்களில் தலைமை ஆசிரியர்கள் அந்த பட்டியலை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்

2 ஆக., 2018

Skypeல் புதிய வசதி

Skypeல் புதிய வசதி


மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குச்
சொந்தமான ஸ்கைப் சேவை இணைய தொலைபேசி வசதியில் பிரபலம்.
தற்போது இணையத் தொலைபேசி சேவையான ஸ்கைப்பில் குரல் பதிவு வசதி அறிமுகமாகியுள்ளது.
உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டு கிளவுட்டில் சேமிக்கப்படும். டெஸ்க்டாப், ஸ்மார்ட்போனில் இந்த வசதியைப் பெறலாம். 
மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்றாலும் ஸ்கைப் முதன்முறையாக நேரடியாக இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. 
குரல் பதிவு செய்யப்படுவது பயனாளிகளுக்கு உணர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்கைப் சேவை இணைய தொலைபேசி வசதியில் பிரபலம். 
தற்போது இணையத் தொலைபேசி சேவையான ஸ்கைப்பில் குரல் பதிவு வசதி அறிமுகமாகியுள்ளது.
உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டு கிளவுட்டில் சேமிக்கப்படும். டெஸ்க்டாப், ஸ்மார்ட்போனில் இந்த வசதியைப் பெறலாம். 
மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்றாலும் ஸ்கைப் முதன்முறையாக நேரடியாக இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. 
குரல் பதிவு செய்யப்படுவது பயனாளிகளுக்கு உணர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.