BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

30 ஏப்., 2018

பாட புத்தகத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள்! - மாணவர் நலனுக்காக தமிழகத்தில் அறிமுகம்

பாட புத்தகத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள்! - மாணவர் நலனுக்காக தமிழகத்தில் அறிமுகம் தமிழக அரசின், புதிய பாட திட்டப்படி, ஒவ்வொரு பாட புத்தகத்திலும், அந்த படிப்புக்கான வேலைவாய்ப்பு தகவல்கள் இடம்பெற உள்ளன. மேலும், அந்த துறைகளில் சாதித்த வர்களின் விபரமும் சேர்க்கப்பட உள்ளது. வேறுஎந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், புதுமையாக, தமிழகபள்ளிப் பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.பள்ளி, பாட, புத்தகத்தில், வேலை வாய்ப்பு, தகவல்கள்! , மாணவர், நலனுக்காக ,தமிழகத்தில், அறிமுகம் மாற்றம் :தமிழக பள்ளி கல்வித்துறையில், 13 ஆண்டு களுக்கு பின்,பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு உள்ளன.பள்ளிகல்வி அமைச்சர், செங்கோட்டையன் முயற்சியில், தமிழக பாடத் திட்டங்கள், சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய பாடத்தை மிஞ்சும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன. பள்ளிக் கல்வித்துறை முதன்மைசெயலர், பிரதீப் யாதவ், செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், கல்வியாளர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், புதிய பாட திட்டத்தை உருவாக்கினர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி தலைமையிலான குழுவினர், புத்தகங்களை தயாரித்துள்ளனர்.வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்பு களுக்கு, முதல் பருவ தேர்வுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்ட புத்தகங்களில், கண்ணை கவரும் வண்ணங்களுடன், பக்கத்துக்கு பக்கம் சித்திரம், 'பார்கோடு' மற்றும், இணையதள வீடியோ இணைப்பு என, அசத்தலான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பிளஸ் 1 புத்தகத்தில், கூடுதல் அம்சமாக, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், வேலைவாய்ப்பு குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு பாட புத்தகத்திலும், அந்த பாடத்தை படித்தால்,என்னென்ன மேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன; அவற்றை படித்தால், எந்தெந்த வேலை வாய்ப்புகளை பெறலாம் என்ற, விரிவான விபரங் கள், புத்தகத்தின் முகப்புரையாக தரப்பட்டுள்ளன. மேலும், அந்த படிப்புகளை படித்து, அத்துறை களில் சாதனை படைத்தோர் பற்றிய முழு விபரங்களும் தரப்பட்டுள்ளன. இதனால், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போதே, மாணவர் கள், தங்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான படிப்பு வகைகளை அறிந்து, திட்டமிடலாம். இந்த தகவல்களை பயன்படுத்தி, மாணவர்கள், கல்வி ஆண்டின்துவக்கம் முதல் தேர்வு வரை, லட்சியத்துடன் படித்து, அதிக மதிப்பெண் பெற முடியும். அடுத்து என்ன படிக்கலாம் என்பதை திட்ட மிடவும் உதவும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இணையதளம் வாயிலாக பள்ளிகள் ஒருங்கிணைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

இணையதளம் வாயிலாக பள்ளிகள் ஒருங்கிணைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


''ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை நடத்த, அனைத்து அரசு பள்ளிகளும் இணையதளம் வாயிலாக இணைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார். கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், பொறியியல் கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கான 'ஆன்-லைன்' விண்ணப்ப முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது.விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: இந்திய அளவில், உயர்கல்வித்துறையில் வளர்ச்சி, 23 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற இலக்கு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் தான், 44.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுஉள்ளது.பொறியியல் கல்லுாரிகளில், ஆன்லைனில், வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அரசு பாடத்திட்டம், ஒரு வரலாறு படைக்கும் பாடத்திட்டமாக அமைய உள்ளது. ஆறு, ஒன்பது, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், அத்தனை பேருக்கும் சி.பி.எஸ்.இ., பாடத்தை மிஞ்சும் வகையில், புதிய திட்டம் இருக்கும். இந்த ஆண்டில், 3,000 பள்ளி களில், 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு வரை உள்ள பாடத்துக்கு, இரண்டு ஆண்டுகளில் முழுமையாக, 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்படும். ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை, இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டு, வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். சட்டசபை துணை சபாநாயகர் ஜெயராமன், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, அண்ணா பல்கலை, இன்ஜினியரிங் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

'டிஜிட்டல்' கல்வி திட்டம் பல்கலைகளுக்கு உத்தரவு

'டிஜிட்டல்' கல்வி திட்டம் பல்கலைகளுக்கு உத்தரவு


சென்னை, உயர் கல்வி நிறுவனங்களில், 'டிஜிட்டல்' கல்வி திட்டத்தை அறிமுகம் செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்யும்படி, பல்கலைகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும், அனைத்து தரப்பினரும், அவர்கள் விரும்பும் பாடங்களை படிக்கும் வகையில், 'டிஜிட்டல்' கல்வி முறையை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக, 'ஆன்லைன்' சான்றிதழ் படிப்புகள், அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐ.ஐ.டி., போன்றஉயர் கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் படிப்புகளை நடத்தி, சான்றிதழ் வழங்குகின்றன. இந்நிலையில், 'மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளும், டிஜிட்டல் கல்வி திட்டத்தை, கட்டாயம் அறிமுகம் செய்ய வேண்டும்' என, யு.ஜி.சி., என்ற, பல்கலை மானிய குழு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றிய அறிக்கையை, அரசுக்கு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், ஜூலை, 27ல், மத்திய மனிதள மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ள, துணை வேந்தர்கள் கூட்டத்திலும், இதுபற்றி விவாதிக்கப்பட உள்ளது.

பள்ளி இலவச திட்டங்கள் விரைவுபடுத்த அரசு முடிவு

பள்ளி மாணவ - மாணவியருக்கு, வரும் கல்வியாண்டில், இலவச திட்டங்களை செயல்படுத்த, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்காக, பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இலவச சீருடைகள், புத்தகங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களை, வரும் கல்வியாண்டில், விரைவாக செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக, 16.16 லட்சம், 'ஜியாமெட்ரி பாக்ஸ்' வாங்க, 5.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.அதேபோல், 15.15 லட்சம் பெட்டி, வண்ண பென்சில் வாங்க, 2.53 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ - மாணவியருக்கு, 58 லட்சம் ஜோடி, இலவச காலணிகள் வழங்குவதற்காக, 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை வாங்கவும், டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தமிழ் இணைய கல்விக்கழகம் வழங்கும் இணைய பயிற்சிகள்

உலகம் கணினிமயமாகி வந்ததையொட்டி, உலகில் உள்ளவர்கள் தமிழ்ச் சமூகம் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், தமிழ் தொடர்பான பல அடிப்படை கல்விகளை இணையதளம் வழியே கற்றுக் கொள்வதற்காகவும் தமிழ் இணைய பல்கலைக்கழகம், தமிழக அரசால் 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இது ‘தமிழ் இணைய கல்விக்கழகமாக (தமிழ் விர்ச்சுவல் அகடமி)’ செயல்பட்டு வருகிறது. தமிழ் இணைய பல்கலைக்கழக இணையதளத்தில் தமிழ்ச்சமூகம் பற்றிய ஒருங்கிணைந்த பல்வேறு தொகுப்புகளை காண முடியும். தமிழ்மொழி, பாரம்பரியம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடியும். கணினி நிரல் எழுதுபவர்கள், மொழி அறிஞர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட 50 பேர் இணைய தள மேம்பாடு மற்றும் கல்விப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தமிழ் ஒருங்குறி (யுனிகோடு) எழுத்துருக்களை வழங்குதல், சில தமிழ் மென்பொருட்களை உருவாக்குதல், நூல்கள், கலைச்சொற்கள், சுவடிகளை இணைய மயமாக்குதல் உள்ளிட்ட பணிகளை இணைய கல்விக் கழகம் கவனிக்கிறது. பன்னாட்டு மாணவர்களுக்கு இணையம் வழி தமிழ் கற்பித்தல் பயிற்சியும் வழங்குகிறது. தமிழ் மொழி, கலாச்சாரம் சார்ந்த பல்வேறு டிப்ளமோ படிப்புகள், பட்டப்படிப்புகளை இந்த பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. கணினி தொழில்நுட்பம் பற்றிய தமிழ் அறிமுகம் இணையத்தில் கிடைக்கிறது. தமிழ் கற்க விரும்புபவர்களுக்கு மழலைகளுக்கான பயிற்சி, அடிப்படைநிலை, இடைநிலை, மேல்நிலை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக மேற்சான்றிதழ் படிப்புகளையும் படிக்கலாம். பட்டப்படிப்பு அளவிலான இளநிலை தமிழியல், மொழிபெயர்ப்பியல் போன்ற படிப்புகளையும் படிக்கலாம். அயல்நாட்டு மாணவர்கள் மற்றும் தமிழ் வழி பயிலாதவர்கள் இணைய பல்கலைக்கழகம் வழங்கும் பயிற்சி வழியாக தமிழையும், தமிழ்ச்சமூகத்தையும் அறியலாம்!. இது பற்றிய கூடுதல் விவரங்களை http://www.tamilvu.org/ என்ற இணைய பக்கத்தில் பார்க்கலாம்.

22 ஏப்., 2018

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்


காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் ஜெ.கு.லிஸ்பன் குமார் தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பணி ஓய்வு, விபத்தில் மரணம், விருப்ப ஓய்வு காரணமாக அரசு துறைகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளின் தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை ஆண்டுதோறும் அரசுக்கு அனுப்பிவைப்பர். அங்கு நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, பணியாளர் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவோ, மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பு தேர்வுகள் மூலமாகவோ அக் காலியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறு துறைத்தலைவர்கள் காலியிடங்கள் பட்டியலை அனுப்பி குறிப்பிட்ட துறைகளின் ஒப்புதல் பெற்று காலியிடங்களை நிரப்புவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. துறைத்தலைவர் மூலம் அனுப்பப்படும் காலியிடங்களுக்கு அப்படியே ஒப்புதல் கிடைக்கும் என்று சொல்லவும் முடியாது. அரசின் நிதிநிலையை காரணம் காட்டி காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம். மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் செயலர் எஸ். ஸ்வர்ணா அண்மையில் வெளியிட்ட அரசாணை: அரசு துறைகளில் காலியிடங்களை விரைவாக நிரப்பும் வகையில், காலியிடங்களை கணக்கிடுவதற்கு தற்போது நடைமுறையில் இருந்துவரும் முறையை மாற்றியமைக்க அரசு முடிவுசெய்துள்ளது. துறைத்தலைவர்கள் பணிநியமன அலுவலர்களாக இருக்கும்பட்சத்தில் காலியிடங்களுக்கு நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச்சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறாமல் அவர்களே முடிவு செய்துகொள்ளலாம். அதேபோல், துறைத்தலைவர்களுக்கு அடுத்தநிலையில் உள்ள சார்நிலை அதிகாரிகள் பணிநியமன அலுவலர்களாக இருக்கும்பட்சத்திலும் இதே நடைமுறை பொருந்தும். டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலமாக நிரப்பப்படும் பணிகளில் உள்ள காலியிடங்களையும் சம்பந்தப்பட்ட துறைத்தலைவர்களே முடிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. என்ஜிஓ சங்கம் வரவேற்பு அரசு துறைகளில் காலியிடங்களை மதிப்பீடு செய்வது தொடர்பான புதிய நடைமுறை குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்ஜிஓ) மாநில தலைவர் இரா.சண்முகராஜன் கூறும்போது, “புதிய முறையின்படி நேரம் பெருமளவு மிச்சமாகும். எனவே, நேரடி பணிநியமனங்கள் விரைவாக முடிக்கப்படும். இப்புதிய நடைமுறை வரவேற்கத்தக்கது” என்றார். “தற்போதைய நடைமுறையில், ஆசிரியர் காலியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் ஒப்புதல் பெற்று அதை இறுதிசெய்வதற்கு அதிக காலம் ஆகிவிடுகிறது. அரசின் புதிய முறை மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பமுடியும்” என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

புதிய பாடத்திட்டத்தில் புதிதாக 286 பாடங்கள்..!

புதிய பாடத்திட்டத்தில் புதிதாக 286 பாடங்கள்..!


கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், "புதிய பாடத்திட்டத்தில் 286 பாடங்கள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.


மேலும், சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் கூட அரசு பள்ளிகளில் படிகின்ற நிலையை உருவாக்கி காட்டியுள்ளோம்.

பாடங்களை மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படிக்கின்ற கல்வியை உருவாக்கியுள்ளோம் எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

19 ஏப்., 2018

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - தொடக்கக் கல்வி இயக்குநர்

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - தொடக்கக் கல்வி இயக்குநர்



பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்படுகிறது என தெரிவித்திருந்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பால் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் பள்ளி வேலைநாள்கள் முடிவதாக இருந்த சூழ்நிலை ஏப்ரல் 20ஆம் தேதியும் பள்ளி வேலைநாள் என்ற நிலை உருவானது. சென்ற ஆண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாமல் (ஈராசிரியர் பள்ளிகளில்) உள்ள ஆசிரியர்களை தற்போது பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆணைக்கிணங்க ஏப்ரல் 18 ஆம் தேதி விடுவித்து ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் பணியில் சேர்ந்துகொள்ள குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் இ.மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கோடை விடுமுறை மாற்றம் தொடர்பாக எழுத்து பூர்வமான அறிவிப்புகள் எதுவும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படாததால் ஏற்கனவே உள்ள பள்ளி வேலைநாள் கால அட்டவணைப்படி ஏப்ரல் 19 ஆம் தேதிதான் இவ்வாண்டின் கடைசி வேலைநாளாகும். ஏப்ரல் 20 ஆம் தேதி கோடைவிடுமுறை தொடங்குகிறது. தொடக்கக் கல்வித் துறை பள்ளிகள் 210 பள்ளி வேலைநாள்கள் முடித்திருக்க வேண்டும். பள்ளி வேலைநாள்கள் 210 க்கு குறைவாக உள்ளது எனில் ஏப்ரல் 20 பள்ளி வேலைநாளாக செயல்படலாம். இதில் வேறு எந்தவித குழப்பமும் தேவை இல்லை

18 ஏப்., 2018

விரைவில் சட்டப்பேரவை கூட்டம்.!


விரைவில் சட்டப்பேரவை கூட்டம்.!


மான்ய கோரிக்கைகளுக்கு தயாராகும் பேரை-விரைவில் துறை வாரியாக ஆய்வுகள் தொடக்கம்.




கணினி அறிவியல் பாடம் 6முதல் 10ம் வகுப்பு வரை அறிவியலில் தனி அலகாக சேர்க்கப்பட்டுள்ளது.

கணினி அறிவியல் பாடம் 6முதல் 10ம் வகுப்பு வரை அறிவியலில் தனி அலகாக சேர்க்கப்பட்டுள்ளது.

நன்றி.
சை.புருஷோத்தமன்.

பள்ளி பாதுகாப்பு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை 3 மாதத்தில் அறிவிக்கவேண்டும்:-உச்சநீதிமன்றம் உத்தரவு.

பள்ளி பாதுகாப்பு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை 3 மாதத்தில் அறிவிக்கவேண்டும்:-உச்சநீதிமன்றம் உத்தரவு.

16 ஏப்., 2018

1-8 மாணவர்களுக்கு பழைய சீருடைதான் வழங்கப்படும்!!

1-8 மாணவர்களுக்கு பழைய சீருடைதான் வழங்கப்படும்!!

1-8 மாணவர்களுக்கு பழைய சீருடைதான் வழங்கப்படும்!! | ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பழைய &'லைட்பிரவுன்&' மற்றும் &'மெரூன்&' நிற சீருடையில் மாற்றம் இல்லை; மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாற்றப்பட்ட சீருடை விபரம் சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வி இயக்குனர் இளங்கோவன், &'நடப்பு கல்வியாண்டு (2017--18) பயன்படுத்த வேண்டிய சீருடை குறித்து, முதன்மை கல்வி

வாட்ஸ் ஆப்பில் மீடியா ஃபைல்களை மறுபதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம்



வாட்ஸ் ஆப்பில் மீடியா ஃபைல்களை மறுபதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம் | செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீடியா ஃபைல்களை தெரியாமல் அழித்துவிட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் வரும் ஜிப், வீடியோக்கள், ஆடியோக்கள் ஆகியவை ஒருமுறை பதிவிறக்கம் செய்யப்பட்டால் செல்போனில் சேமிக்கப்பட்டுவிடும். சேமிக்கப்பட்ட ஃபைல்களை தெரியாமல் அழித்துவிட்டால்

1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விலையை 20% உயர்த்த பாடநூல் கழகம் திட்டம்

1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விலையை 20% உயர்த்த பாடநூல் கழகம் திட்டம்

1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விலையை 20% உயர்த்த பாடநூல் கழகம் திட்டம் | 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்த தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம் முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது. மற்ற வகுப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் புத்தகங்களின் விலை உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு

14 ஏப்., 2018

என் எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது கடவுளே!!கணினி ஆசிரியர்கள் MEMES

என் எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது கடவுளே!!கணினி ஆசிரியர்கள் MEMES

ரெடியா இருங்க! விரைவில் வரப்போகுது ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப்

ரெடியா இருங்க! விரைவில் வரப்போகுது ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப்

ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி ஃபீச்சர் போன்களை தொடர்ந்து 4ஜி சிம் வசதி கொண்ட லேப்டாப்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை தொடர்ந்துஸ்மார்ட்போன், ஃபீச்சர் போன் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வரும் ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் 4ஜி சிம் ஸ்லாட் கொண்ட லேப்டாப் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜியோ சேவைகள் துவங்கிய சில மாதங்களில்அந்நிறுவனம் பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் உள்ளிட்ட துறைகளில் கால்பதிக்க இருப்பதாக கூறப்பட்டது. பின் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளின் சோதனை தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியது. இதைத் தொடர்ந்து ஜியோ டிடிஹெச் சேவை சார்ந்ததகவல்களை மறுக்கும் வகையிலான தகவல்கள்வெளியாகின. இந்நிலையில் சத்தமில்லாமல் ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப்களை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. ஜியோ 4ஜி ஃபீச்சர்போன் போன்றே புதிய லேப்டாப்-இலும் 4ஜி சிம் கார்டு வேலை செய்யும் என கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து லேப்டாப்களை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்கள் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் பில்ட்-இன் செல்லுலார் கனெக்ஷன்ளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே குவால்காம் மற்றும் ரிலையன்ஸ்ஜியோ இணைந்து 4ஜி ஃபீச்சர்போனிற்கென பணியாற்றி வருகின்றன.
'ஏற்கனவே ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் எங்களின் சாதனத்தை எடுத்து கொண்டு, அதில் டேட்டா மற்றும் தகவல்களைவழங்கலாம்.' என குவால்காம் டெக்னாலஜீஸ்நிறுவன மூத்த தலைவர் மிக்யூல் நியூன்ஸ் தெரிவித்துள்ளார். இத்துடன் குவால்காம் சார்பில் ஸ்மார்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் சார்ந்து இயங்கும் லேப்டாப்களை உருவாக்கவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
சர்வதேச அளவில் குவால்காம் நிறுவனம் ஹெச்பி, அசுஸ் மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆல்வேஸ் கனெக்டெட் பிசி-க்களை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன. தற்சமயம் புதிய பிரிவில் ஆதரவு வழங்க 14 டெலிகாம் நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன.
இதில் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, லண்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிரபலமாக இயங்கி வரும் டெலிகாம் நிறுவனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.புதிய லேப்டாப் உருவாக்கப்பட்டு வருவது குறித்து ஜியோ சார்பில் இதுவரைஎவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

செல்பேசிச் செயலியில் முன்பதிவில்லாப் பயணச்சீட்டு எடுக்கும் முறை நாளைமுதல் அமல்!!!

செல்பேசிச் செயலியில் முன்பதிவில்லாப் பயணச்சீட்டு எடுக்கும் முறை நாளைமுதல் அமல்!!!

செல்பேசி மூலம் முன்பதிவில்லாப் பயணச்சீட்டுக்களைப் பெறும் UTS ONMOBILE என்கிற செயலி நாளைமுதல் தெற்கு ரயில்வேயின் அனைத்து நிலையங்களிலும் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்தச் செயலியைக் கூகுள், ஆப்பிள் ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ரயில்வேயின் R-Wallet, பயணச்சீட்டு முன்பதிவு மையம், ஐஆர்சிடிசி இணையதளம் ஆகியவற்றின் மூலம் நூறு ரூபாய் முதல் ஐயாயிரம் ரூபாய் வரை முன்கூட்டிச் செலுத்த வேண்டும். அந்தத் தொகையில் இருந்து பயணச்சீட்டுக்கான தொகை கழிக்கப்படும்_

_இந்த செயலியில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கிமீ தொலைவு வரையுள்ள பகுதிகளில் இருந்து பயணச்சீட்டை எடுத்துக் கொள்ளலாம். பயணச்சீட்டு எடுக்காத பயணிகள், டிக்கட் பரிசோதகரைப் பார்த்த பின் பயணச்சீட்டைப் பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் இந்தச் செயலியில் பயணச்சீட்டு எடுக்க இயலாது

புதிய கணினி பாடத்தில் கலக்குமா இல்லை கலங்கடிக்குமா?

புதிய கணினி பாடத்தில் கலக்குமா இல்லை கலங்கடிக்குமா?


ஓர் ஆசிரியர் மூன்று பாடபுத்தகம்! கணினி அறிவியல் பாடத்தில்
கலக்குமா அரசு! இல்லை ஆசிரியர்களை,மாணவர்களை கலங்கடிக்குமா?


தமிழகத்தில்  5000க்கும் மேற்ப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள்   இயங்கி வருகின்றன.அங்கு பணிபுரியும் மொத்த கணினி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1850 மட்டுமே  அதிர்ச்சியல்ல உண்மை!

தற்போது பிளஸ் ஒன் வகுப்பிற்கும்   பொதுத் தேர்வை அரசு அறிவத்துள்ளது.

புதிய பாடத்திலும் கணினி அறிவியல் பாடத்திற்கு மூன்று பாட புத்தகங்களை  வெளியுட்டுள்ளது தமிழக அரசு!

மற்ற பாடப்பிரிவில் இல்லாத தனி சிறப்பு என்னவென்றால்
வெறும் 1800 ஆசிரியர்களை வைத்துக் கொண்டு இதில்  பிளஸ் -1,பிளஸ் -2 மாணவர்களுக்கும்  பொதுத் தேர்வும் 3விதமான கணினி பாடபுத்தகங்களையும் அறிமுகம் செய்துள்ளது தற்போது. போதுமான ஆசிரியர்கள் இன்றி இதில் இந்த வருடம் பிளஸ் 1 மாணகளுக்கு கணினி தேர்வு கடினம் வேறு புதிய பாடத்திட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றி கலக்குவர்களா இல்லை ??கலங்குவார்களா?? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

வெ.குமரேசன் ,
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்.பதிவு எண்:655/2014.

9 ஏப்., 2018

கையடக்க கணினியில் கல்வி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்

கையடக்க கணினியில் கல்வி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்
கற்றலை எளிமைப்படுத்தி, அதே நேரத்தில் அவர்களை கற்றலில் ஈடுபாடு கொள்ள செய்யும் வகையில்
தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கையடக்க கணினி மூலம் விருப்ப முறையிலான கற்றல் கற்பித்தலை தொடக்கப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தி வருகிறது தொடக்கக் கல்வித் துறை. இந்த கல்வி முறைக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்திருக்கிறது.



ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே புத்தகங்கள் வந்த நிலை மாறி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றலை அறிமுகப்படுத்திய கல்வித் துறை, தற்போது விருப்பக் கற்றலை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் முழுமையாக தொடக்கப் பள்ளிகளில் இந்த முறையை அமல்படுத்துவதற்கு முன்பு பரிட்சார்த்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் இந்த கல்வி முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 
முழு புத்தகமாக வந்த நிலை மாறி, மூன்று பருவங்களுக்குத் தனித்தனியே புத்தகங்களை வழங்கி, தனித்தனி பருவத் தேர்வுகளையும் நடத்தி, அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்ற நிலை மதிப்பீடு செய்யப்பட்டு, அடுத்த வகுப்புக்கு தரம் உயர்த்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், தொடக்க நிலை வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதை அதிகப்படுத்துவதற்கும், மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் விருப்பக் கற்றல் முறை கையடக்க கணினி கொண்டு நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கல்வி முறையில் பாடங்கள் அலகு அலகுகளாகப் பிரித்து நடத்தப்படுகின்றன. முதல் அலகில் ஆசிரியர் 30 நிமிஷங்கள் வகுப்பறையில் பாடம் நடத்துவார். அதன் பின்னர் மாணவ, மாணவிகள் குழுவாக கற்கும் முறையும், தன் மதிப்பீடும், கேள்வி- பதிலும் இடம்பெறும் வகையில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
5 மாணவர்களுக்கு ஒரு கணினி: திருச்சி மாவட்டத்தில் விருப்பக் கற்றல் கல்வி முறை மணிகண்டம் மற்றும் மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களில் 10 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பிராட்டியூர், கொழுக்கட்டைக்குடி, ஓலையூர், கொத்தமலை, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, திருமலைச்சமுத்திரம், கே.கே.நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளிலும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் சென்னகரை தொடக்கப்பள்ளியிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
1,2,3 வகுப்புகளில் இந்த கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. 5 மாணவர்களுக்கு ஒரு கணினி வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட கணினி மூலமாக மாணவ, மாணவிகள் பாடப்பொருளை வலுவூட்டப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆசிரியர் தான் பாடம் நடத்தி முடிந்தவுடன், மாணவர்கள் செய்ய வேண்டிய செய்முறைகளை எந்த பக்கத்தில் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு கூறியவுடன், கணினி மூலமாக அந்த பக்கத்தில் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால், மாணவர்கள் செய்ய வேண்டிய செய்முறைகள் கொண்ட பக்கம் வருகிறது. அந்த பக்கத்தில் மாணவ, மாணவிகள் கேள்விகளுக்குரிய பதிலை பதிவிடுகிறார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு மாணவரும் செய்ய வேண்டிய செய்முறைகளுக்குப் பின்னர், அவர்களுடைய விடைவிவரங்கள் பதிவாகிவிடும். இந்த விவரங்கள் அனைத்தும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நேரடியாக கையடக்க கணினி வழியாகப் பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருப்பதால், இந்த கற்றல் முறையில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது என்கிறார் மணிகண்டம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கா. மருதநாயகம்.
கையடக்க கணினி மூலமாக பாடப்பொருள்களை காணொலிக்காட்சியாக பார்ப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் மிகுந்த கவனத்துடன் மாணவர்கள் உள்வாங்குகின்றனர். இதனால் பாடப்பொருள்களை எளிதில் புரிந்து கொள்வதுடன், அவர்கள் மனதில் பாடப்பொருள் நன்கு பதிந்து வருகிறது. கையடக்க கணினி மூலம் மாணவர்களின் மதிப்பீடு சோதித்து அறியப்படுகிறது. மேலும், அவர்கள் பெறும் மதிப்பெண்கள் குறித்த விவரங்களும் சோதித்து அறியப்படுகின்றன. இந்த மதிப்பீடு கருவி வண்ணமயமாகவும், படங்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளதால் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு விருப்பமான கற்றல் கற்பித்தல் வகுப்பறைகளில் நிகழ்கின்றன என்கிறார் எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்
பள்ளித் தலைமையாசிரியை 
பூ.ஜெயந்தி.
மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது: பொதுவாக தொடக்க வகுப்புகளுக்கு மாணவர்கள் வருகை என்பது குறைந்தே காணப்படும். அவர்கள் வீட்டுச் சூழலிலிருந்து பள்ளிச் சூழலுக்கு மாறுவதற்கு 2 மாதங்கள் ஆகும். அதன் பின்னர், அவர்களுக்கு கற்பிக்கவே முடியும். ஆனால், இந்த கணினி மூலமாக கல்வி கற்பிப்பதன் மூலம், மெல்ல கற்று வந்த மாணவர்கள் கூட தற்போது ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். இதுபோல, பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. தாங்களும் கையடக்க கணினி பயன்படுத்தப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கிறது. எங்கள் பள்ளியில் கடந்தாண்டைக் காட்டிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், நிகழாண்டில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆசிரியைகளின் பணிச்சுமையும் குறைகிறது என்கிறார் இப்பள்ளியின் இடைநிலை ஆசிரியை புஷ்பலதா.
புத்தக மூட்டைகளைச் சுமந்து சென்ற மாணவ, மாணவிகள் இனி ஒவ்வொருவரும் கையடக்க கணினியை மட்டுமே பள்ளிக்கு எடுத்துச் சென்று கல்வி பயிலும் நிலையை நோக்கிய பயணத்துக்கு தற்போது அடித்தளமிடப்பட்டிருக்கிறது. முழுமையான பயணத்தை விரைவில் காணும் நிலையை நோக்கி கல்வித்துறை பயணிக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

ஓர் நம்பிக்கை ஒளி

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடம் பெருமளவு இல்லாததால் படிப்பறிவு வேகமாக பரவுவதில் தாமதம் ஏற்பட்டது. 



ஆனால் தற்போது தமிழகம் முழுதும் அரசு பள்ளிகள் பெருவாரியான கிராமங்களில் தொடங்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் பள்ளிக்கு செல்வது எளிதாக ஆகிவிட்டது. ஆனால் தற்போதைய மிக முக்கியமான பிரச்சனை நகர் புறங்களிலும், கிராமப் புறங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கல்வி தரத்தின் வேறுபாடு தான்.
உலகத் தரம் வாய்ந்த கல்வி
உலகத் தரம் வாய்ந்த கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை என்ற பிரச்சனை தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுதும் உள்ளது. 2006ம் ஆண்டு சல்மான் கான் என்ற அமெரிக்கர் இணையதளம் மூலம் பல்வேறு கணிணி மென்பொருள் கொண்டு பாடங்களை உருவாக்கி தன்னுடைய உறவினர்களுக்கு கற்றுக் கொடுத்து வந்தார். அவரது உறவினர்கள் அதை எளிதாக புரிந்து கொண்டு அதை தனது தோழர்களுக்கும் பகிர்ந்து கொண்டனர். பல பேர் அதை உபயோகப்படுத்த ஆரம்பித்த பின்னர், சல்மான் கான் தரம் வாய்ந்த பாடங்களை உலகில் உள்ள அனைவருக்கும் சென்றடைய கான் அகாடமி என்ற அமைப்பை தொடங்கி அதை உலகில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்தார். கூகிள், AT&T போன்ற நிறுவனங்களும் பேரளவு நிதி உதவி செய்து அனைத்து பள்ளி பாடங்களையும் காணொளிகளாக ஆங்கிலத்தில் தயார் செய்ய உதவின. தற்போது அமெரிக்க SAT, GMAT தேர்வு போன்றவற்றிற்கான பயிற்சி வீடியோக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் , தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், படிக்கவும், பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு தயார் செய்யவும் கான் அகாடமி வீடியோக்களை பார்ப்பது வழக்கம்.
வெற்றிவேல் அறக்கட்டளை
கான் அகாடமியின் வீடியோக்கள் மற்றும் இணையதளம் இந்தி மற்றும் வங்காள மொழியில் முழுமையாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்தாலும் தமிழில் இல்லாமல் இருந்தது. கான் அகாடமியில் உள்ள அனைத்து வீடியோக்கள் மற்றும் முழுமையான வலைதளத்தை தமிழில் மொழி பெயர்க்கும் சீரிய பணியை வெற்றிவேல் அறக்கட்டளை எடுத்து செய்து வருகிறது. வெற்றிவேல் அறகட்டளையின் நோக்கம் பற்றி திரு சொக்கலிங்கம் கூறுகையில், கான் அகாடமி வீடியோக்கள் அனைத்தையும் தமிழில் மொழியாக்கம் செய்து அனைத்து தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பாட திட்டங்களை எளிதில் விளங்கும் படி தமிழ் காணொளி மூலம் அளித்து, அவர்களை உலகத் தரம் வாய்ந்த அறிவு சார் பொருளாதாரத்தில் போட்டியாளர்களாக கொண்டு வர வேண்டும் என்பதே என்றார்.
இதற்காக இந்தியா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து வருகின்றனர். சில ஆயிரம் வீடியோக்களை முழுமையாக தமிழ் மொழியாக்கம் செய்வதும், வலை தளத்தில் இருக்கும் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளை தமிழ் மொழி மாற்றம் செய்வதும் மிகவும் கடினமான காரியம். இதற்கு பல்லாயிரம் மனித நேரங்களும் , பொருட்செலவும் ஆகும். இந்த சீரிய பணியை வெற்றிவேல் அறகட்டளை எடுத்து செயல்படுத்தி வருவது பெரும் பாராட்டுக்குறியது.
தற்போது வெற்றிவேல் அறக்கட்டளை கான் அகாடமி பாடத் திட்டங்களை சமச்சீர் பாடத்திட்டத்தின்படி வகுப்பு வாரியாக வரிசை படுத்தியுள்ளது. தற்போது IIT போன்ற தேர்வுக்கு தேவையான பயிற்சி கூட கான் அகாடமி வீடியோக்களில் வர தொடங்கியுள்ளது. இந்த முயற்சியை முழுமையாக முடித்து அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சென்றால் தற்போது தமிழகத்தில் நகர் புறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கூட எட்டாகனியாக இருக்கும் IIT படிப்பு , கிராமப்புறத்தில் தமிழ் வழி படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்காவில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்பு மூலம் கான் அகாடமியின் பயன் தெரிய வந்துள்ளது. வெற்றிவேல் அறக்கட்டளை, சான் பிராசிஸ்கோ தமிழ் மன்றம் நிதி உதவியுடன் Team India அமைப்பின் உதவியுடன் கான் அகாடமி தமிழ் படுத்தபட்ட வீடியோக்களை தமிழகத்தில் உள்ள சுமார் 10 அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் மற்றும் டிவி கொண்டு நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் அந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு கான் அகாடமி வீடியோ காட்டப்படுகிறது. அதனால் பயன் பெறும் மாணவர்கள், ஆசிரியர் துணை இல்லாமலேயே கடினமான பாடங்களை காணொளி மூலம் எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது என்கின்றனர். இது அவர்களது கல்வி தரத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமும் உதவுவோம்
ஹார்வர்ட் தமிழ் இருக்கை மூலம் தமிழின் பெருமையை உலகெங்கும் பரவ வழி செய்து உள்ளோம். கான் அகாடமியை தமிழ் படுத்துவதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கவும், எதிர் காலத்தில் பல மாணவர்கள் தனது தாய் மொழி (தமிழ்) வழி கல்வி தொடர வழி வகுக்கவும் வாய்ப்பாக இருக்கும். இந்த பணியை முழுமையாக செய்து முடிக்க பல தன்னார்வலர்களின் உதவி தேவைப்படுகிறது. நீங்கள் வாரத்திற்கு ஒரு சில மணி நேரங்கள் இந்த சேவைக்கு செலவிட்டாலே மாபெரும் மாற்றத்தை நாம் கொண்டு வர முடியும். நீங்கள் தன்னார்வலாராக உதவ விரும்பினால் info@vetrivelfoundation.org என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு தெரிந்த நிறுவனங்கள் Corporate Social Responsibility மூலம் உதவ முன் வந்தாலும் வெற்றிவேல் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம்.



ஆசிரியர்கள் அறிவுரைகளைப் பின்பற்றினால் சாதிக்கலாம்' - ஜப்பான் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்!

ஆசிரியர்கள் அறிவுரைகளைப் பின்பற்றினால் சாதிக்கலாம்' - ஜப்பான் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்!

பள்ளிக் கல்வித்துறை, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து அரசுப்பள்ளியில் பயின்று அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஜப்பான் நாட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். அங்கே, அந்நாட்டு அறிவியல் முன்னேற்றங்களைக் காணச் செய்வதுடன், அந்நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் தமிழக அரசு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில் தமிழகம் சார்பாக மே மாதம் 12-19 தேதி வரை ஜப்பான் செல்லும் 6 மாணவர்கள் கொண்ட குழுவில், கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 பயிலும் ம.ஹரிஹரன் என்ற மாணவர் தேர்வாகியுள்ளார். ஜப்பான் செல்லும் அந்த மாணவருக்கு பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சி.தமிழரசன் தலைமை ஏற்றார் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறையை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் கலியபெருமாள் பங்கேற்றார்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மாணவர் ஹரிஹரனை வாழ்த்திப் பேசினார்கள். விழாவில் பேசிய மாணவர் ஹரிஹரன், ``எனது வழிகாட்டி ஆசிரியர் தனபால் அவர்கள் என்னிடம் புதைந்துள்ள அறிவியல் திறன்களை கடந்த ஆறு ஆண்டு காலமாக வெளிக்கொணரும் விதத்தில், எனக்கு வழிகாட்டியதன் மூலம், நான் கண்டுபிடித்த 4 கண்டுபிடிப்புகளில் ஒன்றான, சூழலியல் காக்கும் கழிவறை என்ற கண்டுபிடிப்பிற்காக, இன்ஸ்பயர் விருதில் தங்கம் வென்றேன். அதன் மூலமாகத்தான் நான் ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளேன். சக இளம் விஞ்ஞானி மாணவர்கள் வழிகாட்டி ஆசிரியர்கள் அறிவுரைகளைப் பின்பற்றினால், என்னைப்போல் சாதிக்கலாம்" என மனம் உருகிப் பேசி நன்றி கூறினார்.

தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு இடங்களை நாளை வெளியிட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு இடங்களை நாளை வெளியிட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

www.dge.tn.gov.in

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீடு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கு ஏப்ரல் 20-ம் 
தேதியில் இருந்து மே 18-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை அந்தந்தப் பள்ளிகளின் தகவல் பலகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) வெளியிட வேண்டும். உதாரணமாக எல்.கே.ஜி. வகுப்பில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 200 இடங்கள் இருப்பின் அதில் 25 சதவீத இடங்களின் எண்ணிக்கையை பட்டியலில் குறிப்பிட வேண்டும். 
இந்தச் சேர்க்கையின்போது வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றோர், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம் இருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கப்பட வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் பள்ளி சேர்க்கைக்கு ஏப்.20-ஆம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களை பெற்றோர் எடுத்துச் செல்ல வேண்டும். 
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் (அசல்), நலிவடைந்த பிரிவினரில் இதர வகுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருப்பின், அவர்களின் வருமானச் சான்று (அசல்), பள்ளிக்கும், மாணவர் வசிக்கும் இடத்திற்கும் இடையேயான தொலைவு ஒரு கிலோ மீட்டர் முதல் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருத்தல் வேண்டும். (வருவாய்த் துறையினரால் அளிக்கப்பட்டுள்ள இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை (இவற்றுள் ஏதேனும் ஒன்றின் அசல்). இந்த ஆவணங்களுடன் சென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் பாரபட்சம் - கணினி ஆசிரியர்கள் புகார்

விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் பாரபட்சம் - கணினி ஆசிரியர்கள் புகார்

8 ஏப்., 2018

மறைந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் 50 இடங்களில் ‘வை-பை’ சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

மறைந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் 50 இடங்களில் ‘வை-பை’ சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.


அதன்படி முதல் கட்டமாக சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் ‘வை-பை’ மண்டலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.


இதேபோல் கோவை காந்திபுரம் பஸ்நிலையம், சேலம் மத்திய பஸ் நிலையம், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையம் ஆகிய இடங்களிலும் ‘வை-பை’ சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


தொடக்க நாளான நேற்று மெரினா கடற்கரை வந்த இளைஞர்கள் உழைப்பாளர் சிலை பகுதியில் சென்று ‘வை-பை’ வசதியை ஆர்வத்துடன் பயன்படுத்திக் கொண்டனர்.


‘அம்மா வை-பை’ வசதியை எப்படி பயன்படுத்துவது என்ற விவரம் வருமாறு:-


ஆண்டிராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் உழைப்பாளர் சிலை பகுதியில் சென்றதும் அவர்களது செல்போன் ‘வை-பை’ ஆன் செய்ததும் பல நெட்ஒர்க் சேவைகளை காட்டும். அதில் ‘அம்மா வை-பை’ என்ற நெட் ஒர்க்கை இணைப்பில் எடுத்துக் கொண்டால் உள் நுழையும் பக்கம் காண்பிக்கும். அதை கிளிக் செய்து திறந்ததும் பதிவு செய்யும் பக்கம் வரும்.


அதில் செல்போன் எண் மற்றும் இ.மெயில் முகவரியை பதிவு செய்ததும் எஸ்.எம்.எஸ். மூலம் ஓ.டி.பி. எண் வரும். அந்த ஓ.டி.பி. எண்ணை பதிவு செய்ததும் ‘வை-பை’ இணைப்பு கிடைத்து விடும்.


அதன்பிறகு கூகுள், வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.



இங்கு ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் மட்டுமே ‘வை-பை’ இலவசமாக கிடைக்கும். 20 நிமிடம் முடிந்ததும் தானாகவே இணைய தள இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும்.


தொடர்ந்து கட்டணம் செலுத்தும் பக்கம் செல்போனில் தோன்றும். அதில் 1 மணி நேரம், 2 மணி நேரம் பேக்கேஜ் காண்பிக்கும். அதில் தேவையான பேக் கேஜ்ஜை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கு ரூ.10, ரூ.20 என்ற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.