BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

26 செப்., 2017

ஓர் கணினியின் கண்ணீர்.... ...

ஓர் கணினியின் கண்ணீர்.... ...
*தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் நியமனத்தின் போது பி.எட்., படித்த கணினி ஆசிரியர்களை மட்டுமே நிரப்ப வேண்டும்..!!*

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி…

மேலும், அதற்காக தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல் பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


கணினி ஆசிரியர்களுக்கு இச்செய்தி மகிழ்வை தந்தது; அடுத்த கணமே கணினி ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக அரசு பள்ளி *அறிவியல் ஆசிரியர்களுக்கு* கணினி பயிற்சி வழங்க முடிவு செய்தது 40,000 கணினி ஆசிரியர்களும் வாழ்வாதாரத்தை இழக்கும் விதமாக அமைந்துள்ளது.

இது எந்த விதத்தில் நியாயம்..?? தமிழுக்கு-தமிழ் ஆசிரியர், ஆங்கிலத்திற்கு-ஆங்கில ஆசிரியர், கணிதத்திற்கு-கணித ஆசிரியர்… என மற்ற பாடங்களுக்கு அந்தந்த துறை சார்ந்த ஆசிரியர்கள் பணியில் இருக்கும்போது கணினி அறிவியலுக்கு கணினி ஆசிரியர்களை நியமனம் செய்யாமல், அறிவியல் ஆசிரியர்களை நியமனம் செய்ய முயற்சிப்பது எந்த விதத்தில் சரியாகும்..??

அரசு பள்ளிகளில் ஆசிரியர் ஆகிவிடலாம், என்ற கனவுகளுடன் கடன்பட்டு பி.எட்., படித்த 40,000-கும் மேற்பட்ட கணினி அறிவியல் பட்டதாரிகளை சபித்துவிட்டது தமிழக அரசு.

*40,000 கணினி ஆசிரியர்கள் வாழ்வில் கண்ணீர் தந்த செய்தி:*

இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கணினி அறிவியல் பாடத்தை அறிவியல் பாடத்துடன் தகவல் தொழில்நுட்ப கல்வியாக இணைத்து வழங்கலாமா அல்லது துணை புத்தகமாக வழங்கலாமா என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

புதிய பாடத்திட்டம் வந்தால், கணினி பாடத்தை நடத்த அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது, பி.எட்., பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.


*தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் நிலை…*

மற்ற பாட ஆசிரியர்களுக்கு இல்லாத ஓர் உயரிய நிலை கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் உண்டு தமிழகத்தில்…

"கடந்த இரண்டு, மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகளுக்கு தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படும்” என்று முக்கிய கட்சிகள் வாக்குறுதிகள் அளித்துள்ளன... இதில், ஆளும் அரசும் அடக்கம்.

ஆனால், ஆட்சிக்கு வந்ததும் வழக்கம்போல எங்களை மறந்துவிடுகிறார்கள். மாநிலம் முழுக்க 39,019 (as on 31-12-2016 RTI Report) பேர் இப்போது பி.எட்., படிப்பை முடித்துவிட்டு அரசு வேலை வழங்கும் என்று நம்பியிருந்த நிலையில் தமிழக அரசின் தொடர் புறக்கணிப்பு எங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மொத்தமாக 39,019 பேரும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவில் 63 முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால் எந்த பலனும் இல்லை. பள்ளிக்கல்வித் துறையிலும் பலமுறை மனு அளித்துள்ளோம். இது *”அரசின் கொள்கைமுடிவு”* என்று கூறிவிட்டு புறக்கணித்துவிடுகிறார்கள்.

எங்களுக்கு வேலை வழங்கக் கூடாது என்பதுதான் அரசின் கொள்கை முடிவா என்றால், அதற்கும் அவர்களிடம் பதில் இல்லை.

தற்போது இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் எங்களின் நிலையை விளக்கி 36-முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். பள்ளி கல்வித்துறையில் உள்ள அனைவருக்கும் மனு கொடுத்தும் இன்று பயினல்லா நிலைக்கு எங்கள் வாழ்வு தள்ளப்படும் நிலையில் உள்ளது.

இதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவா..??

மற்ற பாட ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி தந்து கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தால், அரசின் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் (TNTEU) எதற்காக கணினி அறிவியல் பாடத்திற்கு பி.எட்..??

40,000 கணினி ஆசிரியர்கள் வேலையின்றி தவிக்கும் இந்த சோகத்தில் B.E., படித்தவர்களுக்கு பி.எட்., அங்கீகாரம் கொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

(குறிப்பு : B.E., பாடத்தில் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்து படித்திருந்தாலும் கணினி அறிவியல் பி.எட்., படித்தவர்கள் மட்டும் தான் இதனை பயில முடியும் என்பது கூடுதல் சிறப்பு).

40,000 கணினி ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளில் கூட பணியாற்ற, தகுதியற்ற நிலைக்குக் கொண்டு சென்றதுதான் தமிழக அரசின் சாதனையா..?? இல்லை அரசின் கொள்கை முடிவா..??

*_கணினி அறிவியல் பாடத்தில் பி.எட்., படித்தவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு சலுகைகள்…._*

* தனியார் பள்ளிகளில் கூட பணி வாய்ப்புகள் இல்லை.

* ரூ.7000/- சம்பளம் வாங்கும் சிறப்பு/பகுதி நேர ஆசிரியர் பணி கூட மறுக்கப்பட்ட அவலம்.

* ஆசிரியர்கள் தேர்வில் (TET, TRB) கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து புறக்கணிப்பு.

* AEEO, DEO தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளோம்.

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகும் கணினி அறிவியல் பாடத்திற்கு, பி.எட்., கணினி ஆசிரியர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்!!

வெ. குமரேசன்,
மாநில பொதுச் செயலாளர்,
*9626545446*
*தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்*பதிவு எண் ®655/2014.

புதிய பாடத்திட்டத்தில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கட்டாயமாகும் கணினி அறிவியல்* பாடத்திற்கு பி.எட்., பயின்ற கணினி அறிவியல் பட்டதாரிகளை பணி நியமனம் செய்யக்கோரி முதல்வர் தனிப்பிரிவில் (CM Special Cell)_* மனு






புதிய பாடத்திட்டத்தில் 3-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கட்டாயமாகும் கணினி அறிவியல்* பாடத்திற்கு பி.எட்., பயின்ற கணினி அறிவியல் பட்டதாரிகளை பணி நியமனம் செய்யக்கோரி முதல்வர் தனிப்பிரிவில் (CM Special Cell)_* மனு


 
நன்றி,
திரு.வெ.குமரேசன்,*
9626545446
மாநில பொதுச்செயலாளர்

23 செப்., 2017

ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்விக்கு தெரியுமா?


*ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்விக்கு தெரியுமா?*
ஒலிம்பியாட்ஸ்,கல்வித் திறனையும் சந்தேகத்துக்கிடமில்லாத அறிவுக்கூர்மையையும் உணர்த்துகிறது. மாணவர்களிடையே இப்படிப்பட்டத் திறன்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்தியாவில் பின்வரும் ஒலிம்பியாட்கள் உள்ளன.
*தேசிய சைபர் ஒலிம்பியாட்*


தேசிய தகவல் தொழில் நுட்ப ஒலிம்பியாட் என்பதுதான் நாட்டின் இப்படிப்பட்ட ஒலிம்பியாட் வகைகளில் முதலானது. இளைய சமுதாயத்தினரிடையே திறமை வாய்ந்தவர்களை அடையாளம் கண்டுகொள்ள தேசிய அளவில் நடத்தப்படும் திறன் தேடல் போட்டி இது. சவாலை எதிர்கொள்ளும் உணர்வையும், போட்டி உணர்வையும் இளைய சமுதாயத்தினரிடையே கொண்டுவந்து, கம்ப்யூட்டரைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டப்பட்ட பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும் கணினியைத் தங்கள் வருங்கால வாழ்வாதாரமாக அமைத்துக்கொள்ள அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தகுதி
சிபிஎஸ்சி/ஐசிஎஸ்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 3ஆம் வகுப்பிலி்ருந்து 12ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் இந்த தேசிய சைபர் ஒலிம்பியாட் தேர்வுகளில் கலந்துகொளளலாம்.9ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு மாணவர்கள் தங்கள் வருங்கால தொழிலாக கலை, வணிகவியல், விஞ்ஞானம் இவற்றைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்தத் தேர்வுகளில் பங்கேற்பது அவசியம். ஏனெனில் இந்தப் போட்டிகளின் நோக்கமே மாணவர்களின் கம்ப்யூட்டர் திறன்களை சோதிப்பது

மாண்புமிகு தமிழக அரசு வேலையின்றி தவிக்கும் 40000கணினி அறிவியல் பி.எட் ஆசிரியர்களுக்கு மருத்துவ பயிற்சி வழங்க வேண்டும்?




மாண்புமிகு தமிழக அரசு வேலையின்றி தவிக்கும் 40000கணினி அறிவியல் பி.எட் ஆசிரியர்களுக்கு மருத்துவ பயிற்சி வழங்க வேண்டும்?


கணினி ஆசிரியர் நண்பர்களே,

    

             கணினி ஆசிரியர் நண்பர்களே, எனது உறவினர் அறிவியல் ஆசிரியர் , செய்திதாளில் வந்த அறிவியலில் ஒரு பகுதியாக வர உள்ள கணினி பாடத்தை நடத்த அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் செய்தி அறிவியல் ஆசிரியர்களுக்கு எப்படியோ தெரியவந்துள்ளது, அதற்கு அறிவியல் ஆசிரியர்கள் மிகுந்த கோபத்துடன் விமர்சனம் செய்துள்ளார்களாம். கணினி பயிற்சி கொடுத்தாலும் அதை கற்றுக் கொள்ள விருப்பம் இல்லையாம் அறிவியல் ஆசிரியர்களுக்கு, மேலும் கணினி நிரல் ( programs), மற்றும் நடத்தினாலும் புரிய வாய்ப்பு இல்லை என்று அறிவியல் ஆசிரியர்கள் கூறுகின்றார்களாம். ஆகவே நான் எனது முயற்சியில், எனது உறவினர் 

அவர்களிடம் ஆசிரியர் கூட்டம் நடைபெறும்போது உங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன், நிச்சயமாக செய்வதாக கூறியுள்ளார். மேலும் கணினி ஆசிரியர்கள் 40,000 மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதால் அவர்களை வைத்து அறிவியலில் ஒரு பகுதியாக வர உள்ள கணினி பாடத்தை நடத்த கோரிக்கை வைக்க ஆசிரியர்கள் கூட்டத்தில் கூற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

மேலும் எனக்கு தெரிந்த அறிவியல் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு அறிவியல் ஆசிரியர் அவர்களிடம் இந்த செய்தியை பற்றி கூறி எதிர்ப்பு தெரிவிக்க கோரிக்கை வைக்க உள்ளேன். ஆகவே நீங்களும் உங்கள் முயற்சியை செய்யுங்கள்.

கோரிக்கை மனு


          



             கிருஷ்ணகிரியில் இன்று நடைபெறுகின்ற எம்ஜிஆர் 100 ஆண்டு விழாவில் நமது சங்கத்தின் கோரிக்கை மனுவை முதல்வரிடம் கொடுக்க முடியாதலால் அவரின் PA அவர்களிடம் கொடுக்கப்பட்டது ... *

விழாவின்ஏற்பாடு_

எம்.சரவணன் மாநிலகொள்கைபரப்புச் செயளாலர்.


R.ஸ்வர்ணராணி
மாவட்ட மகளீர் அணி செயலாளர்
மற்றும்
M.சதீஷ்  ஒருங்கினைப்பாளர். கிருஷ்ணகிரி .

இவர்கள் இருவர் தலைமையில் வழங்கப்பட்டது...


இவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக மனதார   வாழ்த்துகள்

19 செப்., 2017





மனு விபரம்:
ஒன்றாம் வகுப்பிலிருந்து கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டி மனு அளித்தோம் ..

 தமிழக அரசாங்கம் முதன் முறையாக ஏற்க்கபட்டது என்ற இனிமையான செய்தியை தந்துள்ளது 40000கணினி ஆசிரியர்கள் வாழ்வில் ஒளியேற்றும் பதிலை தந்த தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.. 

*நிகழ்வு தலைமை:*
20/7/2017:

*தலைமை செயலகம்:*
வெ.குமரேசன்,மாநிலப் பொதுச்செயலாளர் ,
திருமதி ஜமுனாராணி  வேலூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்,
திரு டேவிட் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்..

*பள்ளிக்கல்வி இயக்கம்:*
திரு ச.கார்த்திக் மாநிலப் பொருளாளர்,
திரு வேலு மாநில அமைப்பாளர்,
திருமதி ஹேமாராணி சென்னை மாவட்டச் செயலாளர்.

18 செப்., 2017

TNBEDCSVIP: பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள்...

TNBEDCSVIP: பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள்...: பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள் கருத்து கேட்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் பாடத்திட்டத்தில்...

பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள் கருத்து கேட்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள் கருத்து கேட்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவம்பரில் மக்கள் கருத்து கேட்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | ‘பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அவை நவம்பர் மாதம் வெளியிடப்படும். அதன் பிறகு, கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும்’ என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த விழாவில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என ஜெயலலிதா கனவு கண்டார். அதை கல்வி மூலம் செயல்படுத்த முடியும் என்பதால், பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பணி அடுத்த மாதம் 15-ம் தேதி தொடங்கும். இந்த பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினமும் 3 மணி நேரம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும். நீட் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணி அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிவடையும். பாடதிட்டம் மாற்றம் மூலம், கல்வி கற்கும் அனைவருக்கும் வேலை வழங்கும் உத்தரவாதத்தை கொடுக்க முடியும். பாடத்திட்டம் மாற்றம் செய்வதற்கு முன் அந்த பாடங்கள் நவம்பரில் வெளியிடப்படும். கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டு தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும். மலேசியாவில் தமிழ் கற்றுகொடுப்பதற்கு ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. வேறு எந்த நாட்டிலும் தமிழ்மொழியை கற்றுக்கொடுக்கவும் இந்த அரசு தயாராக இருக்கிறது. டெல்லியில் 7 தமிழ் பள்ளிகள் உள்ளன. இன்னும் 1 பள்ளி தொடங்க ரூ.5 கோடியை வழங்க அரசு தயாராக உள்ளது என்றார்.

10 செப்., 2017

தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க, ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி 40000ஆயிரம்..

தமிழக புதிய பாடத் திட்டத்தில், அமெரிக்க, ஜெர்மனியின் தொழில்நுட்ப கல்வியை சேர்க்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 14 ஆண்டு களாக மாற்றப்படாத,பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் உட்பட, அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டத்தையும் மாற்ற, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.


மதிப்புமிகு செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், உயர்மட்ட மற்றும் கலைத்திட்ட குழுக்கள் அமைத்து, பாடத்திட்டத்தை புதுமைப்படுத்தும் பணி துவங்கி உள்ளது. இதற்காக, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், அனந்த கிருஷ்ணன் தலைமையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளியை ஒருங்கிணைப்பாளராக நியமித்து, பாடத்திட்ட பணிகள் நடந்து வருகின்றன


மாநிலம் முழுவதும், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்பு கூட்டம், ஆலோசனை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துக்களை பெற, பள்ளிகளில் கருத்தறியும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.பாடத்திட்ட மாற்றத்திற்காக, புதிய இணையதளமும் விரைவில் துவங்கப்பட உள்ளது.இந்நிலையில், புதிய பாடத்திட்டம் குறித்து, சர்வதேச, தேசிய அளவிலான பல்வேறு பாடத்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள முக்கிய அம்சங்கள் தொகுக்கப்பட்டு, புதிய பாடத்திட்டங்கள் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.
இதில், அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளின், தொழில்நுட்ப கல்வியை இடம்பெற வைக்கலாம் என, கல்விக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். கணினி அறிவியல், தகவல் தொடர்பு, அடிப்படை மின்னணு தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் போன்ற அம்சங்கள், வெளிநாடுகளின் பள்ளி பாடத் திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.

இந்த பாடங்கள், தமிழக பாடத்திட்டத்திலும் இடம் பெற உள்ளன. இதன் மூலம், தமிழக புதிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், பிளஸ் 2 முடிக்கும் முன், என்ஜினியரீங், அடிப்படை பாடத்தை தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.


புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்திற்க்கு முக்கியத்துவம் தந்து 6ம் வகுப்பிலிருந்து கொண்டுவருதனால்

அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அமையும்,இதில் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்ற 40000கணினி ஆசிரியர்களுக்கும் வாய்ப்பை அமைத்து தரவேண்டும் மாண்புமிகு தமிழக அரசு..


செல்வி ராங்கநாயகி,
மாநில மகளிர் அணி தலைவி ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

9 செப்., 2017

கணினிஆசிரியர்கள் சோகங்களை கண்ணீரில் பாடும் தோழர்



 கணினி ஆசிரியர்கள் சோகங்களை கண்ணீரில் பாடும் தோழர்!! 🎼  *#Dhinesh*

8 செப்., 2017




 News Today  08.09.2017

                 6029 கணினி பணியிடங்களை கணினி அறிவியலில் பி.எட் படித்தோர் மட்டுமே கொண்டு நிரப்புவதற்கு சங்கத்தின் சார்பில்  அனைத்து ஏற்பாடுகளும் நடைபெரும்

Description: 💻Description: 💻Description: 💻Description: 💻Description: 💻Description: 💻Description: 💻Description: 💻Description: 💻Description: 💻Description: 💻
மாநிலத் தலைவர் பொறுப்புக்கள் அனைத்தையும்
Description: 💐Description: 💐Description: 💐Description: 💐Description: 💐Description: 💐Description: 💐Description: 💐Description: 💐Description: 💐Description: 💐
நமது சங்கத்தின் 
மாநில சிறப்புத்தலைவர் திரு கோவிந்தன் அவர்களும் மாநில மகளிர் அணித் தலைவி செல்வி ராங்கநாயகி அவர்களும் மேற்ப்பார்வையின் கீழும் தலைமையிலும் இனி நடைபெறும்..
Description: 🙏Description: 🙏Description: 🙏Description: 🙏Description: 🙏Description: 🙏Description: 🙏Description: 🙏Description: 🙏Description: 🙏Description: 🙏
அவர்கள் பணி சிறக்க வாழத்துக்கள்...



 இன்று உலக எழுத்தறிவு தினம் (ஆகஸ்ட் – 08)  

‍  *International Literacy Day @  _August 08_*  


             கல்வியை மேம்படுத்தத் தயங்கும் இந்த இருட்டு ஜனநாயகத்தில் எஞ்சியுள்ள மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சமகால நீதியை மீட்டெடுக்க அனைவரும் பாடுபடுவோம்


 கணினியின் பயன்பாடும், அதி நவீன தொழில்நுட்ப திறனும் இன்றைய உலகை ஆக்கிரமித்து இருக்கும் இந்த காலகட்டத்தில் எந்தவொரு நாடும் தனது மக்கள்எழுத்தறிவில் பின் தள்ளப்பட்டுள்ளனர்என்று கூறுவதற்கு வெட்கப்பட்டே ஆக வேண்டும்!!  



           உலக ஜனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா சர்வதேச கல்வித்தரத்தில் இன்னும் கடைசி இடத்தில்தான் உள்ளது  


  அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை தூக்கி எறிந்துவிட்டு பள்ளிக்கல்வியில் கணினிக்கல்வி, ரோபோடிக்ஸ், டிஜிட்டல், தகவல்-தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு *(AI)*, இணையம் போன்ற அதி நவீன பாடப்பிரிவுகளை அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும்



 போராளி```TNBEDCSvips```