BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

1 செப்., 2017




பத்திரிகை / தெலைக்காட்சி செய்தி:

             மதிப்புமிகு பத்திரிக்கை/தொலைக்காட்சி ஆசிரியர்/நிருபர் அவர்களுக்கு :
தனியார் பள்ளிகளுக்கு மேலாகதமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க!
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய, மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் "ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை" கணினி அறிவியல் பாடத்தை கட்டாயக் பாடமாக கொண்டுவர வேண்டும். தனியார் பள்ளி, மெட்ரிக், CBSE பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலே கணினி அறிவியல் பாடம் உள்ளது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் அரசு பள்ளிகளில் கணினி கல்வி கட்டாய பாடமாக உள்ளது. கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற கணிதம், அறிவியல் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகம் தகவல் தொழில் நுட்பத்தில் இன்று பல புரட்சி செய்து வந்த போதிலும் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தராதது வேதனைக்குறியது.
சமச்சீர் கல்வியில் அச்சிடப்பட்ட  50இலட்சம் கணினி அறிவியல் பாட புத்தகம் எங்கே!
2011-ல் சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி அதற்காக அச்சிடப்பட்ட 6ம் வகுப்பு முதல் 10ம் வரை சுமார் 50லட்சம் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளன கணினி அறிவியல் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டிலே வழங்கி கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைபடுத்த வேண்டும்.
பதினொரு ஆண்டுகளாக கணினி பாடப்பிரிவும் இல்லை...
2006 ஆம் ஆண்டிலிருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை. உலகம் கணினிமயமாக வளர்ந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் கணினி கல்வி மாணவர்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து கணினி அறிவியல் பாடப்பிரிவை கொண்டுவரவேண்டும்.

கணினி பாடப்பிரிவு இருந்தும் ஆசிரியர்கள் இல்லை:
மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

கணினி ஆசிரியர்கள் பணியை தனியாருக்கு ஏலம் விடாதீர்:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு 39019ஆசிரியர்கள்காத்திருக்கின்றோம். தமிழக அரசால் நடத்தப்படும் எந்தவொரு ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் எங்களை அனுமதிப்பதில்லை. கணினி ஆசிரியர் நியமனம் என்பது தனியாருக்கு ஏலம் விடாமல் தமிழக அரசின் மூலம் நேரடியாக ஆசிரியர் நியமனம் நடைபெற வேண்டும். அரசு பள்ளியில்கணினி அறிவியல் பாடத்தை பயிற்றுவிக்க ஒப்பந்த ஊழியர்களை தேர்வு செய்யாமல் தகுதிவாய்ந்த பி.எட். பட்டதாரிகளை தமிழக அரசு பணிநியமனம் செய்திட வேண்டும்..!! 

மத்திய அரசு கணினி கல்விக்காக கொடுக்கும் நிதியை  வீணாகாதீர்:
மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கியும் மாநில அரசு கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தாமல் காலம் கடத்தி வருகிறது தமிழக அரசு.

மத்தியஅரசின் திட்டத்தின் கீழ்:
புதிய கல்விக் கொள்கை ,டிஜிட்டல் இந்தியா, SSA, RMSA திட்டத்தில் ஆரம்பப்பள்ளி முதலே கட்டாயப்பாடமாக அறிவிக்க வேண்டும். 
கணினிஆய்வகங்கள்இல்லா அரசு பள்ளி...!
27இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி தமிழகஅரசு 20கணிப்பொறிகளை கொண்ட ஆய்வகங்கள் அமைத்து தரவில்லை ஏன்?
அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பதை வரவேற்கிறோம் ஆனால் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று இரண்டு மாணவர்களுக்காவது கற்றுக் கொடுத்தீர்களா?  
தற்போது வரை அரசு பள்ளிகளில் முறையான ஆய்வகங்கள் இல்லை. தமிழக அரசு பள்ளியின் தரம் உயர 20முதல் 50வரை கணிப்பொறிகளை கொண்ட அதிநவீன ஆய்வகங்கள் அமைத்து தர வேண்டும்.
(கணிப்பொறி ஆய்வகங்கள் இல்லாத தனியார் பள்ளிகளும் உண்டா?)



நடுத்தெருவில் தத்தளிக்கும் 40,000 பி.எட் கணினி ஆசிரியர்கள்!!!
1992 ஆம் ஆண்டிலிருந்து 2015 டிசம்பர்வரை 40000பேருக்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் உள்ளனர். அனைவரும் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றோம். நாங்கள் பெற்ற பட்டம் இன்று பயன் இல்லாமல் நாங்கள் வறுமையில் வாடுகின்றோம்.
1) TET, TRB போன்ற ஆசிரியர் தேர்வு இல்லை.
2) AEEO, DEO தேர்வுக்கு அடிப்படை கல்வி பி.எட் ஆனால் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்ற எங்களுக்கு அதிலும் வாய்ப்பு இல்லை.
3) உடற்கல்வி,ஓவியம்,தையல்,கணினி ஆகிய "தொழிற்கல்வி" பாடங்களுக்கான "சிறப்பாசிரியர்" நியமனத்தில்கூட கணினி அறிவியல் பி.எட் படித்த பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டனர். இந்த ஆசிரியர் பணியிலும் கூட எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை ..

"கணினி  அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான கிராமப்புற அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக