BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

29 மார்., 2018

ஒரு கணினி ஆசிரியரின் மகன் இந்த உலகை மாற்றினான்!!!!!

ஒரு கணினி ஆசிரியரின் மகன் இந்த உலகை மாற்றினான்!!!!!

ஒரு கணினி ஆசிரியரின் மகன் இந்த உலகை மாற்றினான் - லேரி பேஜை கூகுள் செய்வோம்! 


 சென்னையில்  இருந்து கொண்டு கேப்டவுனில் தண்ணீர் இல்லையென்பது நமக்குத் தெரிகிறது. கிறிஸ்டோபர் நோலனின் இரண்டாவது படம், புத்தாண்டைக் கொண்டாட சிறந்த இடம், பாங்காக்கின் பெஸ்ட் ஹோட்டல், ஃபிரான்ஸின் சிறந்த மாடல்... என நாம் தெரிந்து கொள்ள நினைக்கும்
அனைத்தையும் தன் வழி கொண்டுவந்து இன்று நம் அறிதலின் வாயிலாக இருப்பது கூகுள். ஒரு வகையில் நம்மை சோம்பேறியாக்கி இருந்தாலும், ஒருவரது சிந்தனை இந்த உலகத்தின் வாழ்க்கை முறையையே மாற்ற முடியும் என்பதன் நிகழ்கால உதாரணம் கூகுள்.


                             
கூகுளின் இந்த வெற்றிக்கு இருவர் தான் காரணம், ஒருவர் 'லேரி பேஜ்' மற்றொருவர் 'செர்ஜி பிரின்'. இவர்கள் இருவரும் இல்லையெனில் இந்த கூகுள் என்ற ஒன்றை நாம் பார்த்திருக்கவே மாட்டோம். வேண்டுமானாலும் வேறொரு பெயரில் வேறு யாராவது கண்டுபிடித்திருக்கலாம். தற்போது இவர்கள் தானே கண்டுபிடித்திருக்கிறார்கள்? அதிலும் லேரிக்கு இன்று நாற்பத்தி ஐந்தாவது பிறந்தநாள் வேறு. எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அவரைப் பற்றிய சுவாரசிய தகவல்களை தெரிந்துகொள்வோம்.
கூகுளின் தாய் நிறுவனத்தின் பெயர் அல்ஃபபெட். அந்த நிறுவனத்தை நிறுவிய இருவரில் ஒருவர் லேரி பேஜ். அதுமட்டுமில்லை, இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் (CEO - Chief Executive Officer). சுந்தர் பிச்சையையும் இவரையும் குழப்பி கொள்ளாதீர்கள். சுந்தர் கூகுளுக்கு சிஇஓ, ஆனால் இவரோ அல்ஃபபெட் என்னும் கூகுளின் மேலிடத்துக்கு சிஇஓ.

கூகுள் என்ற வலைதளத்தை இன்று 300 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளில் கூகுளில்  இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட விஷயங்களைத் தேடிப் பார்க்கிறார்கள். இணையத்திலேயே அதிகமாக பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அல்ல, நொடிக்கு நொடி அதிகமாகிறது

லேரி பேஜ்ஜூம் ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சும் நல்ல நண்பர்கள். தொழில் நிமித்தமாகவும் தனிப்பட்ட முறையிலும் இருவருக்கும் நல்ல உறவு இருந்தது என்கின்றனர்.

லேரியின் பெற்றோர்களும் கல்லூரி கணினி ஆசிரியர்களாக இருந்ததால் லேரிக்கும் கணினியின் மீது சிறு வயதிலிருந்தே மோகம் இருந்துள்ளது. போகப் போக அதில் வல்லுனராக வருவார் என்று அன்று யார் கண்டது?

அந்தக் காலகட்டத்தில் அரிதாக இருந்த கணினியை தன் பள்ளிப் படிப்பின் போதே வீட்டில் வைத்து கற்றுக்கொள்ளும் அளவுக்கு இவருக்கு வசதி இருந்தது. பெற்றோரும் கல்லூரி ஆசிரியர்கள் என்பதால் அறிவியல், கணினி சார்ந்த புத்தகங்களையும் வாசிக்க வாய்ப்பிருந்தது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே இன்க்ஜட் பிரின்டரை உருவாக்கியுள்ளார். 'மேஸ் அண்ட்  ப்ளூ' என்ற  சோலார் கார் குழுவில் கல்லூரிப் படிப்பின் போது சேர்ந்து, அந்த சோலார் கார் உருவாக்கத்திற்காக உதவியுள்ளார்.

லேரியும், பிரினும் 1995 ஆண்டில் தான் முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர். முதல் சந்திப்பில் இருந்து, கூகுளை நிறுவியது முதல் தற்போதுவரை அவர்களுக்குள் வாக்குவாதம் என்ற ஒன்று இல்லாமல் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்று சொல்கின்றனர்.   

ஒரு சின்ன குடோனில் ஆரம்பிக்கப்பட்ட இவர்களது நிறுவனம் இன்று உலகமெங்கும் படர்ந்துள்ளது. இவர்கள் முதல் முதலில் வாடகைக்கு எடுத்த குடோன் யாருடையது தெரியுமா? யூ-ட்யூப் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ சூசனுடையது. 

45 வயதாகும் லேரி ஒரு நோய் காரணமாக தன் குரலை சிறிது சிறிதாக இழந்து வருகிறார்.

ஒரு தனி மனிதனின் எண்ணம், கனவு இந்த உலகத்துக்கே பயன்படும், ஒரு நிறுவனம் இந்த உலகின் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் என்று நிறுவி ஆசைகளுக்கு எல்லை எதுவுமில்லை என்று உணர்த்தியிருக்கிறார் லேரி.

பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக "கைசாலா குழு" - வில் இணைய அழைப்பு

பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக "கைசாலா குழு" - வில் இணைய அழைப்பு



நம் பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக கைசாலா குழுவில் எத்தனை ஆசிரியர்கள் வேண்டுமானாலும் இணையலாம் அடிப்படையில்

நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து செயலி தரவிறக்கம் செய்து இணையலாம்.



You are invited to Microsoft Kaizala group:

மற்றும்: கணினி ஆசிரியர்கள் குழு: https://join.kaiza.la/p/3pWHY7goRDGFISsfwfXZkw 





28 மார்., 2018

27 மார்., 2018

புதிய தொழில்நுட்பம், தகவல்களுடன் 1.70 கோடி பாடநூல்கள்: அச்சிடும் பணி தீவிரம்

புதிய தொழில்நுட்பம், தகவல்களுடன் 1.70 கோடி பாடநூல்கள்: அச்சிடும் பணி தீவிரம்
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1,6,9,11 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு புதிய தொழில்நுட்பம், கூடுதல் தகவல்களுடன் 1.70 கோடி பாடநூல்கள் அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தமிழகப் பள்ளிகளில் வரும் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 1,6,9,11 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி கற்றல், கற்பித்தல் பணி நடைபெறவுள்ளது. புதிய பாடநூல்களைத் தயாரிக்கும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டுக்கு ஒருசில மாதங்கள் இருப்பினும் புதிய பாடநூல்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'லேமினேஷன்' செய்ய திட்டம்: இந்த நான்கு வகுப்புகளுக்கு மட்டுமே 100-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1.70 கோடி பாடநூல்கள் அச்சிடப்படவுள்ளன. நல்ல தரம் கொண்ட 80 ஜிஎஸ்எம் தாளில் இவை தயாராகி வருகின்றன. ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் எழில்மிகு வண்ணத்தில் துல்லியமான படங்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகமாகவுள்ள புதிய பாடநூல்களின் அட்டை 230 ஜிஎஸ்எம் தரம் கொண்டது. இது சற்று கடினத்தன்மையுடன் இருக்கும். இருப்பினும் அட்டை கிழிந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் அனைத்து பாடநூல்களுக்கும் 'லேமினேஷன்' (வழவழப்பான காகித பாதுகாப்பு) செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

செல்லிடப்பேசிகளில் ஸ்கேன் செய்து... புத்தகங்களில் உள்ள முக்கியப் பகுதிகளில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் குறித்து, கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள 'க்யூ.ஆர் குறியீடு' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டை 'ஆண்ட்ராய்ட்' வசதி கொண்ட செல்லிடப்பேசி மூலம் ஸ்கேன் செய்து இணையதள லிங்க் மூலம் தொடர்புடைய விஷயங்கள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற முடியும். அதேபோன்று 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான அனைத்துப் பாடநூல்களிலும் பாடங்கள் குறித்த தகவல்களுடன், வேலைவாய்ப்பு, பொதுவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

எப்போது முடிவடையும்? குறைவான பக்கங்களில் பாடநூல்களை தயாரிப்பதால் மட்டுமே மாணவர்களின் சுமையைக் குறைத்து விட முடியாது. பக்கங்களைக் குறைத்தால் எழுத்துகளின் அளவும் மிகச் சிறியதாகிவிடும். அவற்றை மாணவர்கள் படிப்பதற்கு சிரமப்படுவர். இதனால் புதிய பாடநூல்களில் பக்கங்கள் எப்போதும் போலவே இருக்கும்.

புதிய பாடத்திட்ட அடிப்படையிலான நூல்கள் மே மூன்றாவது வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாடத்திட்டம் தவிர்த்து எஞ்சியுள்ள வகுப்புகளுக்கு ஏற்கெனவே உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வகுப்புகள் நடைபெறும் என்பதால் அவற்றுக்கான பாடநூல்கள் தயாரிக்கும் பணி கடந்த டிசம்பர் மாதமே நிறைவுபெற்று விட்டது. அந்த வகுப்புகளுக்காக மொத்தம் 4.5 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக அனைத்துப் புத்தகங்களும் அடுத்த கல்வியாண்டு தொடங்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

26 மார்., 2018

வாட்ஸ்அப் - ல் ஜிஃப் பைல்களைத் தேடும் வசதி

வாட்ஸ்அப் - ல் ஜிஃப் பைல்களைத் தேடும் வசதி


ஃபேஸ்புக் நிறுவனம் இயக்கிவரும் வாட்ஸ்அப் செயலியில் புதிதாக இரண்டு அப்டேட்களை அந்நிறுவனம் சேர்த்துள்ளது.


உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக திகழ்ந்து வரும் வாட்ஸ்அப் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அதன்படி புதிதாக ஜிஃப் பைல்களைத் தேடும் வசதியும், புகைப்படத்துடன் இடத்தைச் சேர்த்து பதிவிடும் வசதியும் வெளியாக உள்ளன. 

பயனர்கள் தங்களுக்கு தேவையான ஜிஃப் பைல்களைத் தேடி அதனை அனுப்பும் வசதியை வாட்ஸ்அப்பில் சோதனை ஓட்டமாகத் தற்போது செயல்படுத்திவரும் ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் அதனை அதிகாரபூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பயனர்கள் ஒரு இடத்தில் இருந்துகொண்டு அதன் தகவல்களை லொக்கேஷன் என்ற வசதி மூலம் பதிவிடும் வசதி இருந்துவருகிறது. அதிலும் தற்போது ஒரு ஸ்டிக்கருடன் பயனர்கள் இருக்கும் இடத்தையும், நேரத்தையும் சேர்த்து பதிவிடும் வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் சோதனை ஓட்டமாக வெளியிட்டுள்ளது.

இதனால் பயனர்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் லொக்கேஷன் வசதியைப் பகிர்ந்துகொள்ள முடியும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி புதிய ஸ்டிக்கர்ஸ்களை வருகிற அப்டேட்டில் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அறிவியல் ஆசிரியர்களுக்கு - ICT4SCIENCE ஆன்ட்ராய்டு செயலி

அறிவியல் ஆசிரியர்களுக்கு - ICT4SCIENCE ஆன்ட்ராய்டு செயலி





அறிவியல் ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி அறிவியலை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து"ICT4SCIENCE" என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

"ICT4SCIENCE" என்னும் இந்த  ANDROIDசெயலி அனைத்து நிலைகளிலும்(ஆரம்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் அறிவியல் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு அறிவியலை  மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.

அனைத்து அறிவியல் ஆசிரியர்களும் "ICT4SCIENCE" என்னும் இந்த  FREE ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்

உலகின் மிகச்சிறிய கணினி விலை 10 ரூபாய்க்கும் குறைவு! அசத்தும் IBM நிறுவனம்

உலகின் மிகச்சிறிய கணினி விலை 10 ரூபாய்க்கும் குறைவு! அசத்தும் IBM நிறுவனம்

தொழில்நுட்பம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய நாம் பயன்படுத்தும் கருவிகளின் உருவ அளவு என்பது குறைந்துகொண்டே செல்கிறது.

 அளவு குறைந்தாலும் அதன் செயல்திறன் என்பது அதிகரிக்கிறது. மக்கள்கூட அதைதான் விரும்புகிறார்கள். எடுத்துக்காட்டாக மொபைலை எடுத்துக்கொண்டால் அது கைக்குள் அடக்கமாக இருக்க வேண்டும், எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான்  மக்களின் விருப்பமாக இருக்கிறது. அதே வேளையில் ஒரு கருவியை எளிதில் சிறியதாக வடிவமைத்து விட முடிவதில்லை. இருந்தாலும் முன்னர் இருந்ததோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இன்றைக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்ப கருவிகள் அனைத்துமே அளவில் சிறியதாக மாறியிருப்பதை உணர முடியும். இந்நிலையில்தான் IBM நிறுவனம் உலகில் மிகச் சிறிய கணினியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

உலகின் மிகச்சிறிய கணினி


கணினிகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அதன் அளவு ஒரு அறையை விடவும் பெரியதாக இருந்தது. அதன் பிறகு பிராஸசர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் படிப்படியாக அதன் அளவு குறைந்ததுடன் மட்டுமின்றி அதன் செயல்திறனும் அதிகரித்தது. ஐபிஎம் நிறுவனம் Think 2018 எனப்படும் தொழில்நுட்ப மாநாட்டை லாஸ் வேகாஸ் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தியது.
அந்த மாநாட்டில் அடுத்த ஐந்து வருடங்களில் மனிதனின்  வாழ்க்கை முறையை மாற்றக்கூடும் என தான் நினைக்கும்  ஐந்து தொழில்நுட்பங்களைப் பற்றி தெரிவித்திருக்கிறது. அந்த ஐந்து தொழில்நுட்பங்களில் ஒன்றாகத்தான் இந்த  கணினியை புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு இந்த கணினியைக் உருவாக்கியிருக்கிறது ஐபிஎம். இந்த கணினியின் அளவு வெறும் 1 மி.மீ என்பதுதான் இதன் சிறப்பே. இதுவரை உருவாக்கப்பட்டதிலும் தற்பொழுது இருப்பவற்றிலும் இதுதான் உலகின் மிகச் சிறிய கணினி. இவ்வளவு சிறியதாக இருந்தாலும் இதற்குள்ளே பல்லாயிரக்கணக்கான ட்ரான்சிஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது

இந்த கணினி கண்காணிப்பு, பகுப்பாய்வு ஆகியவற்றை செய்யும் திறன் கொண்டது, அதோடு இதிலிருக்கும் தகவல்களை வேறு சாதனங்களுடன் பகிர்ந்துகொள்ளவும், மற்ற சாதனங்களோடு தொடர்பு கொள்ளவும்  இதில் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மொத்த அமைப்பிற்கும் இயங்கத் தேவையான மின்சாரத்தை அளிப்பதற்கு சோலார் செல் பயன்படுத்தப்பட்டிக்கிறது. இவ்வளவு சிறியதாக இருந்தாலும் இதன் செயல்திறன் என்பது 1990-களில் வெளியான கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த இன்டெல் நிறுவனத்தின்  x86 என்ற பிராஸசருக்கு இணையாக வேகம் கொண்டிருக்கும். இதன் அளவோடு இப்பொழுது இருக்கும் பிராஸசரோடு ஒப்பிட்டாலும் கூட செயல்திறன் அதிகமாகத்தான்  இருக்கும். அதே வேளையில் இதனை  உருவாகுவதற்கு  10 ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவாகும் என்கிறது ஐபிஎம்

25 மார்., 2018

ஒர் கணினியின் கண்ணீர் கடிதங்கள் !

ஒர் கணினியின் கண்ணீர் கடிதங்கள் !

அறிவியல் ஆசிரியர்களுக்கு கண்ணீரில் கடிதம் எழுதிய கணினி ஆசிரியர்.




📚 அரசுப் பள்ளிகளில் தனிப் பாடமாகுமா #கணினி_அறிவியல் ?? 🖥


  •   அரசுப் பள்ளிகளில் தனிப் பாடமாகுமா #கணினி_அறிவியல் ??  🖥



  •  ஒரு கணினி ஆசிரியரின் குமுறல்  


✍  செய்தி  📰  #தினமணி  (26-03-2018)


🌎  https://m.dailyhunt.in/news/india/tamil/dinamani-epaper-dinamani/arasub+ballikalil+tanib+badamakuma+kanini+ariviyal+-newsid-84368713?listname=topicsList&index=0&topicIndex=0&mode=pwa&s=a&ss=wsp

#TNBEDCSVIPS #TNgovt #TN #TNEducation # #Computer_Science #TNstudents #TNteachers

அரசுப் பள்ளிகளில் தனிப் பாடமாகுமா கணினி அறிவியல் ??

 அரசுப் பள்ளிகளில் தனிப் பாடமாகுமா கணினி அறிவியல் 

24 மார்., 2018

இந்த வருட கல்வி மானிய கோரிக்கையில் "கணினி கல்வி" மீதான விவாதம் நடைபெறுமா என மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்ப்பு..!!

இந்த வருட கல்வி மானிய கோரிக்கையில் "கணினி கல்வி" மீதான விவாதம் நடைபெறுமா என மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்ப்பு..!!

பி.எட்., கணினி ஆசிரியர்கள் கல்வி மானியக் கோரிக்கை எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால், தமிழக அரசு கல்வி மானிய கோரிக்கை நடைபெறும் தேதியை இன்னும் வெளியிடாமல் இருக்கிறது.

பட்ஜெட் மீதான கூட்டத்தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறதா? இல்லை இனிமேல் தான் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதா? எனவும் கணினிக்கல்வி மீதான விவாதம் இந்த பட்ஜெட்டில் நடைபெறுமா? என்ற கேள்விக்குறியில் மாணவர்களும், ஆசிரியர்களும் உள்ளார்கள்.

தமிழகத்தின் பி.எட்., கணினி ஆசிரியர்கள் அனைவரும் இந்த ஆண்டு கல்வி மானிய கோரிக்கையிலாவது தங்களுடைய கோரிக்கை இடம் பெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை "கணினி அறிவியல்" பாடத்தை துணைப்பாடமாக அறிவித்துள்ளீர்கள். ஆனால், கணினி ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்காமல், அறிவியல் ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி கொடுப்பது வேதனைக்குரிய செயலாக உள்ளது.

உதாரணமாக, இந்த வாரம் வெளிவந்த பத்திரிகை செய்தியில் நம்முடைய உயர்கல்வி துறை செயலாளர் கூறியது வேடிக்கைக்கு உரியதாக உள்ளது.

"ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் பொறியியல் படிக்க தகுதியில்லாதவர்கள்" என இதுபோன்று அவர் வெளிப்படையாகக் கூறியது மாணவர்கள் மத்தியில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.


இனிவரும் காலங்களிலாவது ஒரு முறையான பயிற்சியை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்.

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10 வகுப்பு வரை "கணினி அறிவியல்" பாடத்தை ஒரு தனிப்பாடமாகக் கொண்டு வந்து, முறையான கணினி ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும்.

இவண் :-
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்
பதிவு எண் ® 655/2014

மாநில பொருளாளர் ச.கார்த்திக் உயர்திரு சி.சந்திரசேகரன்.MLA சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி அவர்களை நேரில் சந்தித்து கணினி ஆசிரியர்களின் கோரிக்கை மனுவை அளித்தார்…

மாநில பொருளாளர்  ச.கார்த்திக்
உயர்திரு சி.சந்திரசேகரன்.MLA சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி அவர்களை  நேரில் சந்தித்து கணினி ஆசிரியர்களின் கோரிக்கை மனுவை அளித்தார்…

❇👬👭👫கல்வி மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் போது கணினி ஆசிரியர்கள் பற்றி  விவாதிக்க TNBEDCSVIPS சங்கத்தின் சார்பில் மனு வழங்கபட்டது.

❇அரசு பள்ளிகளில் 6-10 வகுப்புகளில் “கணினி அறிவியல்” பாடம் கொண்டுவருவது குறித்த நமது கோரிக்கைகள் பற்றி முதலமைச்சரிடமும், கல்வியமைச்சரிடமும் வலியுறுத்துவதாக உறுதியளித்துள்ளார். இவருடைய ஆக்கப்பூர்வமான அணுகுமுறைக்கு கணினி ஆசிரியர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்…
☑👬👭👬👭அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நமது கணினி ஆசிரியர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளித்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்
💻இவண் :-
🙏தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்
பதிவு எண் ® 655/2014.🙏

23 மார்., 2018

தமிழ் மொழியின் பெருமை.....!

[11:52 PM, 3/23/2018] +91 99445 29446: தமிழ் மொழியின் பெருமை.....!

*  ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப்பெற்று வந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே நம் தாய் மொழியான தமிழ் மொழியின் தொன்மைக்கு சான்று.

*  2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன.

*  2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.

*  2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் ‘நற்றிணை’ என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது.

*  3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாக நம்பப்பெறுகிற நூல்களில் ‘அகத்தியம்’ எனப்படும் இலக்கிய நூல் ஒன்று.

*  3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் ‘தொல்காப்பியம்’ ஒன்றே.

*  உலகில், பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது.

*  இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.

*  வேறு எந்த மொழியையும் பெயராக சூட்டிக் கொள்ள முடியாது தெலுங்கு, ஹிந்தி,....... என்று ஆனால் நம் தாய் மொழியான தமிழை பெயராக சூட்டிக் கொள்ள முடியும் தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ் மாறன்.... என்று.

*  உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.

ஆனால் நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும்.

1.தொன்மை (Antiquity)
2.தனித்தன்மை (Individuality)
3.பொதுமைப் பண்பு (Common Characters)
4.நடுவு நிலைமை (Neutrality)
5.தாய்மைத் தன்மை (Parental Kinship)
6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)
7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)
8.இலக்கிய வளம் (Literary prowess)
9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)
10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)

 தமிழின் பெருமையை சான்றோர்கள், அறிஞர்கள், மேலை நாட்டவர்கள் என பலரும் கூறியவவையாவன:

★  தமிழ்மொழிப் புணர்ச்சிகட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறமாட்டா.
- சிவஞானமுனிவர்

★ நம்மைப் பெற்றதும் தமிழ்; வளர்த்ததும் தமிழ்; நம்மைத் தாலாட்டுத் தூங்க வைத்ததும் தமிழ்... இப்படிப்பட்ட அருமையான மொழியை விட்டுவுட்டுச் சமற்கிருதம் இலத்தீன் முதலிய அயல்மொழியைப் படிக்கிறார்கள். சுற்றத்தார்களை விட்டுவிட்டு அயலாரை நேசம் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். – நயனரசர் வேதநாயகர்

★ தமிழ்மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக அமைந்தது - ஆபிரகாம் பண்டிதர்

★ தமிழ் உயர்தனிச்செம்மொழி – பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாத்திரியார்)

★ தமிழைப்போலும் கொத்துக் கொத்தாய்க் கூடி இயலும் சொற் பரப்பைக் கொண்ட ஒரு மொழி நாம் அறிந்தவற்றுள் வேறின்று. - ஞானப்பிரகாசர்

★ எம்மொழிக்கும் ‘பித்ரு’ மொழி தமிழ் – இராமலிங்க வள்ளலார்

★ “தான் பிறரால் பெறுவதை விட அதிக வெளிச்சத்தைப் பிறருக்கு அளிக்கும் மொழி தமிழ்” - ராபர்ட் கால்டுவெல்

★ "கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி”
-ஐயனாரிதனார்

★ “தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்

★ தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.

★ திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்

தமிழின் பெருமையை உணர்த்தும் சங்க கால நூல்கள்:

@  “ என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”
“ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”
என்றுமுள தென்றமிழ்! – கம்பராமாயணம்

@  "எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் இன்தமிழ்!" -  பெரியபுராணம்.

@  "நல்லதமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்!" – நாலாயிரத் தெய்வியப் பனுவல்

@  "கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ?"
– திருவிளையாடற் புராணம்

@  "கொழி தமிழ்ப் பெருமையை யார் அறிவார்?" - மதுரைக் கலம்பகம்

@ "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்" - தமிழ்விடு தூது.

@  "ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேர் இலாத தமிழ்" -  தண்டியலங்காரம்

@  "ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!"
- மனோன்மணீயம்

@  "அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்" - புறநானூறு

@  "ஆடல் பாடல் இசையே தமிழே" - சிலப்பதிகாரம்

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ(து)
எங்கும் காணோம்!" என்று பாரதியாரும்

"தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்!" என்று பாவேந்தரும் தமிழின் பெருமையை தங்களின் பாடல்கள் மூலம் கூறியுள்ளனர்.

தமிழராய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்..! தமிழின் பெருமையை உணர்வோம்...! தமிழை போற்றி வளர்த்திடுவோம்...!

வாழ்க தமிழ்...!
[11:54 PM, 3/23/2018] +91 99445 29446: வென்றாக வேண்டும் தமிழ்!
அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்!!

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் உலகத் தமிழ்ச் சங்கங்கள் மாநாடு.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

பாவேந்தர் பாரதிதாசனின் கனவே உலகத் தமிழர்கள் கனவு இந்த உன்னதமான கனவு நனவாகிறது உலகத் தமிழர்களே.

தமிழோடு தமிழர்களை ஒன்றிணைக்கும் முதல் மாநாடு.

தமிழுக்காகவும்,தமிழர்க்காகவும் தன்னுயிரை ஈந்த வீர மறவர்களின் தியாகக்கனவை நனவாக்கும் மாநாடு.

ஆகையால் இது பெருமையை பறைசாற்றும் மாநாடு அல்ல! மாறாக தேடலுக்கான மாநாடு.!!

உலகத் தமிழ்ச் சங்கங்களின் மாநாடு 2018 வைகாசி 11,12.13(மே மாதம் 25,26.27) காஞ்சிபுரம்.தமிழ்நாடு.இந்தியா.


தொடர்புக்கு:
உலகத் தமிழ்ச் சங்கங்களின் மாநாடு ஒருங்கிணைப்பாளர்.
வ.சிவா .
+9148548546
+918608572345.
+919551369098.

பொதுத் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது: அமைச்சர் செங்கோட்டையன்


நடைபெற்று வரும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில்,
மாணவர்களுக்கு அத்தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


சென்னை மயிலாப்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துப் பேசினார். அப்போது, குழந்தைகளுக்கு அங்கன்வாடிகளில் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி குழந்தைகள் 5 வயதுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளிலேயே படிப்பைத் தொடரும் வகையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக சில மாணவர்களும், எளிமையாக இருப்பதாக சில மாணவர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து, கல்வித்துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது. அகில இந்திய அளவில் பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர் இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

அசத்தும் காஞ்சிபுர பள்ளி மாணவன்

துணைமுதல்வர், ஆளுநர், பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரை பார்த்தாச்சு - அடுத்து சவூதி மன்னர், அமெரிக்க அதிபருடன் அப்பொய்ண்ட்மென்ட் -  அசத்தும் காஞ்சிபுர பள்ளி மாணவன்


நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சுட்டிருந்த நேரம். வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகும்போதும், பள்ளிக்குப் பக்கத்திலும் சின்னச் சின்ன பசங்க கடைகளில் வேலை செய்யறதைப் பார்ப்பேன். சிலர் ரோட்டோரமா நின்னு கையேந்தி காசு வாங்கிட்டிருப்பாங்க




படிக்கவேண்டிய வயசுல இவங்க வாழ்க்கை எதனால் இப்படி இருக்குனு தோணும். என் வீட்டுக்கே சில பசங்க வருவாங்க. அப்பாவும் அம்மாவும் அவங்களுக்கு ஏதாவது பொருளாக வாங்கிக்கொடுப்பாங்க. 'கொடுக்கும் இடத்தில் நாம் இருக்கும்போது, தேவைப்படுகிறவர்களுக்கு உதவணும். அந்த உதவி, சரியான முறையில் போய்ச்சேரணும்'னு சொல்வாங்க.
அந்த வார்த்தைகள்தான் 'படிக்கமுடியாத ஏழை மாணவர்களுக்கு ஏதாவது செய்யணும்' என்கிற எண்ணத்தை எனக்குள் உருவாக்குச்சு - ஃபசூல் ரகுமானிடமிருந்து நிதானமான குரலில் தெளிவான வார்த்தைகள் வெளிப்படுகிறது
காஞ்சிபுரத்தில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன், ஃபசூல் ரகுமான். இரண்டு வருடங்களுக்கு முன்பு, பிரதமருக்குக் கடிதத்தின் மூலம் அனுப்பிய ஒரு திட்டம், இன்று நாடு முழுவதும் சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 'அசிஸ்டென்ட் ஸ்கூல் பீப்பிள் லீடர் ஆஃப் இந்தியா'வாக தேர்வாகி இருக்கும் ஃபசூல், பத்மஸ்ரீ வழங்கும் சேவா விருதுக்கும் தேர்வாகி இருக்கிறார்

ஒன்பதாம் வகுப்பு முடிக்கப்போகும் சமயத்தில்தான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'டாக்டர் .பி.ஜே அப்துல் கலாம் இலவச சேமிப்புத் திட்டம்' என்ற பெயரில் இந்தியாவில் உள்ள தனியார் பள்ளிகள் உட்பட அரசுப் பள்ளிகள் அனைத்திலும் படிக்கும் மாணவர்களிடம், மாதம் ஒரு ரூபாய் வசூலிக்க வேண்டும்
அதன்மூலம் ஒரு வருடத்துக்கு 798 கோடி ரூபாய் கிடைக்கும். அந்தத் தொகையை ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கல்விக்குப் பயன்படுத்தலாம்' என்று குறிப்பிட்டிருந்தேன். கடிதம் அனுப்பின சில நாள்களிலேயே, கடிதம் கிடைக்கப்பெற்றது எனப் பதில் வந்துச்சு
அதற்குள் என் ஐடியாவை கேள்விப்பட்டு, புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி கூப்பிட்டுப் பாராட்டினார். முதல்வர் நாராயணசாமியும் நேரில் வாழ்த்து தெரிவித்தார். அந்தப் பாராட்டுகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்துச்சு. அப்போதுதான் பிரதமர் அலுவலகத்திலிருந்து மறுபடியும் ஒரு கடிதம் வந்துச்சு. 'மாண்புமிகு பிரதமர் அவர்கள் உங்களோடு பேச விரும்புகிறார். நேரில் வரவும்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாங்க. போன வருஷம் அக்டோபர் 26-ம் தேதி, காலையில் 16 நிமிடங்கள் பிரதமரைச் சந்தித்துப் பேசினேன்
அவரைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி நடந்த அத்தனை செக்யூரிட்டி சிஸ்டத்தையும் பார்த்ததுக்கே உடம்பு நடுங்கிப்போச்சு. ஆனால், பிரதமர் என்னைச் சந்தித்தபோது, ஒரு நண்பர்போல இயல்பாகப் பேசினார். 'உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் குடியரசுத் தலைவரையும் சந்திக்கலாமே'னு ஆங்கிலத்தில் சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருநசு
ஜனவரி 15-ம் தேதி, குடியரசுத் தலைவரை சந்திக்க அப்பாயின்மென்ட் கிடைச்சது. அன்றைக்கு இஸ்ரேல் பிரதமரும் அங்கே வந்திருந்தார். அவரையும் பார்த்துப் பேசினேன். என்னுடைய இந்தத் திட்டத்தை சட்டமாகவே செயல்படுத்தலாம் என குடியரசுத் தலைவர் சொன்னார். நான் நினைச்சுகூட பார்க்கலை
ஜனவரி 16-ம் தேதி சென்னைக்கு வந்துட்டேன். 19-ம் தேதியே, இந்தத் திட்டத்தை லோக் சபாவில் சட்டமாக செயல்படுத்துவதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்துட்டாங்க - பெருமிதப் புன்னகையோடு பேசும் ஃபசூல் முகத்தில், ஆயிரம் சூரியனின் ஒளி
'' அப்துல் கலாம் அவர்கள் தன்னுடைய இறுதி நிகழ்ச்சியில் பேசும்போது, 'எனக்கு ஏழைக் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்பதே ஆசை. பள்ளிக்குச் செல்லமுடியாமல் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு நீங்கள் முன்வர வேண்டும். உங்களில் யாரேனும் அதை நிறைவேற்ற முடியுமா" என்றார்
அதுதான் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்று இந்தியா முழுவதும் அவருடைய ஆசை நிறைவேறியிருக்கு. வரும் மே முதல் வாரம், சவுதி அரேபியாவுக்குப் போறேன். அங்க 13 லட்சம் மாணவர்களை அசம்பிள் பண்றாங்க. அவங்க முன்னாடி பேசப் போறேன். சவுதி மன்னரையும் சந்திக்கிறேன். மே 26-ம் தேதி, ஜெனிவாவில் நடைபெற இருக்கும் கல்வி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்துகொள்கிறேன். அன்றே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கியிருக்காங்க'' என்கிற ஃபசூல் குரலில் இரட்டை உற்சாகம்