BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

31 ஜூலை, 2018

TNPSC குரூப்-4 தேர்வில் 14 லட்சம் பேர் தேர்ச்சி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல்

TNPSC குரூப்-4 தேர்வில் 14 லட்சம் பேர் தேர்ச்சி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல்

குரூப்-4 தேர்வில் 14 லட்சம் பேர் தேர்ச்சி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 11,280 இடங்களுக்கு நடந்த குரூப்-4 தேர்வில் 14.26 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைனில் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் ஆகியோர் தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் செய்தியாளர் களிடம் அவர்கள் கூறியதாவது: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் (கிரேடு-3), கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பணிகளில் காலியாக இருந்த 11,280 இடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த தேர்வை 17,53,154 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in மற்றும் http://results.tnpsc.gov.in இணையதளங்களில் கடந்த 30-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 6,28,443 ஆண்கள், 7,97,532 பெண்கள், 35 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,26,010 பேர் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் 2,771 முன்னாள் ராணுவத்தினர், 4,975 கணவரை இழந்தவர்கள், 17,411 மாற்றுத்திறனாளிகள் அடங்குவர். புதிய முறையில் நடத்தப்பட்ட தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்சினையும் எழவில்லை. குரூப்-4 தேர்வு மற்றும் விஏஓ தேர்வை ஒன்றாக நடத்தியதால் அரசுக்கு சுமார் ரூ.12 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த இந்த குரூப்-4 தேர்வை இவ்வளவு பேர் எழுதியது போல், வேறு எந்த மாநிலத்திலும் எழுதியதில்லை. ஆசிரியர்கள், அதிகாரிகள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1.25 லட்சம் பேர் தேர்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தகுதிப் பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆன்லைனில் நடைபெற உள்ளது. சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றுவது ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்கி 30-ம் தேதியுடன் முடிவடையும். முதல்கட்டமாக 33 ஆயிரம் பேர் தங்களுடைய சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். எந்தெந்த விண்ணப்பதாரர் எந்தெந்த இ-சேவை மையத்தில் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற விவரம் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். விண் ணப்பதாரர்களுக்கு இ-மெயில், எஸ்எம்எஸ் மூலமாக வும் தகவல் தெரிவிக்கப்படும். பின்னர் நாங்களே சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து பரிசீலனை செய்வோம். ஒரு இடத்துக்கு 3 பேர் வீதம் சான்றிதழ் பரிசீலனைக்கு தேர்வு செய்திருக்கிறோம். அக்டோ பர் மாதம் இறுதி வாரத்தில் கலந் தாய்வு தொடங்கும். 2016-ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் முறை கேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு விசா ரணை நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது. 2017-ம் ஆண்டு நடந்த குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவு கள் இன்னும் மூன்று மாதத்தில் வெளியிடப்படும். தேர்வு முறைகேடு களை தடுக்க பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்வு முறையில் வெளிப் படைத்தன்மை பின்பற்றப்படு கிறது. தேர்வின் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்படு கிறது. அறிவிக்கப்பட்ட தேர்வு களை நடத்துவதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அறிவிப்புகள் வெளி யாகும். ஆக. 15-க்குள் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Digital School Education

Digital School Education


அரசு  நடுநிலைப்பள்ளிகளில்,
மாணவர் வருகைப்பதிவு, பாடத்திட்ட செயல்பாடு, எமிஸ் இணையதளத்தில் விபரங்கள் பதிவிடுதல் என அனைத்தும், டேப்லெட் மூலம் மேற்கொள்ள, ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், அந்தந்த வட்டார மையங்களில் துவங்கியது.புதிய பாடத்திட்டத்தில், பாடத்திட்டம் சார்ந்த செயல்பாடுகள், கூடுதல் தகவல்களுக்கான வீடியோக்கள் பதிவிறக்க, 'க்யூ.ஆர்.,' கோடு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பயிற்சி, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் உள்ள, 226 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு முதற்கட்டமாக டேப்லெட் கம்ப்யூட்டர்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தும் விதம் குறித்து,ஆசிரியர்களுக்கு வட்டார வள மையங்களில் பயிற்சி துவங்கியது.

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்

 குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்

குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். சென்னையில் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுமன் ஆகியோர் கூறியதாவது, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த 9,351 இடங்களுக்கு நடந்த தேர்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் (www.tnpsc.gov.in)தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வினை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். முதல்முறையாக, குரூப் 4 பிரிவுடன் கிராம நிர்வாக அலுவலர் தேர்வும் இணைத்தே நடத்தப்பட்டது. இதன் மூலம் டிஎன்பிஎஸ்சிக்கு ரூ.11 முதல் ரூ.12 கோடி மிச்சமானது. நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான். பிப்ரவரி மாதம் நடந்த குரூப் 4 தேர்வை எழுதிய 17 லட்சம் பேரில் சுமார் 14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை விட 3 மடங்கு அதிகமான அதாவது 30 ஆயிரம் பேரை கலந்தாய்வுக்கு அழைப்போம். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தகவல் அனுப்பப்படும், அவர்கள் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம், அவர்கள் சென்னை வருவது தவிர்க்கப்படும். சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும். 30ம் தேதி வரை இ-சேவை மையங்களில் செய்யலாம். அது முடிந்ததும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கும். நாங்களே அதனை பதிவிறக்கம் செய்து சரிபார்ப்போம். அது முடிந்த பிறகு அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிவித்தனர்.
மேலும் குரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

WhatsApp Group Video Call அறிமுகம்

WhatsApp Group Video Call அறிமுகம்
குரூப் வீடியோ- ஆடியோ காலிங் வசதியை
அறிமுகம் செய்தது வாட்ஸ் அப் நிறுவனம்
குரூப் வீடியோ- ஆடியோ காலிங் வசதியை அறிமுகம் செய்தது வாட்ஸ் அப் நிறுவனம்
         
குரூப் வீடியோ- ஆடியோ காலிங் வசதியை அறிமுகம் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
குறுந்தகவல்களை பகிர பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான வாட்ஸ் அப், தங்கள் பயனாளர்களை கவர அவ்வப்போது புதியப்புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
தகவல்களை டெக்ஸ்ட் மூலமாக மட்டும் அல்லாது, வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் ஆகிய சேவைகளையும் வாட்ஸ் அப் வழங்கி வருகிறது. இதன் மேம்பட்ட ஒரு அம்சமாக, குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் சேவையை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பரிசோதனை அளவில் இருந்த இந்த வசதி முதல் முறையாக, பயனாளர்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு, மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஒரே நேரத்தில், அதிகபட்சமாக நான்கு பேருடன் மட்டுமே வாய்ஸ் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பேச முடியும் என்பது கவனிக்கத்தக்கது. டெக்ஸ்ட் மெசேஞ் போல, வீடியோ மற்றும் ஆடியோ காலிங் வசதியும்  என்கிரிப்ட் செய்யப்பட்ட ஒன்று  வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2வில் குரூப் பெயர் மாற்றம் கணினி அறிவியல் பாடம் மூன்று வகையாக பிரிப்பு:அரசாணை வெளியீடு

பிளஸ் 2வில் குரூப் பெயர் மாற்றம் கணினி அறிவியல் பாடம் மூன்று வகையாக பிரிப்பு:அரசாணை வெளியீடு


சென்னை: பிளஸ் 2 வகுப்புகளில் உள்ள பாடப்பிரிவுகளின் பெயர்கள் இந்த  ஆண்டு முதல் மாற்றி அமைத்து அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: பள்ளிக் கல்வித்துறையில் தொழில் கல்வி மற்றும் கலைப் பிரிவுகளில் முதன்மைப் பாடப் பிரிவுகளின் பெயர்கள், முதன்மைப்  பாடங்களில் மாற்றம் செய்து கலைத்திட்ட வடிவமைப்பு(curriculum) குழு மற்றும் உயர்மட்டக் குழு ஆகியவை பரிந்துரை  செய்துள்ளன. அதற்கு மாநில பொதுப் பள்ளிக் கல்வி வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  இது தவிர மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், இதுவரை கணினி அறிவியல் பாடம் மட்டுமே  அனைத்து பிரிவுகளுக்கும் ( அறிவியல் மற்றும் கலைப் பிரிவு) இருந்து வருகிறது.

இதில் கணினி அறிவியல் பாடத்தை மூன்று  வகையாக நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.  அவரைத் தொடர்ந்து மேனிலைப் பாடப்பிரிவுகளில் தொழில் கல்வி பாடப்பிரிவுகளின் பெயர்கள் மாற்றம் செய்துள்ளதற்கும்,  முதன்மைப் பாடங்களில் மாற்றம் செய்ததற்கும், வணிக கணிதம், புள்ளி இயல், அறிவியல், இந்திய பண்பாடு, செவிலியம் பொது  என்று பாடப் பெயர்கள் மாற்றம் செய்துள்ளதற்கும், புதிய ெ தாழில் கல்வி மற்றும் கலைப் பிரிவு பாடப் பிரிவுகளின் பெயர் மற்றும்  முதன்மை பாடங்கள் மாற்றம் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்புக்கும், 2019-2020ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்புக்கும்  நடைமுறைப்படுத்த அரசாணை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து  அதை ஏற்கலாம் என்று முடிவு செய்துள்ளது.  அதன்படி மேனிலைப் பாடப் பிரிவுகளில் முதன்மைப் பாடங்களில் மாற்றம் செய்துள்ளதற்கு அரசு அனுமதி அளித்து  உத்தரவிடுகிறது.

இதன்படி,
* அறிவியல் பிரிவு(இயற்பியல், வேதியியல், கணிதம்) கணினி அறிவியல் முதன்மைப் பாடமாக இருக்கும்.
* கலைப்பிரிவுகளில் 3 வகை உள்ளது. இவற்றுக்கு கணினி பயன்பாடு முதன்மைப்பாடமாக இருக்கும்.
* தொழில் கல்வியில் 10 பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கு கணினி தொழில் நுட்பம் முதன்மைப் பாடமாக இருக்கும்.
* பொது இயந்திரவியல் என்பது அடிப்படை இயந்திரவியல் என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முதலாம் மற்றும் இரண்டாம்  ஆண்டுக்கு கணக்கு, அடிப்படை இயந்திரவியல் கருத்தியல், கணினி தொழில் நுட்பம், அடிப்படை இயந்திரவியல் செய்முறை  ஆகியவை முதன்மைப்பாடங்களாக இருக்கும்.

30 ஜூலை, 2018

மவுசு குறையும் எம்.சி.ஏ., : 90 சதவீத இடங்கள் காலி

மவுசு குறையும் எம்.சி.ஏ., : 90 சதவீத இடங்கள் காலி
மாநில அளவில் நடந்து முடிந்துள்ள,
எம்.சி.ஏ., கலந்தாய்வின் முடிவில், 90 சதவீத இடங்கள், மாணவர் சேர்க்கையின்றி காலியாகவே உள்ளன. தமிழகத்தில், 97 கலை, அறிவியல் கல்லுாரிகளில், 3,020 இடங்கள்; 107 பொறியியல் கல்லுாரிகளில், 7,645 இடங்கள் உட்பட, எம்.சி.ஏ., பிரிவில், 10 ஆயிரத்து, 665 இடங்கள் உள்ளன.
ஆனால், நடப்பாண்டிற்கான எம்.சி.ஏ., கலந்தாய்வில், 1,569 பேர் மட்டுமே பங்கேற்றனர். 
கடந்த, 25 முதல், 28ம் தேதி வரை நடந்த கலந்தாய்வு முடிவில், 1,222 பேர் மட்டுமே சேர்க்கை ஆணையை பெற்றனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், முதன் முறையாக, கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், துணை கலந்தாய்வு நடத்தப்பட்டது. இருப்பினும், மொத்த மாணவர்கள் சேர்க்கை, 10 சதவீதம் கூட எட்டவில்லை.
தொடர்ந்து, எம்.பி.ஏ., மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதல் கட்டமாக, மாற்றுத் திறனாளி மாணவர்கள், 15 பேர் பங்கேற்று, விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்தனர். பொது கலந்தாய்வின், முதல் நாளான இன்று, 844 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.எம்.சி.ஏ., படிப்பை போன்று, எம்.பி.ஏ., பிரிவிலும் மாணவர்கள் சேர்க்கை பெரிதாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.ஏ., பிரிவில், மாநில அளவில், 320 கல்லுாரிகளில், 13 ஆயிரத்து, 82 இடங்கள் உள்ளன. ஆனால், கலந்தாய்வில் பங்கேற்க, 6,255 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான காப்பீடு

புதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான காப்பீடு

கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு
3 முதல் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயமாகிறது.



இதனால் புதிய வாகனங்களை வாங்கும்போது ஒரு ஆண்டுக்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும். கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் காப்பீடு வழங்கப்படும்.
கடந்த ஆண்டில் மூன்றாம் நபர் காப்பீட்டை ஆன்லைன் மூலம் வழங்கலாம் என்றும் காப்பீட்டு காலத்தை 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை நீட்டிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதன் அடிப்படையில் விதிமுறைகளை வகுத்துவரும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், ஒரு மாதத்திற்குள் இறுதி முடிவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது புதிய வாகனங்களை வாங்கும்போது ஓராண்டுக்கான காப்பீடு செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. அதன் பிறகு வாகன உரிமையாளர் ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் தற்போது கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் காப்பீடு வழங்கப்படும். காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் அல்லது அந்த வாகனங்களால் ஏற்படும் இழப்புக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும் நடைமுறை தற்போது உள்ளது.

ஸ்மார்ட்போன்களில் AI Technology

ஸ்மார்ட்போன்களில் AI Technology

செயற்கை நுண்ணறிவு வசதிகள்
பொருந்திய ஸ்மார்ட்போன்களின் விற்பனை
மொத்த விற்பனையில் 50 விழுக்காடு அளவுக்கு இருக்கும் என்று தொழில் துறை ஆலோசனை அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு வசதிகளை ஸ்மார்ட்போன் மூலமாகப் பயன்படுத்துவது உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வெளியான ஸ்ட்ராடெஜி அனலைடிக்ஸ் ஆய்வில், ‘2018ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் விற்பனையாகும் மொத்த ஸ்மார்ட்போன்களில் 47.7 சதவிகிதம் அளவு போன்களில் செயற்கை நுண்ணறிவு வசதிகள் இருக்கும். 2023ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து சுமார் 90 விழுக்காடு அளவுக்குச் செயற்கை நுண்ணறிவு வசதிகள் பொருந்திய மொபைல் போன்கள் விற்பனையாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் சுமார் 36.6 விழுக்காடு அளவிலான செயற்கை நுண்ணறிவு வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனையாயின. இதில் கூகுள் நிறுவனம் சந்தையில் முதலிடம் பெற்றுள்ளது. ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவு வசதிகள் வழங்கியதில் கூகுள் நிறுவனம் 2017ஆம் ஆண்டில் 46.7 விழுக்காடு சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது. 40.1 விழுக்காடு சந்தைப் பங்குடன் ஆப்பிள் ஷிரி நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 51.3 விழுக்காடாகவும், 2023ஆம் ஆண்டில் 60.6 விழுக்காடாகவும் உயரும் எனவும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீட்டில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம்: தமிழக அரசு அதிரடி!

வீட்டில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம்: தமிழக அரசு அதிரடி!

தமிழக அரசின், "பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்" மூலம் ஒன்று அல்லது இரண்டு பெண்
குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு ரூ.50 ஆயிரம் கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேற்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "தமிழகத்தில் உள்ள பெண் குழந்தைகளை பாதுகாக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் "பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்" அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்படுகிறது.
இரண்டு  வகைகளில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் முதல் வகை, குடும்பத்தில் பெண் குழந்தை மட்டும் இருந்து பெற்றொர் இருவரில் ஒருவர் கருத்தடை செய்திருந்தால் அப்பெண் குழந்தை பெயரில் நிலையான வைப்புத் தொகை ரூ.50 ஆயிரம் தமிழநாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும்.
இரண்டாவது வகை, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் 2-வது பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் பெற்றோர் இருவரில் ஒருவர் கருத்தடை செய்திருந்தால் இரண்டு குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் முதலீடு செய்யப்படும்.
அதன்படி, அக்குழந்தை 18 வயது பூர்த்தி அடைந்ததும், வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்மூலம் பயன்பெற விரும்புவோர் குழந்தைப் பிறப்புச் சான்று, பெற்றோர் வயதுச் சான்று, குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்த சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, ஆண் வாரிசு இல்லை என்று சான்று, சாதிச் சான்று, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியரகத்தை அனுகவும்.
அங்கு மாவட்ட சமூக நல அலுவலகத்திலோ அல்லது ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் சமூக நல விரிவாக்க அலுவலரிடமோ விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.